FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on April 08, 2012, 11:24:54 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 020
Post by: Global Angel on April 08, 2012, 11:24:54 PM
நிழல் படம் எண் : 020




இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Anu  வால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....[/
b]

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F020.jpg&hash=bae53d454ad54acb4d9d64585b16705759de3ea9)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ooviya on April 09, 2012, 07:08:27 AM
அப்பா

அன்பும் அறிவும் தந்து வளர்த்திர்கள்
என் கை பிடித்து நடக்க கற்று கொடுத்திர்கள்
நான் தவறி விழுந்தாலும் பதறி போவிர்கள்
கட்டி அனைத்து முத்தம் இடுவிர்கள்

இரவு பகல் என்று பாராமல்
என்னை சீராட்டி வளர்த்திர்கள்...
தலை சீவி பூ முடிச்சு
பள்ளிகூடம் அனுபுவிர்கள்...

நிலவை காட்டி
அம்மா எனக்கு சாப்பாடு உட்டியது இல்லை....
உங்கள் மடியில் வைத்து தான் ஊட்டுவிர்கள்
அம்மாவுக்கு பொறாமை படும் அளவுக்கு

நான் விரும்பினதை வாங்கி கொடுத்திர்கள்
எனக்கு நல்ல படிப்பு சொல்லி கொடுத்திர்கள்
அன்பும் பண்பும் பாசமும் ஆதரவும் கொடுத்திர்கள்

அம்மாவை விட
ரொம்போ செல்லம் என் அப்பாவிடமே
அழுதாலும் சிரித்தாலும் என் அப்பாவிடமே
அடித்தாலும் திட்டினாலும் என் அப்பாவிடமே

அழகான என் அப்பா முகத்தில்
கம்பிரமான அந்த சிரிப்பு எனக்கு ரொம்போ பிடிக்கும்
உலகத்திலே உயர்ந்தவர் பண்புள்ளவர் என் அப்பா
இப்படி சொல்லிகிட்டே போலாம் என் அப்பா புகழ்

அப்பா முகம் வாடி நான் பார்த்தது இல்லை
 
அனால்

பெண்ணுக்கு பருவம் ஒரு கோளாறு
அது பந்தம் பாசம் கண்ணை மறைக்கும்
எனக்கும் மறைந்தது
கை பிடித்தவன் பின் சென்றேன்

அன்று என் அப்பாவின் கண்ணீர்
என்னை தடுக்கவில்லை
என் அப்பாவின் கையை உதறி விட்டு
அவன் கை பற்றினேன்

பந்தம் பெருசா
காதல் பெருசா
அப்போ தெரியாத புரியாத வயசு

இன்று அப்பா என்னை மன்னித்தாலும்
நான் செய்த தவறு
என் மனதில் ஆறாத காயமாக உள்ளது


கண்ணிருடன் உங்கள் அன்பு மகள் ஓவியா
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Jawa on April 09, 2012, 03:04:19 PM
அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்

ஆதம் தொடங்கிய அழகிய உறவு
ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு

இரவும் பகலும் அயராது உழைப்பதும்
இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்

ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்
ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.

உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்
உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே

ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து
ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்

எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்

ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை
ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்

ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்
ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்

ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக
ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது

ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை
ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Bommi on April 10, 2012, 01:32:30 AM
ஆயிரம் கரங்கள் சாதிக்காததை
ஒரு கரம் சாதிக்கும் -எனில்
அக்கரம் ஏன் தந்தையின் கரமே
தளிராய் தவழ்த்திட்ட கையை
களிப்புடன்  தன் கரம் பற்றி -நான்

உன்னை நினைத்தால்
என் மனம் அழுகிறது
ஓய்வெடுக்க  மனமின்றி
உழைப்பில்  ஒருமித்து
நீதியின் பாதையில்
நெடுபயணம்  நடத்தி
தேரோடும் கனவுகளை
நனவாக்க  போராடி வாழ்ந்த -என் தந்தையே

தந்தை என்று தள்ளி போகாமல்
என்னை நண்பனை போலன்றோ நடத்தினாய்
எனக்குளே விற்றிருந்த ஒரு விஸ்வருபத்தை
எனக்கு அறிமுகபடுத்திய  ஆசானே
நற்குணங்களை   நீ நட்டுவைதாய் எனக்குள்ளே
அதனால் தான் கள்ள உலகில் நான்
களப்போர் நடத்துகிறேன் -என் தந்தையே

