FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 30, 2015, 10:38:48 PM

Title: ~ கூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை ~
Post by: MysteRy on August 30, 2015, 10:38:48 PM
கூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11952053_1490932884537515_9127196697352622681_n.jpg?oh=941cbccfda3b930b628a2a249b09090a&oe=566A3CAB)

சீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து உபயோகித்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.

செம்பருத்தி நன்றாக இடித்து இதை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி விட வேண்டும் பிறகு தினந்தோறும் தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் நின்று விடும்.

சீயக்காயுடன், வெந்தயம், பச்சரிசி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, ஆரஞ்சு பழத்தோல், கறிவேப்பிலை இவற்றை அரைத்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கலாம்.

முட்டை, நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு இவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடிக்கு புரோட்டீன் சத்து கிடைக்கும்.

பேன் தொல்லை இருப்பவர்கள் இரவு உறங்கும் போது வேப்பிலையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்கவும். பேன்கள் தலையில் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

வாரம் ஒரு முறை தயிரைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்ணத்தைக் குறைத்து முடி வளர்வதற்கு உதவுகிறது.

நல்லெண்ணெயில் அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழிந்து அதைத் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை குறைந்து விடும்.

கரிசிலாங்கண்ணி இலையை அரைத்து அதை தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி கருமையாகவும் நீண்டும் வளரும்.

மாதத்திற்கு இரண்டு முறை முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

தலை குளித்து விட்டு வரும் போது கடைசியில் எலுமிச்சைச்சாறு நீரில் கலந்து கூந்தலை அலசினால் முடி உதிர்தல் நின்று விடும்.

முடி நன்றாக வளர தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து அதில் பிரியும் எண்ணெயை எடுத்து தலைக்கு தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.