FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on March 11, 2012, 03:00:20 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 016
Post by: Global Angel on March 11, 2012, 03:00:20 PM
நிழல் படம் எண் : 016


இந்த களத்தின்  நிழல் படத்தை சுதர்  வழங்கி உள்ளார் ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg17.imageshack.us%2Fimg17%2F2633%2Fprognr.jpg&hash=c67af653b51a39e55d829254badbbc47938a3a96)


நண்பர்களின் கவனத்திற்கு உங்கள் கவிதைகளால் ஓவியம் அழகாக உயிர் பெற்று நம் நண்பர்கள் இணையதள வானொலியில் நடமாடி வருகிறது ... நன்றி நண்பர்களே .... இருந்தும் உங்கள் கவனத்திற்கு  சில கருத்துகளும் வேண்டுகோளும் ..... நிழல் படத்திற்கு உங்களுக்கு தோன்ற கூடிய கற்பனைகளை கருக்களை இங்கே பதிவு செயுங்கள் ....இதை dedication  செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.... அப்படி dedication  செய்ய விரும்பினால் தனியாக அதை முகவுரையாக கொடுக்காமல் உங்கள் கவிதைக்கு ஊடே சொல்வது இன்னும் உங்கள் கவிதையை மெருகு படுத்தும் .... உங்கள் கவிதைகளை மெருகூட்டுவது  உங்கள் கைகளில்தான் .... கவனத்தில் கொண்டு கவிதைகளை புனையுங்கள் ...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Jawa on March 11, 2012, 08:49:32 PM
என் சிந்தனையின் சொந்தக்காரன் அவன்.

என் கற்பனையின் முகவரி அவன்.

என்றும் என் கவிதையின் முதல் வரி அவன்.

முகவரி தந்தவனே என் முகம் மறந்ததென்ன.

என்னை சிந்திக்க வைத்தவனே என்னை பற்றி சிந்திக்க மறந்ததென்ன.

என் கற்பனையை தூண்டியவனே இன்று கனவாகி போனதென்ன.

முதல் வரி நீ இன்றி முழுமை பெறுமோ என் கவி.

என் இதயம் அது இயங்கவில்லை இனியவனே நீ இன்றி.

வந்து விடு என்னவனே. வாழ்வின் எல்லை வரை நீ வேண்டும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Yousuf on March 17, 2012, 06:13:44 PM
நித்தம் நித்தம் குண்டு சத்தம்
தினமும் அப்பாவிகளின் மரணம்!
அடுத்த இலக்கு யார்?
மரணத்தை வரவேற்க!

அப்பாவி குழந்தைகளின் பரிதவிப்பு...
அனாதை குழந்தைகளின் ஏக்கம்
பசியால் வாடும் மக்கள்...
என்று மாறும் இந்த நிலை?
என்ற கேள்வி ஒவ்வொரு மனதிற்குள்ளும்!

பாலஸ்தீன் எங்கள் சொந்த பூமி...
ஆனால் நாங்களோ இன்று அடிமைகள்
சொந்த பூமிலேயே!

அமைதியாய் இருந்த எங்கள் பாலஸ்தீன்
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க சக்தியால்...
ஆக்கிரமிக்க பட்ட அன்றிலிருந்து இன்று வரை...
ஒவ்வொரு நிமிடமும் வேதனையை மட்டுமே
சுவைகின்றோம்!

எங்களுக்காக குரல் கொடுக்க...
இப்புவியிலே யாரும் இல்லை!
ஐ.நா கூட புறக்கணித்த தேசம்...
எங்கள் தேசம்!

என்று இந்த நிலை மாறும்
ஏங்கி கொண்டிருக்கிறோம்...
ஒவ்வொரு நிமிடமும்!

எங்களுக்கான இறுதி தீர்ப்பை...
எதிர்பார்க்கிறோம் இறைவனிடம்!

எங்கள் குழந்தைகள்...
இப்புனித பூமியாம் பாலஸ்தீனில்
அமைதியாய் வாழ அமைதியான...
விடியலை நோக்கி இருளிலே
இறைஞ்சுகிறோம் இறைவனிடம்!



Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on March 18, 2012, 04:21:36 PM
அந்தி பொழுதினில்
அழகிய நிலவொளியில்
அருகருகே நாம்
ஆனந்தமானது மனம்...

அர்த்தம் இல்லா பேச்சுக்களும்
ஆரவாரம் இல்லாத அமைதியும்
ஆயிரம் எண்ணங்களும்
ஆசை கனவுகளும்
அமுதமாய் கொஞ்சும் மொழிகளும்
அரவணைக்கும் தருணங்களும்
அனைத்தும் எனக்கே எனக்காக வேண்டி
ஆசைகளை சுமந்து உன்னோடு நான்..