தெயவத்தை கோவிலில்  நான் தேடியதில்லை
உன்னை விட கோவில் பெரிதல்ல
ஏட்டு கல்வி உனக்கு இல்லை என்று போனதால்
தொழிற்கல்வியை -நீ
எனக்கு துணையாக்கி கொடுத்தாய்
ஆறு வயதில்  நீ உழைக்க தொடங்கினாய் -இன்று
அறுபதை தாண்டியும் அயரவில்லை -என் தந்தையே

வாழ்க்கையை எனக்கு நீ வழங்கினாய்
திருப்பி உன்னிடம் செலுத்துவதற்கு
நான் வெறும் வார்த்தைகளை தானே
வைத்துக் கொண்டிருக்கிறேன்
விடிந்தால் என் வாழ்வில் வசந்தம்
வரும் என்று உன் கரம் பிடித்து
வாழ்க்கையில் பல தடைகளை
சாதித்த கைக்கு ஓராயிரம்
கைதட்டல்  ஆயினும் தந்தையின் ஒரு
கரம் உலகை ஆளவைத்த உயர்கை.......!!!

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: supernatural on April 10, 2012, 07:05:58 PM
தாய் சுமந்தாள்  ...
கருவறையில்...
தந்தை சுமந்தார்...
இதயம்தனில்..
தாயின் அன்பும்..
தந்தையின் அரவணைப்பும்...
ஈடு இல்லா  அரும் அணைப்பு ...

தந்தை  கை  பிடித்து ...
பொறுமையாய் ..அருமையாய்..
நடை பயின்றேன்...
தாயின் தாலாட்டில் இன்பமாய் ...
அன்பை நான் உணர்ந்தேன் ...

புதுமையாய் பல சொந்தங்கள்..
இதயம் வந்து சேர்ந்தாலும்..
என்றும் பசுமையாய்..
மனதில் நீங்காத..
இனிமையான பந்தங்கள் ...
நம்மை  ஈன்றவர்கள்...

பாசம் ....அன்பு...
இவற்றை அறிந்தது...
புரிந்தது...அவர்களிடம்..
பிறவிகள் பல உண்டெனில்...
அத்தனை பிறவியிலும்..
இந்த தாய்க்கும்...தந்தைக்கும்...
அருமை மகளாய்  பிறந்து..
பெருமை அடைய வேண்டுகிறேன்..!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Yousuf on April 11, 2012, 11:46:01 PM
இன்றைய குழந்தைகள்...
நாளைய இளைஞர்கள்!

நாளைய இளைஞர்கள்...
நாட்டை ஆள்பவர்கள்!

நாட்டை ஆள்பவரை நல்லவராய், வல்லவராய்
உருவாக்கும் கடமை மூவரிடம்!

மூவரில் முதலாமவர் பெற்றோர்...
இரண்டாமவர் ஆசிரியர்...
மூன்றாமவர் இச்சமுதாயம்!

இக்கடமையிலே முதன்மை நிலையம்
பெற்றோரின் கடமை தனை...
எத்துனை பெற்றோர்கள் அறிவர்?

குழந்தையை பெற்றால் போதாது
அக்குழந்தையை நல்லவனாய், வல்லவனாய்
வளர்த்தெடுப்பது தாய், தந்தையின்...
கடமை அன்றோ!

தான் பெற்ற பிள்ளையை ஒழுக்கமாய்
வளர்க்காததன் விளைவு...

தந்தையின் முன்னே புகை பிடிக்கும்,
மது அறுந்தும் பிள்ளைகள்...
பெற்றோர்களை முதியோர் இல்லத்திலே...
தள்ளிடும் அரக்க நெஞ்சம்...
கொண்ட பிள்ளைகள்!

இப்படி நீண்டு கொண்டே செல்கிறது
அட்டூழியத்தின் பட்டியல்!

தாயை போல பிள்ளை
நூலை போல சேலை
என்று எங்கோ படித்த நினைவு!

பெற்றோரை போலத்தானே
பிள்ளைகளும்!

நாம் நல்லவராய், வல்லவராய்
இப்புவியினிலே வாழ்ந்திருந்தால்!
நம் பிள்ளைகளும் நல்லவராய், வல்லவராய்
வாழ்வார்கள்!

