-
நிழல் படம் எண் : 037
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Vimal அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F037.jpg&hash=79587fb782f0a3f77172e31a14921b624c19c0ce)
-
என்னுள் என்னில் அடங்காத சந்தோசம்
காதல் மனைவி கருவுறக் கண்டு
கைகளில் அள்ளிக்கொண்டேன்
அவளோ என்னை தழுவி கொண்டால் ..
ஆசை கொண்ட காதலி
வீட்டில் வாழவந்த மலர்விழி
மாசில்லா குலக்கருவை
பத்துமாதம் சுமந்தால் குழந்தையாய் ....
முப்பதாவது நாள் முதலே
முழுகாத நாளிருந்தே
கர்பத்தின் காரணமாய்
உமிழ்ந்து உமிழ்ந்தே சோர்வனால்....
தொன்நூரவது நாள் வரை
பசியை துளைத்து பால்போல
குழந்தையை சுமந்தால்
கருவறையில் .....
மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு
ரத்த பரிசோதனைக்கு சென்று
குழந்தையின் வளர்ச்சியை கண்டு
வருவாள் என்னவள் ....
ஐந்து மாதம் ஆனது
என்னவளின் அழகு
மேனிமெருகேறின
தேவதை போல ....
எல்லா சொந்தங்களையும்
அழைத்து பூசூடியும் அலங்கரித்தும்
ஒரு தேவதை போல அமர
பெரியவர்களால் ஆசிர் பொற்றாள்....
பழவகையும் காய்கறியும்
பலவகையாய் வாங்கிவந்தேன்
புலால்கறியும் புரதமுட்டையும்
புதியதாய் செய்து கொடுத்தேன்
பயந்துதான் உண்டாலே தவிர
பசித்து உண்ணவில்லை-சிலநேரம்
கொடுமையாக இருந்தாலும் கூட
என்னை கோவித்து கொண்டதில்லை ....
கண்ணீரே ஆனந்தம்
காதலே பேரின்பம்
மகரந்தக் கருவைத் தாங்கும்
மலரென அவளை கண்டதும் .....
பாரம் தூக்காதே - என்
வேல் விழியாளே
விபரீதம் வேண்டாமடி
வேறு வேலை பார்த்துக் கொள் என்றேன் ..
குனிந்து தூக்காதே
குதிக்காதே குட்டிமா
மெல்ல நடந்திடு மெல்லிடையாளே - அவள்
மேனி வலிக்காமல் மென்மையாய் என்றேன் ...
கொண்டாடினேன் -அவள்மீது அன்பைக்
கொட்டித் திளைத்தேன் காரணம்
என் செல்ல குட்டிமா கருவறை-அங்கே
நான் கனவுகண்ட அன்பு மகன்
கவிதையாக உரு எடுக்கப் போகிறான்....
கருவறைக்குள் என் மகன்
கால் உதைக்க கண்டு ரசித்தேன்
மென்மையாய் கைவைத்தே
மென்பாதம் தொட்டு உணர்ந்தேன் ....
வெடுக்கென்று குழந்தை
பூ பாதம் உள் இழுக்க.....
ஹையோ என் மகன்
அசைகிறான் அசைகிறான் என்றேன் ....
அங்கும் இங்கும் எம்குழந்தை
அவள் அடிவயிற்றில் தாக்க
அவள் ஆசையாக என்கை பிடித்து
தொடவைத்து ரசிக்க செய்தால் .....
வலை காப்பு நெருங்கியது
உறவினர்கள் வந்து வாழ்த்தி
வழியனுப்ப தயார் செய்தார்கள்
என்னுள் ஒரு கலக்கம்..
அவளை விட்டு பிரிந்தது இல்லை
இன்று மட்டும் எப்படி என்னவளை அனுப்பிவைப்பேன்
உன்னை விட்டு பிரியமுடியாத
நானும் எப்படி சொல்லுவது என்று தயங்கிய நேரத்தில் ..
என் அன்பு மச்சான் வாங்க
நீங்க இருந்தாலும் நல்லாருக்கும்
என்னை அழைக்க நானும்
என்னவளுடன் சென்றேன் ...
நிறை மாதம் ஆனது
மருவமனைக்கு செல்ல மருத்துவர்
சொன்னார் எப்ப வேணுமென்றாலும்
குழந்தை பிறக்கலாம்....
காத்திருந்தேன் காத்திருந்தேன் - அந்தக்
கணப் பொழுதுக்காய் காத்திருந்தேன் .
