FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 24, 2015, 08:14:43 PM
-
முட்டை பிரட் மசாலா
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11870731_1488092944821509_4010475685733455417_n.jpg?oh=a55f4785d8f8110cf27438cb96ee9866&oe=567C9852)
தேவையான பொருட்கள்:
பிரட் - 8 துண்டுகள்
முட்டை - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!