FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 25, 2015, 10:08:22 AM

Title: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:08:22 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103b.jpg&hash=8bcf14b9d67074bc5eee12e4f2abf6dbf11a6eab)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-xAzJOQ6vxNo%2FVdlw1KOU8VI%2FAAAAAAAAPds%2F64fcNf1Reho%2Fs1600%2F22222.jpg&hash=d90ed00e6ae32984d457f831e96fe69fa3f5fb40)

``கிரிஸ்பியா... ஸ்பைஸியா சமையல் பண்ணா, போட்டிப் போட்டுக்கிட்டு சாப்பிடறாங்க.அதேசமயம், உடம்புக்கு நல்லதுனு ஏதாவது செஞ்சா, பேருக்கு கொஞ்சூண்டு சாப்பிட்டுட்டு எஸ்கேப் ஆகிடறாங்க!’’ - அக்கறைமிக்க குடும்பத் தலைவிகள் பலரும் இப்படி கவலைப்படுவது உண்டு. இந்தக் கவலையைப் போக்க உதவும் விதத்தில், உடலுக்கு நலம் தரும் கம்பு, ராகி, பார்லி, சிவப்பரிசி, காய்கறிகள், முருங்கை இலை, மிளகு, பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி... பல்வேறு உணவு வகைகளை, நாவைக் கட்டிப்போடும் சுவையில் இங்கே வழங்கியிருக்கும், சமையல்கலை நிபுணர் சுதா செல்வகுமார், ``இந்த ‘30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் - டின்னர்’ ரெசிப்பிகளை, கொஞ்சம் அக்கறை எடுத்து செய்து பரிமாறுங்கள். உங்கள் வீட்டு டைனிங் அறையில், `இன்னும் கொஞ்சம்... ப்ளீஸ்!’ என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்’’ என்று உற்சாகத்துடன் கூறுகிறார்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:12:06 AM
தானிய இனிப்பு புட்டு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103c.jpg&hash=22f2f09cb36cdb111c9b974a0e1f4e8b15c1b625)

தேவையானவை:

பச்சரிசி மாவு - அரை கப், கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோளம்,  - தலா கால் கப், கோதுமை மாவு - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் கோதுமை மாவை சிவக்க வறுத்து வைக்கவும் தானிய வகை களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக பொடித்துக்கொள்ளவும். இவற்றுடன் அரிசி மாவு சேர்த்து வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்துப் பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, இதனை இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த மாவுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:14:24 AM
ராகி சேமியா பிரியாணி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103d.jpg&hash=f2d6a2d4cb42cc5f05e26c0968822e625b5f8395)

தேவையானவை:

ராகி சேமியா - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 50 கிராம், நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, நல்லெண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி... வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:15:47 AM
புளி அவல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103e.jpg&hash=e7f662a7b6f67eb31b64ede385c1407407b4ca2d)

தேவையானவை:

சிவப்பு அவல் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைக்கவும். சிவப்பு அவலை அலசவும். புளிக் கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், அவல் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி, ஊறவைத்த அவலைப் பிழிந்து சேர்த்துப் புரட்டவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:17:18 AM
சுண்டல் குழிப்பணியாரம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103f.jpg&hash=32be18267304538d8443184f0c297645631437af)

தேவையானவை:

 தோசை மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை குழையாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து... கேரட் துருவல், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்துக் கிளறினால்... பாசிப்பருப்பு சுண்டல் ரெடி. தோசை மாவில் இந்த சுண்டலை போட்டுக் கலக்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, இந்த மாவை குழிகளில் ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:22:12 AM
மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103g.jpg&hash=1fc399a1007746ef37ad4fb5317c82f1b521e266)

தேவையானவை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், கொண்டைக்கடலை - கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், கெட்டித் தயிர் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:

வெங்காய ஊத்தப்பம் வேண்டுமெனில், நறுக்கிய வெங்காயத்தை ஊத்தப்பத்தின் மீது தூவி மிதமான தீயில் பொன்னிறமாக சுடவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:28:24 AM
பூசணி விதை பாயசம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103h.jpg&hash=19aca0d04897071fa20012932bfec62b5def92d4)

தேவையானவை:

பூசணி விதை - ஒரு கப் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பாக்கெட்டாக கிடைக்கும்), முந்திரிப்பருப்பு - 15 (நன்றாக உடைத்துக்கொள்ளவும்), பால் - ஒன்றரை கப், பொடித்த சர்க்கரை - அரை கப், ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

முந்திரி, பூசணி விதையை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாத்திரத்தில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஊறிய முந்திரி - பூசணி விதையை சேர்த்து வேகவிடவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து திரும்ப ஒருமுறை அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:32:55 AM
கம்பு - ஜவ்வரிசி இட்லி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103i.jpg&hash=a769c828a516e7753b49a7fcf2d11581c8ac60f3)

தேவையானவை:

கம்பு - ஒரு கப், இட்லி அரிசி - 3 கப், ஜவ்வரிசி - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி  - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 - 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:37:48 AM
மினி பார்லி இட்லி -  சாம்பார்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103j.jpg&hash=5c53af1a76c2211f3cb4b07e8fc943d72360dc8d)

தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பார்லி, முழு உளுந்து - தலா அரை கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சாம்பார் செய்ய:

துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து அரைத்து, 4 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சாம்பார் செய்முறை:

 தனியா, கடலைப்பருப்பு, எள், காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றுசேர்த்து நீர் விட்டு... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, புளிக்கரைசல் விட்டு... சாம்பார் பொடி, சிறிது உப்பு  சேர்த்து, பருப்பைக் கடைந்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
சாம்பாரை கிண்ணத்தில் விட்டு, அதில் மினி இட்லிகளைப் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிடக் கொடுக்கவும். பெரிய இட்லியாக செய்திருந்தால், சின்னச் சின்னதாக நறுக்கி, சாம்பாரில் போடலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 10:41:15 AM
காக்ரா சாட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103k.jpg&hash=c21b7c75794aad1632feca0226456c38bc5f9fcb)

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - ஒரு டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்தூள்) - அரை டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, நெய், உப்பு தேவையான அளவு.

மேலே தூவ:

தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு, சாட் மசாலா, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் மஞ்சள்தூள், ஓமம், அம்சூர் பவுடர், மிளகு - சீரகத்தூள், எண்ணெய், உப்பு சேர்த்து நீர் விட்டு, நன்றாகப் பிசையவும் (கெட்டியாக பிசைந்துகொள்ளவும்). மாவை உருண்டையாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவும். கனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சிறிதளவு ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு பொன்னிறமாக சுட வும். பிறகு, மெல்லிய சுத்தமான துணியை சுருட்டி, சப்பாத்தியின் மேல் வைத்து அதன் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது போல் சீராக அழுத்தம் தரவும். சப்பாத்தி பழுப்பு நிறமாகும்போது, திருப்பிப் போட்டு, இதே மாதிரி செய்யவும். சப்பாத்தி முறுகலாக, மொறுமொறுப்பாக வரும். அதன் மீது பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி,  உப்பு, சாட் பவுடர் தூவி சாப்பிடலாம். இது சில நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு:

சப்பாத்தி மேக்கரிலும் இதை செய்யலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 11:09:31 AM
ராகி - முந்திரி ரவா தோசை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103l.jpg&hash=cde95501d01dc0458b1af33f55df1597f3b20638)

தேவையானவை:

கேழ்வரகு மாவு - அரை கப், முந்திரிப்பருப்பு - 20 (சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்) ரவை - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன் (உடைத்துக்கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்). 15 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 11:31:47 AM
வெஜிடபிள் சாலட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103m.jpg&hash=ac16f6ecb5b15c65919de48901a6c41b4842e411)

தேவையானவை:

துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ் - தலா கால் கப், மிகவும் மெல்லி யதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன் - பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (குழையாமல் வேகவிடவும்), பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 ஒரு கிண்ணத்தில்  காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கசப்பு இல்லாத வெள்ளரிக் காயை துருவி இதனுடன் சேர்க்க லாம்... நறுக்கிய தக்காளியையும் சேர்க்கலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 11:38:14 AM
வெற்றிலை ரசம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103n.jpg&hash=4066d7919925be4d802934e351ff1acd749e855d)

தேவையானவை:

வெற்றிலை - 6, புளி - எலுமிச்சை அளவு,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பழுத்த தக்காளி - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்), எண்ணெய் - சிறிதளவு, உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:

புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்  விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன்  மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நெய்யில் தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். உடனடியாக வெற்றிலையை நறுக்கிப் போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 11:49:36 AM
கலவைக்காய் குழம்பு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103o.jpg&hash=40296c50b49c5af16b4a1f88b36028b2ebf9e81a)

தேவையானவை:

முருங்கைக்காய் - ஒன்று, பச்சை மொச்சைப் பயறு - அரை கப், கத்திரிக்காய் - 4, பூண்டு - 5 பல், தோல் உரித்த சின்ன வெங்காயம் - அரை கப்,  இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

புளியைக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, தோல் சீவிய இஞ்சியைத் தட்டிப் போட்டு, பூண்டையும் நசுக்கி போட்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக் காய் மற்றும் பச்சை மொச்சை சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அரை கப்  நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு வெந்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

 பச்சை மொச்சை கிடைக்கவில்லை என்றால், காய்ந்த மொச்சைப் பயறை 10 மணி நேரம் நீரில் ஊறவைத்து உபயோகப்படுத்தலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 12:06:30 PM
தஹி பூரி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103p.jpg&hash=daf080828b902e3655863384a19a366f4062ea62)

தேவையானவை:

கோதுமை மாவு, மைதா மாவு - தலா அரை கப், கேரட் துருவல் - கால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (மசிக்கவும்), தயிர் - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து, சிறுசிறு பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொரித்த பூரி நடுவே ஓட்டை போட்டு இந்த கலவையை வைத்து, பூரியின் மேல் தயிர் ஊற்றி நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 12:09:30 PM
முருங்கை இலை பொடி சாதம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103q.jpg&hash=d2cdb05a8184e075a28a498b4128e43d2af8cf75)

தேவையானவை:

வடித்த சாதம் - ஒரு கப், ஆய்ந்த முருங்கை இலை - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 6 பல்,  புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - கால் கப், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

முருங்கை இலையை நீரில் அலசி, துணியால் நன்கு துடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் இந்த இலையை வறுத்துக்கொண்டு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிகொள்ளவும். பூண்டு, உளுத்தம்பருப்பு, எள், காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் வறுத்து... புளி, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். சூடான வடித்த சாதத்தில் சிறிதளவு நெய் விட்டு, செய்து வைத்திருக்கும் பொடி வகைகளைப் போட்டு பிசைந்து சாப்பிடவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 12:52:26 PM
பீட்ரூட் கீர்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103r.jpg&hash=1ddc304c05662923f289a9b4bad63c97cb767f9a)

தேவையானவை:

பீட்ரூட் (பெரியது) - 2, காய்ச்சி ஆறவைத்த பால் - 4 கப், ஏலக்காய் - 3, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, முந்திரி - 6 (நெய்யில் வறுக்கவும்), சர்க்கரை - 50 கிராம், நெய் - சிறிதளவு.