உன் தோள் சாய்ந்து
உலகை மறக்க
உன்னை எண்ணியே
உன்னோடு என் கனவுகள் தொடர
உன் கண் பார்த்து கவலை மறந்து
உன்னில் என்னை தொலைத்து
உன் நேசத்தில்
உன்னோடு வாழந்த நினைவுகள்
எல்லாம் என் கண்முன்னே...

காலத்தின் சூழ்ச்சியா
என் பிறவியின் சாபமா??
உன்னை பிரிந்து
என் நாட்கள்
எல்லாம் நரகமாய்...

ஓவ்வொரு முறையும்
நிலவினில் தோன்றி
மறையும் முகமாய்
உன் முகம்..

நிலவே தேய்ந்து விடாதே
என்னவனை
உன்னில் கண்டுவரும்
என்னை தேம்ப விடாதே....

நிலவில்லா  வானம்
அமாவாசையாம்
என்னவன்
இல்லா என் வாழ்வு
சூனியமாய்.....

நிலவினில்  மட்டும்
நிழலாய் தெரியும் உன் முகம்
நிஜமாய் தெரியும் நாள் வரும்
நிழலாய் போனவனே
நிஜத்தில் வந்துவிடு...
நிஜமான காதலை தந்துவிடு..

நிலவில் வாசம் உனக்கெதற்கு
நிஜமாய் என்னுள் வசிப்பாய் எனில்
நிலவாய் நான் மாறிவிடவா...

நிலவை பார்த்திருக்கிறேன்
நீ வரும் வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ வந்தபின் என் பிரிவின்
வேதனையை தீர்த்துவிடு
அன்று மட்டும்
நிலவு தேய்ந்து போகட்டும்...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on March 18, 2012, 07:09:58 PM
உனக்காக என் காத்திருப்பு
தெரிந்தும்  மறைந்தும்
மறைத்தும் உன் பார்வைகள் எதற்கு ...
ஒளிந்திருந்து ஒருக்களித்து
உன் பார்வைகளை  வீசாதே
உன்னை நான் அறிவேன்
என்னை  நீயும் அறிவாய் ...


தினம் தினம்
உனக்காக மட்டும்
என் தனிமைகள் தவங்களில் கரைய
உன் வரவுக்காக
உருகியபடி நான் ...
உன் வரவினில்
என் வாழ்கையை தொலைக்க
உள்ளன்போடு உனக்காக
என் காத்திருப்புக்கள்


உன் மனதை திறந்து
இருள்  விலககி
உன் இதய அறையில்
என்று எனை கொலு வைப்பாய்
அன்று முதல் நாள் எல்லாம் பௌர்ணமிதான்
அது வரை பவுர்ணமிகளும்
அமாவாசைகள் தான் .....

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: suthar on March 18, 2012, 08:15:18 PM
பெண்ணே நீ
இயற்கையின் படைப்பா
இல்லை இயற்கையா..........?
எனக்குள் எண்ணி பார்க்கிறேன்
நிலவு
வான்
விண்மீன்
மேகம்
சூரியன்
இயற்கையின் பல பரிணாமங்களில்
எண்ணி பார்க்கிறேன்

நிலவு அழகின் சிறப்பு
வான் பிரதிபலிக்கும் கண்ணாடி
விண்மீன் கண்ணிமைத்து வரவேற்கும் அழகி
மேகம் ஏங்க வைத்து களைந்து போகும் மோகம்
சூரியன் அரவணைப்பில் ................தீ

ஒரு சிறு ஒப்பீடு

பெண்= நிலவு
மிளிர்ந்த தோற்றம்
பட்டொளி வீசும் முகம்
மயக்கும் வசீகரம்

பெண் = வான்
அவள் விசாலமானவள்
எங்கும் வியாபித்திருப்பவள்
பரந்துவிரிந்த குணமுடையவள்

பெண்= விண்மீன்
அழகு மின்மினி
கண் இமைக்கும் கண்மணி
ஒளிர்ந்து மிளிரும் அம்மணி
இந்த பெண்மணி

பெண்= மேகம்
அசைந்து வரும் இடைஅழகி
நகர்ந்து வரும் நடை அழகி
ஊர்ந்து வரும் வெள்ளை உடைஅழகி
பின்னி பிணைந்து வரும் சடைஅழகி

பெண் = சூரியன்
அச்சுருத்தும் அழகு சுந்தரி
அதிகாலை சாந்தக்காரி
அந்திவேளை செஞ்சிவப்புகாரி
அகிலம் போற்றும் சிங்காரி
அனல் கக்கும் கோபக்காரி....