நாம் கெட்டவராய், கொடியவராய்
இப்புவியினிலே வாழ்ந்திருந்தால்!
நம் பிள்ளைகளும் அப்படித்தானே
வாழ்வார்கள்!

அதில் விதிவிலக்காய் ஒரு சிலர்
இருக்கலாம்!

குழந்தைகளை பெற்றேடுத்தால் போதாது
அவர்களை நல்லொழுக்கம் உடையோராய்...
வளர்ப்பதுவும் பெற்றோரின் கடமை அன்றோ!

குழந்தையின் கை பிடித்து நடைபழக
வைப்பது போல்...

நல்லோழுகங்களை வாழ்க்கையிலே
நடைமுறைப்படுத்த வைப்பதுவும்
பெற்றோரின் கடமை அன்றோ!

குழந்தைக்கு ஊட்டும் உணவை போன்று...
அன்பு, ஈகை, இறக்கம், நேர்மை, சுயமரியாதை
போன்ற நற்பண்புகளை ஊட்டி
வளர்ப்பதுவும் பெற்றோரின்...
கடமை அன்றோ!

இக்கடமைகளை செய்திட முனைந்திடுவோம்!
அன்பெனும் மந்திரத்தால்...
ஒழுக்கமேனும் உயர்பன்பால்...
நேர்மை எனும் நற்பன்பால்...
நாளைய சரித்திரத்தை மாற்றிடுவோம்!

நல்லதொரு சமுதாயத்தை உருவக்கிடுவோம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Dharshini on April 12, 2012, 11:13:44 PM
என்னை  கருவறையில்  சுமந்தது  தாய்
என்னை  இதய  கருவறையில் சுமந்து  கொண்டு  இருப்பது
என்  தந்தை
நான்  இந்த  ஜனனம்  எடுத்த  நாள்  முதல்
என்னை  வழி  நடத்த  ஆரம்பித்தவர் ...

ஞானம்  தந்தது  தந்தை
தந்தையின்  சொற்படி  நடந்தால்  அவர்  மனம்  குளிரும்
விந்தைகள்  பல  புரிய  அவரின்  ஆசி  வேண்டும்
காகித தட்டல்ல  தந்தை
கை  துடைத்து  பின் 
கசக்கி  எரிய
தடகளத்தில்  வென்ற
தங்க  தட்டு  தந்தை
 நாம்
தான்  பார்த்து  கொள்ள வேண்டும்

வாழ்நாள்  முழுவதும்
கால்கள்  நடந்தாலும் - வேகத்தை
கைகள்  சீர்படுத்துதல்  போல
நம் வாழ்கை நடையில் 
கைகளாக  தந்தை

குழந்தை  பருவத்தில்
தந்தையின்  முதுகில்  சாவரி  பயணம்
நான்  நடை  பழகும்  காலத்தில்
தந்தை  தோளில் அமர்ந்து  பயணம்

உலகத்தின்  உயரமும்  தூரமும்
நான்  அறிந்து  கொள்ள  என்று
எனக்கு  தோழனாகி  வாழ்கையை
விவரித்தவன்  என்  தந்தை

எனக்காக ஜீவ நதியாக   ஓடி  கொண்டிருதவன் 
என்  தந்தை
வாழ்கையை
வாசிக்க  கூட தெரியாத
எனக்கு
வாழ கற்று  கொடுத்தவன்
என்  தந்தை

இறந்த  காலம்
நிகழ்  காலம்
எதிர்  காலம்
எல்லாமே  என்  தந்தை  தான்

என்  வாழ்வில்  இருளை
என்  தந்தையின்
ஒரே  ஒரு  கை  உரசலில் 
ஒழித்து  விடுவேன்


விளக்குகளால் பொழுதை
விடிய  வைக்க  இயலாது
சூரியனாய்  நீ  இரு  என்று
பாடம்  புகடியவன்
என்  தந்தை
   
எதையும்  பெரிதென்று
நினைத்து  சோர்த்து  விடாதே
அடிவாரத்தில்  தான்
ஆரம்பிகிறது  மலை  என்று
தைரியம்  சொல்லியவன்
என்  தந்தை