செய்முறை:

பீட்ரூட்டை தோல் சீவி, நறுக்கி, குக்கரில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மேலே குங்குமப்பூ தூவி, வறுத்த முந்திரி சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கூலாக பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 12:54:58 PM
சப்பாத்தி உப்புமா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103s.jpg&hash=5fc840dc495fc5a7fd2751c22ea80c39957e3ae0)

தேவையானவை:

சப்பாத்தி - 4, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 12:57:06 PM
முட்டைகோஸ் சாதம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103t.jpg&hash=47062004ca0e7b0d3132805bf22ae4308f6a690e)

தேவையானவை:

துருவிய முட்டைகோஸ் - ஒரு கப், வடித்த சாதம் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

 வடித்த சாதம், சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பட்டை, மிளகு - சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும். இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும். இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:00:38 PM
ஐந்து வற்றல் குழம்பு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103u.jpg&hash=b2d39bc80c50b3d97caeef969adf5fa949230b6b)

தேவையானவை:

 மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல், அவரைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல் - தலா ஒரு கைப்பிடி அளவு, தக்காளி - 100 கிராம், தோல் உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

மிளகு, சீரகம், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு,  எள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, எல்லா வற்றல்களையும் ஒன்று ஒன்றாக போட்டு தீய்ந்து விடாமல் வதக்கி... சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி `திக்’காக வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:03:13 PM
மிளகுத் தண்ணீர் சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103v.jpg&hash=7313bfc9cac9ad920dce0d0d2256f2da2e031e63)

தேவையானவை:

மிளகு - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை டீஸ்பூன்,  தக்காளி - பாதியளவு (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

பொடிக்க:

தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - ஒன்று.

செய்முறை:

பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு கொதி வந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து, இந்தப் பொடியை போட்டு, தக்காளி, உப்பு, வெல்லம் சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் முழு மிளகு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:05:51 PM
சீரக ரைஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103w.jpg&hash=ce397419d2a8da0f1c1324233eb1a10444428661)

தேவையானவை:

அரிசி - ஒரு கப், பூண்டு - 15 பல், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யை அதில் சேர்க்கவும். பூண்டினை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி... சிறிதளவு நெய்யில்  இளஞ்சிவப்பாக வதக்கவும். மீதமுள்ள நெய்யில் மிளகு, சீரகத்தை வறுத்து கொரகொரப்பாக பொடி செய்யவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மோர் மிளகாய் வற்றலை கருமையாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தில் உப்பு சேர்த்து, முந்திரிப் பொடி, மிளகு - சீரகப் பொடி, பூண்டு, மோர் மிளகாய் வற்றல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:07:22 PM
ஸ்பெஷல் வடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103x.jpg&hash=9c96d31b0595b6aecb0ca30c5082918d368e7aea)

தேவையானவை:

துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், பச்சரிசி - 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு -  2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம்  ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:09:32 PM
கம்பு மோர்க்கூழ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103y.jpg&hash=7108a6e5cef0515d57695e5ca05f595892548cbf)

தேவையானவை:

கம்பு மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

தயிரைக் கடைந்து ஒரு கப் நீர் விட்டுக் கலக்கி மோராக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... சின்ன வெங்காயம், இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, கடைந்த மோரை ஊற்றி, உப்பு போட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கம்பு மாவை போட்டு கைவிடாமல் கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:11:48 PM
ஸ்வீட் கார்ன் - அவல் போஹா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp103z.jpg&hash=8a28531e79df42d6d062aaee5b8d6f3355fcd043)

தேவையானவை:

வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், அவல் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை  - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (விழுதாக அரைக்கவும்), உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

அவலை நன்றாக நீரில் அலசிவிட்டு, நீரை வடிய விட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர் வடித்த அவல் சேர்த்து கிளறி, வேகவைத்த சோள முத்துக்களை போட்டு வதக் கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). இதில் மஞ்சள்தூள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் வேகவிடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:45:42 PM
வீட் பிரெட் மசாலா டோஸ்ட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104a.jpg&hash=777eabc65ce39b11e99c670d6d1c1b25bdf3cc7f)

தேவையானவை:

வீட் பிரெட் (கோதுமை ரொட்டி) - 6 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

அரைக்க:

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு, பூண்டு - 6 பல், சீரகம் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்லைஸ்களின் ஒருபுறம் வெண்ணெய் தடவி, அவற்றின் உள்ளே அரைத்த சட் னியை தடவி... குறுக்காக வெட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, வெட்டிய பிரெட் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க சுடவும் (சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சிறிது ஊற்றிக்கொள்ளவும்). இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் செய்து கொள்ளவும்.

