FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on October 16, 2011, 03:09:43 PM
		
			
			- 
				                                நிழல் படம் எண் : 003
இந்த களத்தின்  நிழல் படத்தை gab  கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய பாசத்திற்க்கு     உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
           (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F003.jpg&hash=676b9e0501c59bdc0d8e5ed939924a1b17868a71)
			 
			
			- 
				சேய்
நான் வளர்ந்த பிறகு
நான் செய்யும் குறும்புகளுக்கு
இப்படித் தானே 
என் கன்னத்தை கிள்ளப் போகிறாய்
அதற்கு பரிகாரமாக
இப்போதே நான் உன்னை
கிள்ளிக் கொள்கிறேன்
தாய்
பஞ்சுக் கன்னத்தை
பிஞ்சு விரல்கள் கிள்ளும் போது
வலித்திடுமோ என்ன?
நீ கிள்ளும் போது 
துள்ளுதடி என் இதயம்
நீ வயிற்றில் உதைத்த போது 
வலிக்கவில்லை எனக்கு
கிள்ளினால் மட்டும்
வலித்திடுமா என்ன?
இன்னொரு ஜென்மம் வேண்டும்
அதிலும் நீ என் மகளாக பிறக்க வேண்டும்
சேய்
இல்லை இல்லை
இன்னொரு ஜென்மம் 
இருக்குமென்றால்
நான் தாயாக 
நீ சேயாக பிறக்க வேண்டும்
அம்மா என்ற அமுத மொழியை
நீ கூற நான் கேட்க வேண்டும்
நீ எனக்கு 
பாலுடன் சேர்த்து ஊட்டிய அன்பை
நான் உனக்கு தர வேண்டும்
நீ பிழை செய்தால்
இதே போல
நான் உன் கன்னத்தை
கிள்ள வேண்டும்
			 
			
			- 
				கன்னத்தை வலிக்காமல் கிள்ள
எல்லோராலும் முடியும்
ஆனால் வெகுளித்தனமான பாசத்தோடு கிள்ள
சிறு குழந்தையால் மட்டுமே முடியும்...
குழந்தையின் தூய்மையான பாசத்தை உணர
தாயால் மட்டுமே முடியும்
அந்த குழந்தையை ஒழுக்கமுடையவனாக வளர்க்கவும்
தாயால் மட்டுமே முடியும்...
தாயின் அன்பிற்கு இணையாக
இந்த பூமியில் இல்லை வேறொரு அன்பு
தாயின் பாதத்தில் சொர்க்கம் உள்ளது!
தாயை பாதுகாப்பதில் உள்ளது
நாம் சொர்க்கம் செல்வது...!
			 
			
			- 
				என் பஞ்சு கைகளால் இந்த தண்டனை
எதற்கிந்த தண்டனை தெரியுமா??
உன் கருவறையில் உன்னை உதைத்தபோது
வெறுக்காமல் விரும்பினாயல்லவா அதற்கு,
நீ உண்ட உணவை உன் தொப்புள்கொடி மூலம்
நான் களவாடியதை கண்டு மகிழ்ந்தாயல்லவா அதற்கு,
300  நாட்கள் என்னை இருட்டறையில் வைத்து
என்னை சுமந்தாயல்லவா அதற்கு,
எனக்கு இவ்வுலகம் காட்ட நீ உயிர் போகும்
வழியை அனுபவிதாயல்லவா அதற்கு,
இவ்வுலகில் நான் உண்ண உணவில்லை என
உன் உதிரத்தை உணவாகினயல்லவா அதற்கு,
உன்னை உறங்க விடாமல் நான் அழுதபோதும்
என்னை அடிக்காமல் தூக்கி உட்சிமுகர்ந்தாயல்லவா அதற்கு,
என் அர்த்தமற்ற மொழிக்கும்
புது புது அர்த்தம் கொடுத்தமைக்கு,
நான் செய்யும் அனைத்தையும்
ரசிக்கிரயல்லவா அதற்கு
நான் செய்யும் தவறை
மன்னித்து ரசிக்கிரயல்லவா அதற்காகத்தான்
இத்தனை தவறை செய்த உன்னை
என் பஞ்சு கைகளால் தண்டிப்பது சரிதானே !!!
			 