மாமா வலி தாங்கவில்லை
என்று அவள் சொன்னதும் ....
என்னவளை அள்ளிக்கொண்டு
காரில் மருத்துவமனையை அடைந்தேன்
தயாராக வைத்து இருந்த தள்ளு வண்டியில்
என்னவளை படுக்க வைத்து ..
அவசர சிகிச்சைபிரிவில் சேர்த்து
அவளுக்கு ஆறுதல் சொல்லி
தலைமாட்டில் நான் அமர்ந்தேன் ,,
அவள் படும் வலியை தாங்கமுடியாமல்
நான் கண்கலங்க அதை பார்த்து
அவள் வலியை பொருத்து கொண்டால் -ஆனால்
அவள் கண்ணீர் காட்டி கொடுத்தது ..
ஹம்மா.....என்று குட்டிமா கத்த
அந்த நேரத்தில் என் மனது துடி துடித்தது
இவ்வளவு வலியில் குழந்தை பெறவேண்டுமா
என்று கண்கலங்கினேன் ....
அவள் அழுகை அதிகரித்தது பதினைந்து
நிமிடம் என்னால் பார்க்க முடியவில்லை
நல்ல சூரியன் உதிக்கும் நேரம்
அதிகாலைஅந்த நேரத்தில் தான்.......
வீல் என்று குழந்தை அழுகை சத்தம்.....
பூ போல ரத்தம் கலந்த உடம்பு
நான் பார்க்கையில்
மருத்துவர் கையில் இருந்தது
அவளோ மயக்க நிலையில் இருந்தால் ...
எங்கள் குழந்தையை என் கையில்
மருத்துவர் தர...
இருவரும் ஆனந்த கண்ணீர்வுடன்
எல்லை கடந்த சந்தோஷத்தில் ......
-
அன்னை !
அந்த வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி
அவள் அப்படி அழைக்க தகுதியானவள்
அவள் அவ்வளவு பாடு படுகிறாள் ...
அந்த வார்த்தைக்கு தகுதியாக
முதல் முன்று மாதம் மசக்கையில்
மந்தமாகி மீண்டும் வலு பெற்று ...
அடுத்த முன்று மாதம் கருவின்
அசைவுகளை கவனித்து அதற்கு
தகுந்தார் போல உணவு உண்டு ..
அடுத்த முன்று மாதம் உறக்கம்
கொள்ள முடியாமல் நடையில்
கவனம் கொண்டும் கருவில் ...
குழந்தை உதைக்கும்
அசைவை கண்டு ரசித்து
அகம் மகிழ்ந்து போவாள்..
அந்த நாள் பிள்ளையின்
முகம் காணும் ஆசையில்
அவள் வலி பயம் மறந்து போவாள் ...
அந்த கடைசி அரை மணிநேர
வலிதான் மனித வாழ்கையில்
அதிக பச்சவலி மருத்துவம் சொல்கிறது ..
குழந்தை முகம் பார்க்க ஆசையில்
அணைத்து இன்ப வலிகளைபொருத்து
தான் உயிரை பணயம் வைத்து ஈன்று எடுப்பால் ..
அந்த நொடி பிஞ்சின் முகம் பார்த்ததும்
தாய் முகம்மலர்ந்து போவாள்- எல்லா
வலியும் மறந்து போவாள் ...
என் உயிரில் பூத்த இன்றொரு
உயிர் நான் தாயாகி விட்டேன்
அன்று அவள் முழுமதி ஆகிறாள்.
-
இரவு
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற
ஒற்றை நிலாவின் வெறுமையை!
நீள்கின்ற சாலையின்
ஓர் புள்ளியில்
ஓயாமல் ஊளையிடும் நாயோ..
நிசப்தத்தைக் கிழித்தவாறே
மனகோப்பைக்குள்
பீதியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது!
காற்றின் கிசுகிசுப்புக்களால் - கிடுகு
முந்தானையவிழ்க்கும்
ஓலைக்குடிசையின் மேனி கண்ட
மின்மினிகள்
கண்ணடித்துச் சிரிக்கின்றன
கனநேரமாய்!
ஒட்டியுலர்ந்த குப்பி லாம்பின்
மூச்சிரைப்பில்
ஒளி கூட ஒளிந்து போனதில்
இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன
விம்பங்கள்!
உதரத்தின் உதிரம் நிதம்
தரிசானதில்
சோமாலியாக்களின் தேசமாய்
சோர்ந்து போகின்றன
வனப்பு மேனி!
