FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 30, 2015, 10:42:58 PM
-
இட்லி மாவு போண்டா
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11914029_1490933187870818_1445452983346724979_n.jpg?oh=516edbb723a6f3f9c72c07a18b794ec7&oe=567C156C)
இட்லி மாவு – ஒன்றரை கப்
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – அரை மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
கடலை மாவு – அரை கப்
தேங்காய் துருவல் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவுடன் கடலை மாவு, தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
போண்டா மொறுமொறுப்பாக வருவதற்கு மாவுடன் அரிசி மாவு சேர்த்து, வடை மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை கையால் சிறு சிறு உருண்டையாக போட்டு பொரிக்கவும்.
போண்டா பொன்னிறமாக பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய இட்லி மாவு போண்டா தயார்.