வால் அருந்த  பல்லியை காட்டி
வால்  இழந்தாலும்  அது
வாழ்வை  இழக்க  வில்லை
என்று   நம்பிக்கையை
கற்று  கொடுத்தவன்
என்  தந்தை
 
பெரும்  தூணாக  இருந்தவன்
என்  தந்தை
இன்றோ  சுயநினைவு  இல்லாமல்  படுக்கையில்

இன்றும்  என்  கனவுகளில்
என்னோடு  பேசி  கொண்டு  இருப்பவன்
என்  தந்தை
 
அவனின்  வழி  காட்டுதல் 
என்  இறுதி  நாள்  வரை 
என்னை  நிழல்  போல்
தொடர்ந்து  வரும்

நான்  தோல்வி  அடையும் போது
நீ  தோற்க  பிறந்தவள்  அல்ல
சாதிக்க  பிறந்தவள்  என்று
எனுள்  என்  தந்தையின்   குரல் ஒலித்து கொண்டே  இருக்கும்

எனக்காகவே இறைவன்  படைத்த
உலக  அதிசியதிற்கெல்லாம்
மேலான  அதிசயம்
என்  தந்தை

இனி ஒரு பிறவி எனக்கு
இறைவன் கொடுத்தால்
மீண்டும் இவரையே
என் தந்தையாக கேட்பேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: suthar on April 14, 2012, 08:14:55 PM
அன்பை பொழிய அன்னை
அரவனைக்க தந்தை, எத்தனை உறவுகளிருந்தாலும்
அன்னை தந்தை உறவு
அத்தனை உறவுகளிலும் அற்புதமான உறவு .....!

ஆண்டவன் படைப்புகள்
ஆயிரம் இருந்தாலும்
ஆதவன் போல் உயர்ந்த பெற்றவர்கள் பற்றி
ஆயிரம் எடுத்துரைத்தாலும் மிகையாகாது....!

இப்படித்தான் வாழவேண்டுமென
இலக்கணம் வகுத்து
இவனும் அவ்வழியில் செல்லவேண்டி
இட்ட கட்டளைகள் பல....

ஈன சொல்லுக்கு ஆளாகாதே, ஈகை கொள்ளென
ஈருயிர்கள் ஓருயிராகி ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றவர்களுக்கு நிகர்
ஈரேழு உலகத்திலும் இல்லை...

உண்மை பேசி, உறவுகளை மதித்து,
உணர்வுகளை கட்டுபடுத்தி,
உழைப்பாயெனில் வாழ்வில்
உச்சம் பெறலாம் என்றவர் அன்னை....!

ஊமை போல் இருந்தவனை
ஊக்கம் கொடுத்து
ஊரார் போற்றும்படி அறிவை
ஊட்டியவர் என் தந்தை...!

எளிமையாய் இரு,
எதையும் எளிதாக எடுத்துக்கொள்,
எகத்தாளம் கொண்டால்
எக்காலமும் ஏற்றமில்லை என்றவர் அன்னை...!

ஏற்றத்தில் வந்த சிறு
ஏமாற்றத்தில் விழுந்தவனை
ஏணியாய் இருந்து
ஏற்றிவிட்டவர் தந்தை....!

ஐந்து வயது முதல்
ஐம்புலனும் கட்டுபடுத்தினால்
ஐம்பதிலும் தளர்ந்திடாமல்
ஐயமின்றி வாழலாம் என்றவர் அன்னை...!

ஒருமை வெறுமை,
ஒற்றுமை கொள்ளென பல நல்ல
ஒழுக்கங்கள் கற்று கொடுத்து
ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுத்தவர் தந்தை...!

ஓய்வுக்கு பின்னும் சோர்ந்திடாமல்
ஓசையின்றி வாழென
ஓராயிரம் அறிவுரைகள்
ஓதியவர்கள் என் பெற்றோர்.......!

அன்னையை விட சிறந்த கோயில் இல்லை
தந்தை சொல்லை விட மந்திரம் இல்லை என்ற
ஒளவை கூற்று படி வாழ்வோம்....! வாழ்வில் ஏற்றம் பெறுவோம்....!!
 
