-
நிழல் படம் எண் : 031
இந்த களத்தின்
இந்த நிழல் படம் SUBA அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F031.jpg&hash=65b92d4391ed507715e542763560f03276e2324c)
-
மாதா பிதா குரு தெய்வம் .
குருவுக்கு மூன்றாம் இடம்
இதை ஏற்கவில்லை என் மனம்
என் இதயத்தில் என்றுமே
ஆசிரியருக்கு தான் முதலிடம்
என்னை பயமுறுத்துவதில் ..
மற்ற மூவரும் என்னை அடிப்பதில்லை
ஆனால் ஆசிரியரோ ..ஹ்ம்ம் ..
கனவை கூட
அடியால் நிரப்பாமல் ஓய்வதில்லை .
நீரில் கூட
கால்கள் நடை போட்டுவிடும் போலும்
ஆனால் வகுப்பில்
நடக்க முடிவதில்லை
விடைத்தாளை
அவரிடம் சென்று பெற்றுக்கொள்ள...
நடனமே ஆடியது கால்கள் .
சினம் கொண்ட சிங்கத்தை
அதன் கூண்டிற்குள்ளேயே
சென்று நலமா மச்சியோ
என்று கூட கேட்டு விடலாம் போலும்
ஆனால் ஆசிரியரின் அறைக்குள்
சென்று வர முடிவதில்லை ..பயம்.
அவர் கண்களும் கூடங்குளம் தான்
அவர் என்னை உற்று நோக்கும் போதே
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
அவரின் கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லையெனில்
கண்களை பெரிதாக்கி..
அவர் பார்க்கும் பார்வை..
டாங் லீயின் நோக்கு வர்மமும் தோற்று விடும் .
சற்றே சிந்தித்து பார்த்தால்
சந்திரமுகி கூட சமத்துமுகியே
எப்படியோ
படிப்பை முடித்தோம்
தப்பித்தோம்
பிழைத்தோம்
என்ற எண்ணத்தில் இருந்தேன்
மாணவ பருவத்தை கடந்த பின்
நாட்கள் சென்று இப்போது ..
உணர்கிறேன் ..
உலகின் சிறந்த படைப்பு
உயிரில் சிறந்த உயிர்
ஆசிரியரே
அன்பாய் கற்பிக்கும்
ஆசிரியர்கள்
இனிமையான சிறார்களை , பெற்றோர்
ஈன்ற பொழுதினும் பெருதுவக்கும் வகையில்
உன்னதமான சேவையை
ஊ ருக்கு அளிக்கும் ஆசிரியர்கள்
எ தையும் எதிர்பார்ப்பது இல்லை
ஏட்டை மட்டும் புரட்டாமல் ,மாணவர்களின் மன
ஐ யங்களையும் தீர்க்கும்
ஒ ப்பற்ற ஜீவன்கள் ..ஒரு நாளும்
ஓய்வு இல்லாமல் கற்றதை கற்பிப்பவர்களே
ஔவியம் கொள்கிறேன் உங்களை கண்டு நான்
எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்
thavarugalai mannikkavum
-
வாழ்க்கை பாடம்
நடந்து வந்த பாதைகளில்
சுவடு இன்னும் பதிக்கவில்லை ...
துவண்டு போவதுண்டு
தோல்விகளை தொலைப்பதற்கு முன் ...
வெற்றிகளை குவிப்பதற்கு முன் ...
மனம் சுமையானதே ....
முள்களை பற்றி கொண்டு நடக்க
நாளுக்குநாள் வலி ஏறுதே ...
வாழ்க்கை பாடசாலையில்
தோல்வியை எழுதவேணும் - அது தந்த
அனுபவத்தை படிக்கவேணும் ...
சிந்தனையை செலுத்த வேணும் ...
சில நொடிகள் நினைத்ததுண்டு ...
அனுபவம் தந்த பாடம்
உழைப்புக்கு காலமேது!
முயற்சிக்கு முடிவேது !
வாழ்க்கை பயணத்தில்
அடியெடுத்து வைக்கும் - சிறுகுழந்தை நாம்
படிப்போம் - அனுபவ பாடத்தை ....
