FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on August 26, 2015, 01:06:02 AM
-
தேவையான நேரத்தில்
காட்டப்படாத அன்பு பின்பு
ஆயிரம் ஆண்டுகள்
தொடர்ந்து வந்தாலும்
அது அர்த்தமற்றதாய் தான் போகும்
-
நான் எவ்வளவோ நண்பர்கள் கூட..
பழகிருக்கிறேன் அதில் உன்முகம் தான்..
எனை வதைக்கிறது அன்பே.....!
அது ஏன் என்று தான் என்னால்
உணர முடியவில்லை Huh?
என் மனதை மட்டும் அல்ல...
என் இதயத்தையும் திருடியவள்
நீயோ என Huh?
சிந்திக்க வைத்த தேவதை நீதானோ..
என விடை தெரியாமல்
தவித்து கொண்டிருக்கின்றேன்....... !
-
உலக அழகியானது
உன் வீட்டு கண்ணாடி..!!
நீ முகம் கழுவிய நொடிகளில்
சிதறிய சிரிப்புகளையும்,
கிள்ளிய முகபருக்களையும்,
வெக்கத்தின் பிம்பங்களையும்,
உன் அனுமதியின்றி திருடி
தன்னை அழகியாக்கி விட்டது..!!
நீயோ சத்தமில்லாமல்,
அடுத்த உலக அழகியை
உருவாக்க போய்விட்டாய்..!!!
-
மழைச்சாரல் எப்போது தூவும் என்று மேகத்துக்கு தான் தெரியும்.
நீ காதலிப்பது எனக்கு மட்டும் தான் புரியும் உனது காதல் நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்
வானத்தில் மழைக்காக நகர்கிறது மேகம்
என் வாழ்கையில் சந்தோஷத்துக்கு உதவுவது உன் முகம் .!
ஓட்டபந்தயத்தில் வெற்றிக்கு தேவை வேகம்…
ஒட்ட்ருமையாய் நீயும் நானும் இருந்தால் நம் வழ்கைக்கைக்கே சுகம்..!
-
ஒரூ இதயத்தை உண்மையாக நேசித்துப்பார்,
ஆயிரம் இதயங்கள் உன்
அருகில் இருந்தாலும்,
உன் கண்கள் நீ நேசிக்கும்
இதயத்தை மட்டும்
தேடும் !!!
-
கண் படக் கூடுமடி காதலியே உன்
கன்னத்தில் பொட்டு வைத்துக் கொள்
காதல் நினைவை தூது விட்டேன்
காற்றில் வந்தது கருவண்டு......!
ரோஜாப் பூவில் அமர்ந்து கொண்டு
ரீங்காரத்தை மெல்ல இசைக்கக் கண்டு
வழியும் வியர்வையை வண்ணப் பெண்ணே - உன்
விரலால் மெல்ல சுண்டுகிறாய்
கன்னத்தில் வைத்த கண்மையும்
காதலி உன் விரல் நுனி கருவண்டாம் ....!
கொஞ்சம் மோதவிடு என் மீசை நரைக்கும்
குஷியாய் இளமை திரும்பட்டுமே....!!