FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on July 26, 2012, 11:24:08 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 034
Post by: Global Angel on July 26, 2012, 11:24:08 PM
நிழல் படம் எண் : 034





இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Suthar அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg193.imageshack.us%2Fimg193%2F5283%2Faathimanithan.png&hash=872810801ec99698ce3be5e60b0c8cce2996267b)

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: vimal on July 31, 2012, 12:50:45 AM
மந்திகளின் வழியே மாண்புமிகு
மாந்தர்களாய் உருவெடுத்த நாம்
இன்று எல்லையில்லா வளர்ச்சியை
கண்டோம், அவைகள் நம் வளர்ச்சியல்ல
முன்னோடிகளான இம்மந்திகளின் முயற்சி

கற்கால மனிதன் காட்டாறு போல
காடுமேடுகளை கடந்து ,உடையின்றி
உன்ன உணவின்றி,இருக்க இருப்பிடமின்றி
தனக்கென பேச மொழிகளற்று, நாடோடி
வாழ்கையை நாடினான்,

ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு
ஜீவன்களை கூரான கற்களை
ஆயுதமாக கொண்டு வேட்டையாடினான்
என்ன வேற்றுமை உள்ளது கற்கால
மனிதனுக்கும் ஐந்தறிவிகளுக்கும்,

பின் புதர்களையும் ,குகைகளையும்
தன் இருப்பிடமாக கொண்டான்,
இன்றும் குகைகளில் அவர்களின்
கிறுக்கல்கள் , காலத்தால்
அழியாத காலச்சுவடுகளாய்,

ஐந்தறிவு ருசியை மட்டுமே கண்ட
நம் முன்னோடிகள் , ஆறாம் அறிவின்
சுவையையும் கானத்துவங்கினர் ,
மரப்பட்டை,செடி,கொடி,தழைகளை
தன் உடலை மறைக்க உன்னதமான
உடையாய் பயன்படுத்தினான்,

பின் சிக்கிமுக்கி கற்களை உரசி
தீயை தீண்டினான் , தீண்டிய தீயில்
தன் அறியாமைகளை அள்ளித்தூவி
கருகலாக்கினான்,புரியாதவற்றையும்
அறியாதவற்றையும் அறிந்து கொள்ளும்
ஆர்வத்தோடும்,முனைப்போடும்,

பண்டமாற்றங்களுக்கு அவர்களின்
பாதசுவடுகள் பாதைகளின் வழியே
தேய்பிறையாய் தேய்ந்து கிடந்தன,
இன்று தேய்மானம் வளர்பிறையாய்
வளர்ந்து கிடக்கிறது, சுழலும்
சக்கரத்தின் சந்திப்பால்,

சுழல் சக்கரம் சுழற்றி விட்டது கற்கால
மனிதனின் வாழ்க்கை முறையை ,
குடும்பம்,உறவுகள் என தனக்கென
தனி வழியை வகுக்கலானான்
தங்கள் உணவிற்காக வேளாண்மையை
வரவேர்க்கலானான் ,

அன்று அறிவிலியாய் இருந்தவர்கள்
அறிவியலின் முன்னோடி ஆனார்கள்,
அவர்கள் விட்டுச்சென்ற சிறுச்சாயலில்
எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகள்
எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இன்று
குவிந்து கிடக்கின்றது இப்பூவுலகில்,

இன்று இவ்வுலகமே ஒரு கணிப்பொறியாய்
இயங்குகிறது,கண் இமைக்கும் நேரத்தில் கூட
நாம் பயன்படுத்துகின்றோம் அக்கனிப்பொறியை
நாம் வளர்ந்து விட்டோம் ,நாம் இனியும்
வளர்வோம், கற்கால மனிதனாகிய
நம் முன்னோடியால்,

ஒருக்கணம் நாம் கடவுளுக்கு நன்றி
சொல்வோம், நம்மை நன்றி மறவாமல் 
படைத்தமைக்காக, பத்து மாத தாயின் கருவறையை
விட்டு விடைபெற்றாலும் ,அடுத்த எட்டு மாதம்
கழித்து நம் முன்னோடிகளின் முன்மாதிரியாய்
நன்கு காலில் அவர்களைப்போல கற்கால
மனிதனின் ஆதியை நினைவுபடுத்தும் வகையில்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on August 01, 2012, 07:18:27 AM

மனிதன் வாழ்கிறான் !
மனிதன் வளர்கின்றன் !
மனிதன் சிந்திக்கிறான் !
மனிதன் சாதிக்கிறான் !