-
கலைகளின் இருப்பிடம்
காலத்தால் அழியாத கருவறை
கிண்ணத்து அமுதம்
கீதையின் சாரம்
குடிபதற்கு நல்கும் அட்ச்சயங்கள் ...
கூடி ஆயிரம்பேர்
கெஞ்சி கொஞ்சினாலும்
கேள்வி ஞாயம் ஒன்றாய் காணும் பிரம்மாக்கள்
கைகளை பிடித்து கற்று தந்த
கொற்றனுக்கு அடுத்து வரும்
கோவில் தெய்வங்கள் ஆசான்கள் -என்
கௌசல்யா டீசெரிடம்
நான் கற்று கொண்டது பல ..
முதன் முதலில் உலகத்தை காட்டினார்
மூப்படைந்த போதும்
முழுவதுமாய் மறக்காமல்
முகம்பார்த்து கண்டு கொள்ளும்
முத்து போன்றவர் ....
லட்சோப லட்சம் பேர்க்கு நீங்கள் ஆசான்
லட்சத்தில் நான் ஒருத்தி
என் லட்சியத்தை
வழிநடத்திய துருவ நட்சத்திரம் நீவீர்...
அன்பையும் பண்பையும்
அறநெறியையும்
அழகாய் போதிக்க
உன்னை போல் ஒரு பிறவி
இனி எனக்கேதும் கிடைக்குமா ..?
அன்னைக்கும் தெரியாது நம் ஆளுமை
அன்பாய் பேசும் தந்தைக்கும் தெரியாது நம்திறமை
கூடியாடும் தோழர்க்கும் தெரியாது நம் செயல்திறன்
கூட கற்றுகொடுக்கும் உங்களை தவிர
எம் ஆளுமை யாருக்கும் தெரியாது ...
தட்டி கொடுபதிலும்
தடுக்கி விழுந்தால் தைரியம் சொல்வதிலும்
வெற்றி தோல்விகளை சமமாக பகிர்வதற்கும்
நான் கண்டு கொண்ட ஓரிடம் ஆசான்
என்னை கண்டு மகிழும் ஓர் இதயம் என் ஆசான்..
காலங்கள் அழிந்து .. உங்கள் கடமைகளும் முடிந்தாலும்
என் கோலங்கள் அழியும் வரை
உம்மால் வைக்கபட்ட புள்ளிகள்
என் பாதைகள் ...
நன்றி என் நட்குருவே
-
நிறைவில்லா உலகில்
குறைவில்லாமல் கிடைப்பது
கல்வி ஒன்றே, கல்வியை
கற்பிக்கும் கல்விமான்களே இதோ
உங்களுக்காக!
மாதா! பிதா! குரு! தெய்வம்!
மூன்றாம் இடத்தை பெற்றாலும்
எங்களை முதலிடம் பெற வைப்பது
தங்களின் தனித்துவமே!
எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி நீ!
நாட்டின் உயர்விற்கு,எதிர்காலத் தூண்களாகவும்
ஏதுவாகவும் ,ஏணியாகவும் விளங்கும்
எங்களை ஏந்துகின்றாயே !
நீயும் ஒரு தாயே!
அன்பை அனைவர்க்கும் சமமாய்
அன்பளிக்கும் அன்னையை போல
கல்வியையும் கபடமில்லாமல்
கற்பிக்கும் ஆசிரியர்களும்
அன்னைக்கு சமமே!
கல்விக் கண் திறந்த காமராஜர்
கல்விக்கு கலங்கரயாக விளங்கியவர்
படிக்காத மேதை, படிக்காவிட்டாலும்
மேதைதான் ,பட்டம் பெறாமலும்
கல்வி எனும் விதையை விதைத்த
ஆசிரியர் அவர்!
ஏகலைவன் !அவன் ஒரு ஏழை,
வில் அம்பு கலையில் கைதேர்ந்தவன்,
தன குருவாக நிழல் உருவை வைத்தே கற்றான்,
குருவின் நிஜ உருவிற்கு தட்சணையாக,
வில் அம்புவிடுவதற்கு வித்தாக விளங்கும்
தன் கட்டை விரலையே கொடுத்தான்,
அத்தகைய பெருந்தன்மை உடையவர்கள்தான்
ஆசிரியர்கள்!!!