என் கண்ணில்
பட்டிட்டவள் அழகாய்
பொட்டிட்டவள்  என் மனதில்
எட்டிட்டவள் அழகு
பட்டை கட்டிட்டவள்
கட்டில் என்னை
நட்டிட்டவள்

இட்டமானவன் உன் நெஞ்சை
தொட்டிட்டவன் இதய கோட்டை
கட்டிட்டவன் உன்னை
கட்டிப்பவன் உனக்காய்
காத்து கிடக்கிறேன் பெண்ணே
ஏன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்

நிலாபென்னே உன் அழகை கண்டு
காதல் வயபடுவான் என
தேய்ந்து போனாயா...?

மன்னவளே
என்னவளை அழகாய்
பிரதிபலிக்கும் வான் பெண்ணே என்
தோற்றம் கண்டு இருள்சூழ்ந்து போனாயா.....?

விண்மீனே என் பெண் மானே
மினுமினுத்து மினுமினுத்து
முனுமுனுக்க வைத்துவிட்டு
ஒளிந்து கொண்டாயா...?

வெண்மேகமே பொன்தேகமே
என் மோகமே உன்னை
தீண்டிடுவான் என
காற்றில் களைந்து போனாயா ...?

சூரியபென்னே வனப்பிலே மிதமான
செஞ்சூடுகாரியான உன்னை
அணைத்திடுவான் என
சுட்டெரித்து போனாயா...?

எப்படியும் எட்டிடலாம் என
எட்டி எட்டி பார்த்தும்
கிட்டாமல் போனதேன் எல்லாம் இயற்கையின்
எட்டா படைப்பாய் பார்த்ததால்
எட்டாது போனாயா.....?
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: supernatural on March 18, 2012, 09:59:49 PM
நான்...
நிலவை பார்க்க..
அதில் உன் ...
முகம் பிரதிபலிக்க...
அதை அழகாய் ...
உணர்வாய்...
நான் ரசிக்க...

மனதிற்குள்ளே  ஒரு ஏக்கம்...
உன்னை எண்ணி..
உன்னை காணும் ,,
பொன் நாள் எண்ணி..
.
என்று வருமோ ...
அந்த திருநாள் என்று...
மனம் வருந்தி...
ஏக்கத்துடன்...
காத்திருக்கிறேன்..
நீ வருவாய் என...!!!!

நிலவில் ..
உன்னை ரசித்தவளாய்...!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: aasaiajiith on March 18, 2012, 11:59:05 PM
நிலவே  வெள்ளி  நிலவே  !
என்னுல்  நீங்காமல்  நிலைத்திருக்கும்
நிறைவான  நினைவின்  அளவே  !

ஆரம்பத்தில்  அவ்வளவாய்  அபிப்பிராயம்
அற்றவன்தான்  நான்  உன்  மீது

அழகாய்  மிக  அழகாய்
அன்று  தான்  அவளின்  அறிமுகமே
அழகாய்  அறிமுகமானது  எனக்கு .

இன்றோ  ,

எனக்கு நீ  என்றால்  நிறைய  பிரியம்
நிஜம்   தான்  நிஜம்  தான் 

அவளுக்கு  நீ  என்றால்  நிறைய  பிரியமாம்
அவள்  என்றால்  எனக்கு  அளவில்லா  பிரியம்
இப்போது   தெள்ள  தெளிவாய்  புரியுமே 

எனக்கு  நீ  என்றால்  நிறைய  நிறைய  பிரியம்
நிஜம்தான்  ,நிஜம்  தான்

நிலவே  வெள்ளி  நிலவே  !

நன்றி  கடன்  பட்டவன்  நான்  உனக்கு

நல்லவள்  அவள்  ,என்னவளுக்கு  எப்போதெல்லாம்
ஏக்கம்  ,கலக்கம் ,கவலை  எல்லை  கடந்து
தொல்லை  தந்துவிடுகிறதோ  அப்பொழுதெல்லாம்
உன்  நிழலில்   அமர்ந்து  தான்  ,
தன சோக  கரைகளில்  போகும்  கரைகளை
சலவை  செய்துகொள்வாலாம்  !

அது  தவிர  , அவள்  முகம்  பார்க்க  தோன்றினால்
உன்  முழு  முகம் பார்த்து கொல்ல்வெஇந்  .
உன்  முழு  முகம்  பார்க்கும்  போதெல்லாம்
அரை  பிறையே  நானும்  அவள்  முகம்  நினைத்து கொள்வேன்  !

நன்றிகடன்  பட்டவன்  நான்  உனக்கு  !