FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 25, 2015, 07:09:23 PM

Title: ~ உடலுக்கு நன்மை தரும் பால் கலக்காத இயற்கை டீ ~
Post by: MysteRy on August 25, 2015, 07:09:23 PM
உடலுக்கு நன்மை தரும் பால் கலக்காத இயற்கை டீ

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11032735_1489095154721288_4329523511556015167_n.jpg?oh=b889c3adeb812c1b12c1513ee98247d9&oe=56773EB8)

இந்த பானங்களை தினமும் அருந்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

ஆவாரம்பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு, வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள், வெல்லம் கலந்து பருகவேண்டும். காய்ந்த தனியாவையும் தூளாக்கி அதை கொண்டும் டீ தயாரித்து குடிக்கலாம். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும்.

புதினா இலை டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். உடல் எடையை குறைக்கும் இந்த டீ மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.

குறிப்பு: டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.