நாமும் எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிறப்போமடா,
நம் முன்னோடியாகவும் , வாழ்வின்
மூலாதாரமாகவும் விளங்கும்
ஆசிரியர்களுக்கு விரல் கொடுத்த
ஏகலைவனாக மீண்டும் இம்மண்ணில்
ஆசிரியர்கள் வாழும் வரை!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi150.photobucket.com%2Falbums%2Fs86%2Flittlesnowangel%2Fdean%2520contracting%2Fboy-crying.jpg&hash=8cb3aabcf86c5749629fb66f498349d45fcd3904)
!!!!இது ஓரு உண்மை சம்பவம் என் பள்ளி பருவத்தில்
நிகழ்ந்த நினைவுகளை உங்கள் முன் நிலையில் வைக்கிறேன் !!!
ஓவியத்தை பார்த்ததும்
என் நினைவுக்கு
முதலில் வருவது
என் ஆசிரியரின்
நினைவுகள்தான்
பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்
படைதனில்
தூங்கியவன்
வெற்றி இழந்தான் ..
கிராமமும் நகரமும்
கலந்ததொரு பள்ளிகூடம்
ஏதோ ஒரு நாள் நான் அங்கு
தொலைந்து விட்டதாய் ஒரு ஞாபகம்
என்னை விட்டுவிடாத ஞாபகம்
அதை எண்ணும் போதெல்லாம்
ஏங்கி தவிப்பேன் என் வயதையிழப்பேன்
வானை கிழித்து எல்லைகள் கடந்து பறப்பேன்
மீசை வாத்தியாரை கண்டும்
சித்திரா டீச்சரை கண்டும்
பயந்துபோன நாட்கள் இன்றும்
என் முறுக்கி கொள்ளும் மீசையில்
ஓசையில்லா நடுக்கங்கள்
தமிழ் ஆசிரியைக்கு மட்டும்
செல்லபிள்ளையானதும்
ஆங்கில ஆசிரியை என்றால்
தலைவலி வருவதும்
தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள்
ஆறுவயதிருக்கும்,
கால்சட்டையின் கிழிந்த பின்பகுதி,
கந்தல் சட்டை, கையிலோ
பத்துபைசா வந்திடுவான் தோழன்
கைகோர்க்க காலையில்
தோழனை பார்த்தும் பள்ளி
மாணவர்களும் ஆசாரியரும்
கைகொட்டி சிரிப்பார்கள்
அதை கண்டு மனம் நொந்து
போவன் என்தோழன்..
அவனுக்கு ஆறுதல் சொல்லி
நானும் அழுவேன் ..
அவன் அழுகை நிறுத்திவிட்டு
என்கண்ணீர் துடைப்பான்
என் நண்பன் ...
உடை தந்து உதவிட மனம் ஏங்கும்
மறுக்கும் நண்பனின் தன்மானம்
கண்டு என் மனம் அங்கு மகிழ்ச்சியில்
திளைக்கும்
உதவி செய்து என்னை
சோம்பேறி ஆக்கி விடாதே
அன்று அவன் சொன்ன
வார்த்தை என்னுள்
பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது
யாரு சிரிக்கும் போதும்
வருந்தாதே...
படிப்பில் உதவிடு
அது போதும் என்றான்
பரீட்சை முடிவுகள் வந்து
எலோரும் மதிப்பெண் அட்டையை
பெற்றிட...
என் நண்பனுக்கு மட்டும் வராது
துடித்தான்
ஆசிரியரோ தலைமை ஆசிரியரை
பார்க்க சொல்ல
கண்கலங்கி நின்றான்
இருவரும் தலைமை ஆசிரியரை
நோக்கி செல்ல
பூமாலை அங்கு காத்திருக்க
தலைமை ஆசிரியரோ
என்ன படிக்கிறாய் நீ ! என
அதட்டலோடு வினவ
கோவத்தில் நான்
எழுதுகோலை கொண்டு
அவரின் மண்டையை தொறந்தேன்..