			
			- 
				வலித்தும் வலிக்கவில்லை 
உன் தீண்டல் 
வயிற்றில் வந்த போதே 
வரம் என்று 
உன்னால் கிடைத்த 
வலிகளை வரமாக சுமந்தவள் ..
ஐயிரண்டு திங்கள் சுமந்து 
அரை நாள் மேல் வலி கண்டு 
அவசர சிகிச்சையாகி 
அன்றே இறந்து பிறந்து 
அகிலத்துக்கு உன்னை 
ஈன்ற போதே அனைத்து 
வலிகளும் மறந்ததடி..
அம்மா என்ற உன் அழைப்பில் 
அன்று பட்ட வலிகளே மறக்கும் போது
இன்று நீ உன் செல்ல கையால் 
சிறு கிள்ளல் செய்வது வலித்திடுமா  என்ன ?
வலிகளை வரமாக சுமக்க 
வல்ல இவ்வுலகில் 
தாயன்றி யாரால் முடியும் ....
தாங்குவேன் கண்ணே 
உன் தளிர் கரம் மலர் கரமாகி 
மனை புகுந்து ...
இந்த மரமும் மண்ணில் சாயும் வரை 
உன் வலிகளை கூட 
என் வலிகளாக்கி 
வாழ்ந்துடுவேன் உனக்காய் என்றும் ..
அம்மா என்னும் உன் ஒற்றை சொல்லுக்காய் ...
உனக்கும் வலிக்குமென்று 
ஒருமுறையாவது சொல்லி இருந்தால் 
உனக்கு வலிகளை தர அன்றே மறந்திருப்பேன்..
வலிகளை வரமாக சுமக்கும் உனக்கு 
என் கொஞ்சலை கோர்வையாக தருகிறேன் 
அம்மா இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் 
நான் உன் மகளாக வேண்டுமம்மா ...
நான் சுயநலவாதிதான் ..
ஏனென்றால் நான் இன்னும் தாயகவில்லை 
சேய்தான்....
			 
			
			- 
				
ஈருயிர் எழுதிய ஓவியமாய் நீ...
என் உயிரின் ஒரு பாதி நீ
உன்னை சுமக்க
என் கருவறை
தவமிருந்து காத்து கிடக்க
எட்டாத வரமாய்
என்னை ஏங்க வைத்தாய்...
ஒரு முறை என் கருவில்
வந்துவிடு என  நான்  கதற
கூக்குரல் கேட்டு ஓடிவந்தாயோ
என் கருவறையில் வாசம் செய்ய...
செல்லமே
என்னுள் நீ உருவாக
என்னுள் ஆனந்தம்
சொல்ல வார்த்தை இல்லை
கண்ணீரே காணிக்கையாக்கி
காத்திருந்தேன் 
உன் இன்முகம் காண...
உன்னை சுமந்த
ஒவ்வொரு நொடியையும்
மீண்டும் சுமக்கும்
வரம் கிடைக்குமா??
என் கருவறை இருள் கூட
ஒளியில் ஒளிர்ந்தது
அழகிய நிலவாய் 
உன்னை சுமந்த போது..
உன் பிஞ்சு பாதம்
எட்டி உதைக்கையில்
என் இதயம் படபடத்தது
பிஞ்சு பாதம்
காயமுற்றதோ என எண்ணி...
நீ பூமியை எட்டி பார்த்த
பொழுதில் உன்னை நான்
கண்ட நொடி மறக்க முடியுமா??
பாசத்தை மட்டுமே
உனக்கு உரியதாக்கி
என் உயிராய்
உன்னை கொஞ்சி மகிழ
இன்று நீ என்னை கொஞ்சுகிறாய்
கொஞ்சி பேசி
திட்டி அடிக்கையில்
நீ  அன்னையாய் மாற
சேயாய் நான் மாறி
செல்லமாய் சிணுங்க
நீ அரவணைக்கும் போது
மேனி சிலிர்த்து அளவில்லா
சந்தோசம் எனக்குள்
பல பெயர்கள் கொண்டு
அழைத்த போதும் மகிழாத
என் மனம்
"ம்மா" என்று நீ அழைக்கையில்
வேறு பெயர் வேண்டுமோ
இனி எனக்கு..
என் வாழ்வின் வசந்தம் நீ
இனி ஒரு பிறவி
எனக்கிருந்தால் 
மீண்டும் நீயே என்
மகளாய் வந்துவிடு....
என் பெண்மையின்
முழுமை  நீ  ;) ;)
			 
			
			- 
				
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்.
எங்களுக்கான  செல்வமாய் நீ..
மணாளனை பறிகொடுத்து
 மலரும் மாங்கல்யமும் இழந்தவளாய்
 இந்த உலகை எதிர் கொள்ளும் துயரம்.
விடியலைத் தேடி வேலை செல்லும் கட்டாயம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமான 
உற்றார் உறவினரின் கேலிப்  பேச்சுக்கள்.
வீதிகளில் திறியும் வாலிபர்களின் விசமப்  பார்வைகள்
வருகின்ற சொற்ப வருமானம் போதாமல்  வாடகை பாக்கி.
இப்படியாய் இதயம் முழுதும் துக்கம்.
இருள் சூழ்ந்தது போன்ற உணர்வு .
 இவை யாவும் உன் செல்ல தீண்டலில்  மறைந்து,
நொடி பொழுதிலே ஒரு உற்சாகம் நிறைந்த மகிழ்ச்சி.
வசந்தங்களை மட்டுமே உனக்கு சொந்தமாக்க 
நான் இந்த உலகை எதிர் கொள்ளவேண்டும் என்ற உறுதியோடு ...