அனைத்து மனிதர்களும்
குரங்கில் இருந்து ஆப்பிரிக்காவில்
தோன்றியவர்களே ! தோன்றலின்
பலன், இன்று தோல்வியுறா
வளர்ச்சியின் பாதையில் இவ்வுலகம்!

மனிதனின் வாழ்வில்  எண்ணிலடங்க
மாற்றங்கள் அவைகள் அனைத்தும்
நம் முன்னோர்களால் அடைந்த தோற்றங்கள்
கற்கால மனிதன் இன்று ஆகிவிட்டான்
நம் கனவுகளுக்கு கூட எட்ட அறிவியலுக்கு!!
அறிவிலியின் தந்தையாக!

காடு மலைகளில் அடிப்படை தேவைகளான
உண்ணும் உணவு, உடுத்தும் உடை,
இருக்க இருப்பிடம் இவைகளின் 
அவசியத்திற்கு அலையாய் அலைந்தான்,


பின் மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்பட
எதுவாகவும் ஏணியாகவும் விளங்கிய
ஆறாம் அறிவின் அவசியம், கற்கால
மனிதனின் மனநிலையை மாற்றி விட்டது
இன்று மாற்றமில்ல உலகில் பல மாற்றங்கள்!


செடி,கோடி,தழை,மரப்பட்டைகளை
உடுத்தலானான், குகைகளை
குடியிருக்கும் கோவிலாக பயன்
படுத்தினான் இன்று அக்கோவில்கள்
அவர்களின் ஓவியத் திறமைக்கு ஒலைச்சுவடியாய்!

இரு கை தட்டினால் ஓசை வரும் என்பதை
உணர்ந்திருப்பான் போலும் , இரு கற்களை
உரசி தீயை உருவாக்கினான் , மிருகங்களை
அத்தீயில் கருக்கி உன்னலானான், அவர்களின்
வாழ்வில் வளர்ச்சியை மேம்ப்படுத்தலானான்!

அதன் பின் வகை படுத்தி வாழ்வதை
வாடிக்கையாக்கினான் , சாதுவான மிருகங்களிடம்
அன்பை பகிர்ந்தான் , தான் கண்டுணர்ந்த
தீயை அடக்கும் ஆதியையும் உணர்ந்தான்!

உணவிற்கு நாடோடியாய் அலையாமல்
வேளாண்மையை நடைமுறை படுத்தினான்,
நடந்து நடந்து கால் தேய்ந்த வழித்தடங்கள்
இன்று சுழலும் சக்கரத்தால் தேய்ந்து
கிடக்கின்றது, இது மகத்தானதே!

அறிவியலே அன்னர்ந்து பார்க்கும் அளவிற்கு
இன்று வளர்ந்து விட்டோம் , எண்ணற்ற கண்ட
பிடிப்பிகள் ,நொடி நேரத்தில் அனைத்தையும்
அறிந்து கொள்ளும் அளவிற்கு இன்று
வானோங்கி இருக்கிறது நம் புகழ்!!

மனிதனனின் வாழ்வில் இன்னும்
பல மாற்றங்கள் மண்டியிட இருக்கிறது
மாற்றங்களின் ஆதியான மந்தி
இனத்திற்கு நாம் நன்றி கூறுவோம்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Bommi on August 02, 2012, 04:21:59 PM
அருகினிலே பல பல மனிதர்கள்
அறியாத முகங்கள் என்றாலும்
அறிமுகம் கொண்ட நமது
முன்னோடிகள்

மனிதனின்  வாழ்கையில் தான்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
ஆதிவாசிகளாகவும் ,காட்டு
வாசிகளாகவும்,நாடோடிகளாகவும்
இந்த மனிதர்கள் இன்று உள்ளம் போற்றும்
உத்தம ராஜாக்கள்