கோபத்தில் சிந்தை இழந்து
தவறு புரிந்த பின்தான்
அறிந்தேன்
பள்ளியில் முதல் நிலை
மாணவன் என் நண்பன் தான் என்று
மாலை மரியாதையை
அவனை வந்து அடைய
மாற்று சான்றிதழை
பரிசாக நான் பெற
செய்த தவறை நினைத்து
வருந்தாத நாள் இல்லை..
துக்கத்திலும் சந்தோஷமாய்
இன்று என் நண்பன்
காவல் துறை உயர்அதிகாரி
ராமநாதபுரம் ...
இதை விட மகிழ்வான
நினைவு இருக்க முடியுமா என்ன??..
-
நம் அறிவு தேடலையும்
நம்மை வழி நடத்தி செல்ல
ஒருவர் தேவை என்பதையும்
உணர்ந்து
இறைவன் உருவாக்கினான்
ஆசிரியர்களை ..
கருணை உள்ளம் கொண்டவராய் ..
நீங்கள் பகிர்ந்து கொள்ளும்
எந்த விஷயத்திலும்
அன்பை கண்டோம்
நீங்கள் எத்துனை சிறப்பானவர்கள் என்று
நீங்களே கூட உணர்ந்திருக்க மாட்டீர்கள்
உலகையே புரட்டி போடும் உழைப்பு
உங்களுடையது
மானர்வகளின்
தனித்திறமைகளை தட்டி எழுப்பியும்
அவர்களை இலட்சியங்களை நோக்கி
அழைத்து சென்றும்
சிறப்பான சேவையை செய்தீர்கள்
வார்த்தைகளும் ஊமை ஆகிவிடும்
உங்களின் சிறப்பை எடுத்து கூற
போதுமான வார்த்தைகள் இல்லை
நன்றி குருவே
என் கடினமான நேரங்களில்
என்னை தாங்கி கொண்டதற்கு..
நன்றி குருவே
எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு..
நன்றி குருவே
என்னை பார்த்துக்கொள்ள எவரும்
இல்லாத நேரத்தில்
அன்பால் என் மனதை நனைய வைத்ததற்கு ..
நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால்
நான் தனிமையில் தவித்திருப்பேன்
சொல்ல வார்த்தை இல்லை
நீங்கள் எனக்கு கடவுளுக்கும் மேல்
-
உன் தோல் தொட்டவனெல்லாம்
உத்வேகத்துடன் உயரும்போது
உனக்கென்ன நீயும் சிறந்தவெனென
உற்ற நேரத்தில் அதற்குரிய காலத்தில்
உளவியல் ரீதியாக எடுத்துரைத்து
உற்சாகம் கொடுத்து இப்படி செய்யென
உத்தரவு பிறப்பித்து இவுலகில்
உனக்கு நிகர் நீயே என
உரைப்பவர் ஆசான்...........!
உறுதியான சிந்தனை கொள்
உயர்வான எண்ணம் கொள்
உண்மையாய் நடந்து கொள்
உழைத்து பிழைக்க கற்று கொள்
உதவிட பழகு பிறரை
உதாசீன படுத்தாதே பிறருக்கு
உதாரணமாய் இரு என
உயர்வுக்கு வழிகாட்டுபவர் ஆசான்.......!
உலகிற்கு அறிவின் ஜீவிகளையும்
உலகறியும் அறிவியலாளர்களையும்
உருவாக்கியது தாம்தானென
உள்ளத்தில் கர்வம் கொள்ளாமல்
உள்ளுணர்வோடு உழைத்திடும்
உயர்ந்த நற்பன்பன்புகளுக்கு
உரியவர் ஆசான்......!!
உலகின் எம்மூலையில் இருந்தாலும்
உலகமே போற்றுமளவிற்கு வாழ்ந்தாலும்
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பது போல்
உடல் பொருள் ஆவியை தொலைத்து
உன் அறிவை பெருக்கி
உலகளவு உயர்த்திய ஆசானை
உயிர் உள்ளவரை
உள்ளத்துள் நினைபோமென
உறுதிமொழி ஏற்போம்.......!!