FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 24, 2015, 07:55:11 PM

Title: ~ சிக்கன் லிவர் மசாலா ப்ரை ~
Post by: MysteRy on August 24, 2015, 07:55:11 PM
சிக்கன் லிவர் மசாலா ப்ரை

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11898561_1488092094821594_5151420925324624756_n.jpg?oh=bfe25946430c7d0d58bfd7779ac74789&oe=563F27AB)

தேவையான பொருட்கள்:

சிக்கன் லிவர் - 200 கிராம்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் தக்காளியைப் போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட்டு, அதில் சிக்கன் லிவரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் மூடி வைத்து 15-20 நிமிடம் லிவர் நன்கு வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

இறுதியில் மூடியை திறந்து, தீயை அதிகரித்து, மசாலா போன்று வரும் போது அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் லிவர் மசாலா ப்ரை ரெடி!!!