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: RemO on April 15, 2012, 01:43:37 AM
என் தந்தை

கை பிடித்து நடந்ததில்லை
ஆனால் நல்வழி தவற விட்டதில்லை

தோள்மேல் தூக்கி நடந்ததில்லை
ஆனால் உயர வைத்து உலகம் பார்க்க வைத்தவர்

ஆற்றில் நீச்சல் அடிக்க வைத்ததில்லை
ஆனால் வாழ்கையில் எதிர்நீச்சல் அடிக்க வைத்தவர்

படிக்காத மேதையின் படித்த முட்டாள் மகன் நான்
கடின உழைப்பால் உயர்ந்தவரின்
சோம்பேறி மகன் நான்

கேட்டு கிடைக்காத பல வரங்கள் இருப்பினும்
அதை ஈடுகட்ட கேட்காமல் கிடைத்த வரம் என் தந்தை

இன்னுமொரு வரம் வேண்டும்
அவர் விரல் பிடித்து நடக்க
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: aasaiajiith on April 15, 2012, 10:08:34 AM

அன்புள்ள என் ஆருயிர் பிள்ளையே !

நான் மனம் முடித்த மணம் வீசும் முல்லையுடன்
முதல் முதலாய் வடித்த காதல் கவிதைக்கு
முல்லை அவள் பரிசாய் அள்ளி கொடுத்த கிள்ளையே !
அன்புள்ள என் ஆருயிர் பிள்ளையே !

என் வாழ்வாதாரம் நீ என்றபோதும்- உனை
வாழ்வாதாரமாய் கருதமாட்டேன்

நான் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழவிருக்கும்
வாழ்க்கைக்கு வாழும் முழு ஆதாரம் நீ

உலகில் மிக உயர்ந்த மதிப்பு மிக்க ஜீவனாக
என் தந்தையாய் நான் கருதுவதை போல்.

எனை நீயும் கருத கிடப்பேன் ,அதற்க்கு
ஏற்றார் போல் நாளும் நடப்பேன் .

சிறு வயதில் விரல் பிடித்து நடை பயில கற்று கொடுத்த
விலை மதிப்பிட முடியா விஷேஷ விவரமெல்லாம்
விபத்தொன்றின் விகாரமான விளைவினால் நினைவில்
நிஜமாய் துளியும்  இல்லையடா

இருந்திருந்தால் நிச்சயமாய் மற்றவர் போல்
வரிவரியாய் மகிழ் மகிழ்வாய் விவரித்திருப்பேன்

விதியின் விளையாட்டு என் மதி(அறிவு)
கெட்டவனாய் ஒதுங்கிடமாட்டேன் .
தரை மதியே (நிலவு) !
மடி தவழும் வளர் பிறைமதியே !


உன் விரல் பற்றி உனக்கு நடைபழக்கி நித்தம் நித்தம்
பெரும் பூரிப்பினில், மனதில் சிறிது சிறிதாய்

என் தந்தை என் விரல் பற்றி நடை பழக்கிய
அந்த பொக்கிஷ நினைவுகளுக்கு உயிர் தருவேன் !
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on April 15, 2012, 06:45:20 PM
நல் உரைகள் கூறி
நல் வழியில் என்னை
நல் வழி நடத்திய
என் மரியாதைக்குரிய
மகத்தான ஓர் மனிதன்
என் தந்தை

வாழும் காலத்தில்
வாழ்ந்தால் இப்படிதான்
வாழவேண்டும் என்று
எடுத்துகாட்டாய்
வாழ்ந்து காட்டும்
ஆடவன் என் தந்தை

தளிர் நடை பயின்று
தடுமாறி விழுந்த போதும்
தன்னிலை இலாது
தாறு மாறாய் ஓடிய போதும்
தன்  கரம் தந்து வழி நடத்தியதும்
வழி காடியதும் என் தந்தையின் கரங்களே ...

வாகையின் பாடங்களை
பல தடவைகளில்
ஆசானாகவும்
அன்பான சொதரனாயும்
அருமையனா நண்பனாவும்
அருகமர்ந்து அன்பாக பயிற்ருவிதது
என் தந்தையின்  கரங்களே ...

ஆனா முதல்
அறுதிவரை
அன்போடு கற்றுத்தந்த என் தந்தையே
அடுத்த பிறவிகளிலும்
எனக்கே தந்தையாய்  வேண்டும் ...

அன்பாக ஆசையாக
உங்கள் கரம் பற்றி
நடை பயிலும்
அந்த ஐந்து வயது
மீண்டும் வேண்டும் எனக்கு ..