குறிப்பு:

பிரெட் டோஸ்டர் இருந்தால் அதில் வைத்தும் எடுக்கலாம்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:49:10 PM
வெஜ் மசாலா பாத்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104b.jpg&hash=43f543b2e08b336b554393bb4c60b16a3f0222e1)

தேவையானவை:

அரிசி - ஒரு கப், நறுக்கிய காய்கறி கலவை (கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ்) ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் - 10, ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, துவரம்பருப்பு - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பூண்டு - 4 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். குக்கரில் நெய் விட்டு... வெங்காயம், காய்கறி கலவை, பெருங்காயத்தூள், முருங்கைக்கீரையை வதக்கி, அரைத்த மசாலா விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பருப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசியை சேர்த்துக் கிளறவும். பிறகு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, கறிவேப்பிலையை தாளித்து சேர்த்துக் கிளறி பரிமாறவும்..
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:53:18 PM
கார்லிக் பரோட்டா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104c.jpg&hash=f77c9430118ca741d765ad154d02815c8afee275)

தேவையானவை:

மைதா - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதாவோடு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, நீர் விட்டு, தளர்வான, மிருதுவான மாவாக பிசையவும். இதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இன்னொரு முறை அடித்து பிசைந்து... எண்ணெய் தடவி 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டை களாக உருட்டவும். சப்பாத்தி இடும் மனை மீது சிறிதளவு மைதா தூவி, மாவு உருண்டையை வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும். அதன் மீது எண்ணெயை பரவலாக தடவி, புடவை கொசுவம் போல் மடித்து பின்னர் உருண்டைகளாக்கவும். பிறகு இதனை கனமான பரோட்டாக்களாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, பரோட்டாவைப் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். பிறகு பரோட்டாவின் ஓரங்களை இரண்டு கைகளுக்கு நடுவே வைத்து தட்டவும். இப்போது அடுக்குகளோடு கூடிய கார்லிக் பரோட்டா ரெடி.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 01:55:34 PM
குயிக் இனிப்பு இடியாப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104d.jpg&hash=0a08946cde928f0b3294419a278412422bd451dd)

தேவையானவை:

ரெடிமேட் இடியாப்பம் - ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - சிறிதளவு, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உலர்திராட்சை - 10.

செய்முறை:

தேவையான அளவு நீரைக் கொதிக்கவைத்து அதில் ரெடிமேட் இடியாப்பத்தை போடவும். 5 நிமிடத்தில் வெந்து பொலபொலவென்று வந்துவிடும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை சேர்த்துக் கிளறவும். பரிமாறுவதற்கு முன் சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 02:03:57 PM
சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104e.jpg&hash=7fda35524481449288f8fea9282f4ed13104ccd5)

தேவையானவை:

 சிவப்பரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சிவப்பு அவல் - கால் கப்,  தேங்காய்த் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

சிவப்பரிசி, துவரம்பருப்பு, சிவப்பு அவல், காய்ந்த மிளகாயை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து... அடைபதத்தில் கொரகொரப்பாக அரைக்கவும் (பாதி அரைபடும் போது தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்). வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த  மாவைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக வெந்த பிறகு இறக்கவும். பிறகு, மாவை கொழுக்கட்டை போல பிடித்து, இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~
Post by: MysteRy on August 25, 2015, 02:11:52 PM
வறுத்த அரிசி சொஜ்ஜி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp104f.jpg&hash=04161c7b83c9c0a2f1903e505867e590f2913d5a)

தேவையானவை:

பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 5, பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக, இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு... உப்பு பட்டாணி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். இதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பை போட்டு, தேங்காய்த் துருவலை சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.