இலைச்சருகின்
மூலை முடுக்குகளில் - தசைப்
பிணம் தேடும் அட்டைகளாய்...........
ஒட்டிக் கொண்ட அவலங்களும்
உடைந்த பாத்திரங்களும்
உதிர்ந்த புன்னகையும்- எம்
வறுமைத் தேசத்தின்
குடியிருப்புக்களாகின்றது!
ஆடைக் கிழிசல்களினூடு...........
நழுவும்
இளமை ரகஸியங்களால்
கற்பும் காயம் பட்டு
வெட்கமிழந்து போகின்றது!
வெம்மை மறந்த அடுப்புக்களோ
அக்கினி விரல்
ஸ்பரிசிப்பிற்காய்
தவித்துக் காத்திருக்கின்றன
பல நாட் பொழுதுகளாய்!
தரை விரிப்புக்களில்
பரவும்
கண்ணீர்க்கசிவுகளில்
அவிந்து போன கனாக்கள்
கதறி சிதைந்து போகின்றன!
இத்தனைக்கும் மத்தியில்
இடுப்பின் மடிப்புக்குள் நசுங்கும்
சின்ன ரோஜா வின்
உயிர்ப்போசை மட்டும்
மௌனித்த மனதின்
சலங்கையாகின்றது!
கனவுக்குள் முகம் வரைந்து
காத்திருக்கும்
தாய்மைக் காத்திருப்பால்
ஏழ்மை காலாவதியாகின்றது
வளர்பிறைக்காய்...
-
சிப்பிக்குள் முத்தெனவே
உன்னுள்ளே நான் வந்தேன்
தாய் என்னும் பதவி தந்து
கௌரவமே தந்திட்டேன்
நாட்களும் ஓடியது
ஆனந்தமும் கூடியது
மாதங்களும் கூடிடவே
பரிசோதிக்க வந்திட்டாய்
ஆபத்தினை அறியாது
ஆனந்தமாய் சிரித்திட்டேன்
தொடர்ந்து வந்த இருநாளில்
தூக்கி எறியப்பட்டேன்
பூவுலகம் காணுமுன்னே
பூக்குழியில் நான் போனேன்
உன்னாலே உரு கொண்டேன்
உன்னாலே உயிர் விட்டேன்
மரண தண்டனை தருமளவு
நான் செய்த பாவமென்ன??
பெண்ணாக பிறந்த நீயே
பெண்ணென்னை வெறுக்கலாமா??
கொஞ்ச வேண்டிய நீயே
கொலைகாரி ஆகலாமா??
கருவினிலே அழித்தாலும்
அதுவும் கொலைதான் அறிந்திடுங்கள்
ஆணோ பெண்ணோ எதுவெனினும்
உங்கள் உயிர் தான் உணர்ந்திடுங்கள்
உயிர் கொடுத்த பெற்றோரே
உயிரெடுக்க எண்ணலாமா??
இனியாவது சிந்திப்பீர்
பெண் குழந்தையை பேணிடுவீர்..
-
பெற்றெடுத்த போது ,அன்னை,
நீ சிரித்தாய், நான் அழுதேன்,
சிப்பிக்குள் முத்தாக,
செல்வமெனச் சுமந்தாயே,
பத்து மாதம், பகலிரவாய் விழித்தாயே,
தூளியிலே துவண்ட என்னை,
தோளில் இட்டு வளர்த்தாயே,
பாலூட்டி உன் பாசமெல்லாம் பகிர்ந்தாயே,
நான் தவழ்ந்து வர மகிழ்ந்தாயே,
உன் கைபிடித்து நடந்துவரும் பொது,
மெய் சிலிர்த்துப் போனாயே,
நாளொரு மேனியாய், நான் வளர்ந்தபோது,
அரவணைத்து ஆதரவாய் நின்றாயே,
அன்னை நீ போட்ட, உயிர் பிச்சை,
இன்று நான் வாழ்கின்றேன், உண்மை இது.
காலங்கள் கடந்தன, கன்னி ஒருவள்,
என்னை அடைந்தாள், கணவன் மனைவி என,
உன் அன்பைப் பகிர்ந்தாளே, என்ன இது,
அன்னையிடம் காணாத அன்பு,
அவளிடமா கண்டேன்?
உன்னை விட்டுப் பிரிந்தேன்
உயிர் பிரிந்தேன் என்று சொல்வேன்.
இன்று வாழ்கின்றேன் என்பது பொய்,
உன்னோடு வாழ்ந்ததுவே மெய் ;) ;) ;)