FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on October 30, 2011, 04:43:50 AM
-
நிழல் படம் எண் : 005
இந்த களத்தின் நிழல் படம் forum சார்பாக கொடுக்கப் பட்டுள்ளது ..... இந்த அழகிய நிழல் படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F005.jpg&hash=099bb0a7c2d07b01e5ca64f65e7f08b36378df88)
-
பூக்களை போல் அமைதியாய் வாழ்க்கை நடத்திய
எம் மக்கள் வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்திலே...
ரோஜா நெருப்பில் கருகுவது போல்
எம் சகோதரிகள் கற்பு பறிக்கப்பட்டது
சிங்கள இனவெறி ராணுவத்தால்...
இந்திய ராணுவம் என்ற பெயரினிலே
தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள கஷ்மிரிலே
எம் சகோதரிகளின் கற்பில் விளையாடிய கயவர்கள்...
பூவை போல் அமைதியாய் வாழ்ந்தவர்களை
எரித்தார்கள் கயவர்கள் காம நெருப்பினிலே...
நித்தம் நித்தம் துன்பம் என்ற வேதனையில்
இறக்கிறார்கள் பூவை போன்ற பிஞ்சுகள் காசவிலே...
ஆக்கிரமிப்பு போரினால் பெற்றோரை இழந்த பிஞ்சுகள்
தவிக்கிறார்கள் உணவின்றி ஈராக்கிலே...
இதே நிலை மாறவில்லை ஆப்கானிலும்!
இத்தனைக்கும் காரணம் ஏகாதிபத்திய வெறியர்களே
தட்டிக்கேட்க வந்தவரெல்லாம் இருந்த இடம் தெரியவில்லை...
இவர்களுக்கு நீதி வழங்க தரணியிலே யாரும் இல்லை
இறுதி தீர்ப்பை வேண்டுகிறோம் எங்கள் இறைவனிடத்தில்...
அதுவரையில் காத்திருப்போம் பொறுமையுடன்!!!
-
பற்றி எரியும் மலரைப் போல்
பாழாய் போனது பெண் வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமானமாம் வரிகளாய் மட்டுமே
இன்று வரை..
கைவிலங்கு பூட்டி
சுதந்திரம் தரம்
உத்தமரோ நீங்கள்
கல்யாண சந்தையில்
ஆணுக்கு ஒரு விலையாம்..
வாங்க இயலாமல்
இளமைத் தொலைத்து
முதுமை நெருங்கிட
காத்திருக்கும் முதிர்கன்னிகள்
பெண்ணுக்கு பெண்ணே
எதிரியாம் மாமியார் உருவில்..
பற்றாத அடுப்பும்
பற்றி எரிந்து வெடித்து
கருகும் மலர்களாய்
பெண்கள்..
பெண்களை
பூவோடு ஒப்பிட்டீர்களே
வண்டுகளாய் வந்து
மது அருந்தி
மயக்கம் தீர்ந்து
வாட வைக்கவோ
பூஜை மலராய்
கருத வேண்டாம்
கருகிய மலராய்
வீதியில்உலாவரும் நிலை
இனியும் வேண்டாம்...
நிலவோடு ஒப்பிட்டீர்களே
இரவில் மட்டும் ரசித்து
இருளில் மூழ்கடித்தும்
தேய்ந்து மெலிந்து
எங்கள் வாழ்வை
தொலைக்கவோ
இட ஒதுக்கீடு வேண்டாம்
இதயத்தில் இடம்
கொடுங்கள்..
பெற்றத்தாயை மதிக்கும் உலகில்
உற்றவளை
உயிர் பறித்து பார்க்கும்
அவலம் இனியும் வேண்டாம் ..
-
தனக்கு நிகறாய் தனி அழகும் பொலிவும் புகழும்
தரணியிலே எவர்க்கும் இல்லை என தலைகனத்துடன்
தலைகால் புரியாமல் திரிந்து வந்த தலை (தலைவி) ரோசா இதுவோ?
தளிர் நிலவின் குளிரோடும்
குளிர் தோற்கும் குரலோடும்
தீம் தமிழின் சுவையோடும்
தேட தூண்டும் தனி திறனோடும்
திரு திரு வென பெயர் புகழுடன்
துரு துரு வென பேசும் குறும்பு பேச்சுடனும்
தகும் திறனுடன் விளங்கும் திருமகள் உன்னை கண்டு
தன் தற்பெருமை, தலைகனம் ,தகுதி மீறிய சிந்தனை
தவறென தெரிந்து தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று
தீக்குளித்து தற்கொலை புரிந்துகொண்டதோ ? தலை (தலைவி) ரோசா !
-
முழுவதும் எரிகின்றேன்...
உன் முதல் பார்வையில்
பற்றிக்கொண்டது முதல் தீ
அன்பே என்றாய்
ஆனந்தத்தில் பற்றிக் கொண்டது
ஓர் இதழ் ...
அழகே என்றாய்
வெக்கத்தில் பற்றிக்கொண்டது
ஓர் இதழ் ....
நலமா என்றாய்
நச்சென்று பற்றிக்கொண்டது
இதயத்தின் ஓர் இதழ்
எனக்காக நீ என்றும் ..
இந்த எண்ணத்தில்
பற்றிக் கொண்டது ஓரிதழ்
என்னுடன் நீ...
நாணத்தில் பற்றி கொண்டது ஓரிதழ்
எல்லாமே நீ...
அன்போடு பற்றிக் கொண்டது ஓரிதழ்
அருகிலே நீ
விரகத்தில் பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
வேறு ஒருத்தியோடு நீ ...
கோபத்தில் பற்றிக்கொண்டது ஓரிதழ் ..
காத்திருப்பில் கரையும் மணித்துளிகள்
கவலையில் பற்றிக்கொண்டது ஓரிதழ்..
மிஸ் யு என்ற sms
இந்த உலகை வென்ற எண்ணத்தில்
பற்றிக்க் கொண்டது ஓரிதழ் ...
சூப்பர் ...
உன் பாராட்டில்
பசுமையாகி பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
உன்னை காணாத பொழுதுகளில்
வெறுமையாக பற்றிக் கொண்டது ஓரிதழ் ...
கண்ணா ....
உன் பெயர் சொல்லும் போதே
முழுமையாக பற்றிக் கொள்ளும்
ரோஜா மலர் நான்....
உன் அசைவுகளும்
ஆக்கங்களும் ....
பேசும் பார்வையும்
என்னுள் ஆயிரம் இதழ்களை பற்ற வைத்தாலும்
இனிமையாய் எரிகிறேன் .....
.ஆனால் ..
உன் கோபத்தில் மட்டும்
பற்றிக் கொள்ளும் தீ
என் இதழ்களை கருக்குதே .....
என் மேல் கோபம் கொள்ளாதே
முழுவதுமாய் எரிந்து கருகிவிடுவேன்...
இதற்கும் சம்மதம்தான் ...
அணைக்க நீ வருவாய் என்றால் ...