எழுத படிக்க தெரியாத
பாமர மனிதாகள் தான் இன்று
இவர்கள் பூமியின் புத்தகம்
உலக அதிசயங்களில் இதுவும்
ஒரு ஒப்பற்ற அதிசயம் தானோ

ஆதி முதல் மனிதனின் வளர்ச்சி
பாதையில் விஞ்ஞானம்
வேகமாக சுழல்கிறது-அது தான்
வாழ்க்கையிலும் சேர்ந்து சுழல்கிறது
காட்டில் வளர்ந்து வரும்
செடி, கொடிகளை வைத்து
மேனியை போர்த்திய மனிதன்......
விலங்குகளை கொன்று தின்ற மனிதன்
விஞ்ஞான உலகத்தில் விதவிதமாய்
எல்லாவற்றையும் இருப்பிடத்திற்கே
வர வைக்கிறான்-இவர்கள்
விண்ணகம் போற்றும் மெய்ஞானிகள்

ஒரு போராளிக்கு எந்த போர்களமும்
இறுதி போர்க்களம் அல்ல -எந்த
வெற்றியும் இறுதி வெற்றி அல்ல
என்ற பழமொழிக்கேற்ப சுதந்திர
வாசலை நீ திறந்து வைத்தாய்
இந்தியா என்றும் உன்னை
மறக்காத தேசம்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on August 02, 2012, 04:56:55 PM
குரங்கில் இருந்து
குலம் தோன்றியதாய்
குல பெருமை பேசும் மானிடா
குரங்கை விட கேவலமாய்
நீ போன கதை என்னடா ...?

ஐந்தறிவு ஜீவனிடம்
உயிர் பெற்று வந்தவர்தாம்
அணு அணுவாய்
ஆக்கம் கண்டு
அகிலத்தையே
ஆட்டிபடைக்கும்
வித்தைகள் கற்று கொண்டீர்

உன் உழைப்பில்
நீ உயர்ந்த போது
உன் வளர்ச்சியில்
நிமிர்வு தெரியுதடா
உடல் உழைப்பால்
உயர்வுகண்ட உன் நிமிர்வு
இயந்திரத்தின் பிடியில்
இயல்பிழந்து போகுதுபார்

கணனியின் முன்
கட்டிழந்து காலம் மறந்து
கருத்தை பதிபவனே
உன் நிமிர்வு உருக்குலைந்து
போகுது பார் ....
உலகை வென்ற மமதை உன்னுள்
உன்னை வென்ற உவகை உலகுள்

மந்தி இனம் பிரசவித்த
மகத்தான மனித இனம் நீ
ஆனால் உனக்குள்
மமதை மனவீக்கம் என
மாசுகள் நிறைந்து
மருகிழந்து போகின்றாய்

உன்னை பிரசவித்த உன் இனமே
உன் கருவில் உதிக்க மறுக்கிறதே
உனக்கு பிறந்தால்
மந்தி இனமே
மதி இழந்து மகிமை இழந்து போகுமென்றா ..?

மந்தியோடு மனிதனை
மறந்தும் ஒப்பிடாதீர்
ஆறறிவு ஜீவன் என்று
அலம்பல் செய்துகொண்டு
அட்டூழியம் செய்வதற்கு
ஐந்தறிவு ஜீவனாய்
அது போக்கில் வாழ்வது மேன்மையடா ...

வளர்ந்து விட்டோம்
வென்று விட்டோமென
வாய் கிழிய போசுபவனே
நீ உன் வளர்ச்சி பாதையில்
விட்டு வந்த எச்சங்களை பார்
உன் வளர்ச்சியின் மேன்மையும் தெரியும்
வாழ்கையின் நீ இழந்த வசந்தமும் தெரியும்
உன் வளர்சிக்கு தலை வணங்கும் நான்
உன் இழப்புக்கு மனமும் வருந்துகின்றேன் ..


Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: suthar on August 02, 2012, 08:11:05 PM
ஆதி மனிதன் ஆதிசக்தியின் அம்சம் என்றும்,
ஆதாமும்  ஏவாளும்  தான்
ஆண்டவனின் முதல் படைப்பு என்றும் முழங்க
ஆதிமனிதன் தோன்றியது என்னவோ
அணுக்களால் தான்........!

