(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-ghBcSlPI-gc%2FVd1tjiRAZkI%2FAAAAAAAAPeM%2FGSJU2E2iwrA%2Fs1600%2F333.jpg&hash=f9929030de51ceeda7b5769ba1433d4cd9fd894f)
சாப்பிட அமர்ந்தாலே, சிப்ஸ், ஸ்நாக்ஸ், வத்தல் எனப் பலருக்கும் ஏதாவது ஒரு சைடுடிஷ் தேவைப்படுகிறது. சாம்பார், ரசம், பருப்பு, பொரியல், கூட்டு, பச்சடி, பப்படம் என சகலமும் இருந்தால்தான், அது சமச்சீரான உணவாக இருக்கும். உடலுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் கிடைக்கும். பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் வீட்டில் சமையல் என்பதே ஏதாவது ஒரு குழம்பு, பொரியல் செய்வதுடன் முடிந்துவிடுகிறது. இதனால், உடலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
சிப்ஸ், மிக்ஸர், நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, வீட்டிலேயே மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய துவையலைச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, போதிய சத்துக்களும் கிடைக்கும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F09%2Fmdaymu%2Fimages%2Fp69c.jpg&hash=e2c202a68c426eae513ab447ee06e72ffccab272)
காய்கறி, கீரை, மூலிகைகள் என எல்லாவற்றிலும் செய்யக்கூடிய துவையல் வகைகளை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சில துவையல்களை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா எனச் சிற்றுண்டிகளுக்கு சைடுடிஷ்ஷாகவும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு துவையல் இருந்தால், தயிர்சாதம்கூட தேவாமிர்தமாக இருக்கும்.
இதில் சில ரெசிப்பிகளில் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, காயவைத்து, பொடித்து, பருப்புப் பொடி, தேங்காய்ப் பொடி எனப் பொடி வகைகளாகவும் மாற்றலாம். காயவைக்காமல் தண்ணீர் சேர்த்து அரைத்தால், துவையல். அரைத்துக் குழையவைத்துக் கூட்டாகவும் மாற்றலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F09%2Fmdaymu%2Fimages%2Fp69b.jpg&hash=863aec8ec124e8de0227e88cde534f9416146145)
இப்படி, பல்வேறு சுவைகளில் சத்துக்களை அள்ளித் தரும் இந்த ரெசிப்பிகளை தினமும் ஒன்று எனச் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சமையல் நிபுணர் லட்சுமி ஶ்ரீனிவாசன், ரெசிப்பிகளைச் சுவைபடச் செய்துகாட்ட, அதன் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பிரியங்கா.