அண்டம் தோன்றிய நாளில்
அணுக்கள் பல ஒன்று சேர்ந்து
புழு பூச்சியாய் தொடங்கி
பரிணாம வளர்ச்சி கண்டு மந்தியாகவும் ,
மந்தியிலிருந்து மனிதனாகவும்
மாறினான் என்கிறது அறிவியல்....!

மந்தியாய் இருந்து மனிதனாய்
மாறிய நீ உன்ன உனவில்லாமல்
உடுத்த உடை இல்லாமல்
உறங்க இருப்பிடமில்லாமல்
கானகமெங்கும் நாடோடியாய் திரிந்தாய்....

கற்காலத்தில்  தன்  வாழ்வை மேற்கொள்ள
கொடிய விலங்குகளை கொன்றாய் ,
கற்களை உரசி தீயை உருவாக்கினாய்,
கொன்ற விலங்கை தீயிலிட்டு உணவாய்  கொண்டாய்...

கானகத்தில் கிடைக்கும்
காய் கனிகளை பசிக்கு புசித்தாய்,
காணும் பெண்களை எல்லாம்
கண்ட இடங்களில் உறவு கொண்டாய்......

விலங்குகளை போல் உறவு கண்டதன்
விளைவு தன் இனத்தையே போட்டியின்
காரணமாக அழிக்க துவங்கினாய் .....

கால சக்கரம் சுழல, சுழல தனக்கென
கோட்பாடுகளை  விதித்து கொண்டு
குகைகளிலும்,  குடில் அமைத்தும்
குடும்பமாக வாழ துவங்கினாய் ..

ஐந்தறிவு மாக்களாய் அறிவிலியாக இருந்த நீ
ஆறரிவு மக்களாய் அறிவியல் வளர்ச்சி கண்டு
சமவெளி பகுதியில்  வேளாண்மை செய்தாய்,
சாதுவான விலங்குகளை வளர்த்தாய்.......
 
தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள
பண்ட, பாத்திரங்களையும்
புதியது புதியதாய் ஆயுதங்களையும்
இயந்திரங்களையும் கண்டுபிடித்தாய்

ஆக்க சக்திக்காக உருவாக்கிய உன்
அறிய கண்டுபிடிப்புகள் அனைத்திலும்
ஆற்றல் இருப்பதை போல்
அழிவும்  இருப்பதை மறந்தாய்.....,

மந்தியாய் வாழ்ந்த வரை மகத்துவமாய் வாழ்ந்த நீ
மானிடனாய் என்று மாறீனாயோ அன்றே
மானுடம் மறந்தாய் ......
மாந்தரோடு ஒட்டி உறவாடும் வாழ்வை மறந்தாய்...
மனம் முழுதும் மாசுகள் கொண்டாய்

அணுவிலிருந்து தோன்றிய  நீ
அணுவின் துகள்களை கொண்டு பல
அறிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கினாய் ,
ஆகாய விமானம் முதல் அணுகுண்டு வரை
உன்னுடைய கண்டுபிடிப்புகள் ஏராளம் ....!!

உடல் உழைப்பை குறைக்க இயந்திரங்களை
உருவாக்கிய நாட்களில் உருவ வளர்ச்சிகண்டாய்
அதை பயன்படுத்த துவங்கிய நாள் முதல்
உடல் வளர்ச்சியில் குன்றி கொண்டிருக்கிறாயே ....?

கனபொழுதில் வேலையை செய்து முடிக்க நீ
கண்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றான
கணிப்பொறியை நாட ஆரம்பித்தபின்
கண்கொட்டாமல் கணினிமுன்னேயே
காத்து கொண்டிருக்கிறாயே....?
உடல் உருக்குலைந்தும் காலம் மறந்து ...!!

தற்கால உன்  வாழ்வை ஒளிமயமான
பொற்கால வாழ்வாக அமைக்க வளர்சசியில்லா
கற்காலத்தில் நீ கண்ட முதல் கண்டுபிடிப்பான
கற்களால் ஆன கூரிய ஆயுதத்தையும் , சக்கரத்தையும்
உருவாக்க நீ சோதனையும்,
வேதனையும்  அடைந்திருந்தாலும்
உன் சாதனையை எடுத்தியம்ப இது  ஒன்று போதுமே.....!!