FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 24, 2015, 07:27:55 PM

Title: ~ மொறுமொறு நிப்பெட்... விறுவிறு பச்சடி! ~
Post by: MysteRy on August 24, 2015, 07:27:55 PM
கேப்ஸிகம் பல்சுவை பச்சடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp52a.jpg&hash=d5cee9bc1e247b6dc079682f1f7e243f17193736)

தேவையானவை:

குடமிளகாய் - அரை கிலோ, பச்சை மிளகாய், புளி - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - 250 கிராம் (பொடிக்கவும்), நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குடமிளகாயை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியை நன்றாக கரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தாளித்து... பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி... உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். 15 - 20 நிமிடம் கொதித்ததும், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறவும். எல்லாம் நன்றாக கொதித்து குழம்பு பதம் வரும்போது இறக்கவும். இனிப்பு, காரம், புளிப்பு என பல்வேறு சுவைகளில் அசத்தும் கேப்ஸிகம் பச்சடி தயார்!
இதை  ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கும்... பூரி, சப்பாத்தி, தோசை, உப்புமாவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
Title: Re: ~ மொறுமொறு நிப்பெட்... விறுவிறு பச்சடி! ~
Post by: MysteRy on August 24, 2015, 07:30:24 PM
நிப்பெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F08%2Fmjcyod%2Fimages%2Fp52b.jpg&hash=b0054f0e0da19c2424cf720a8974b2cb64a7f20b)

தேவையானவை:

பச்சரிசி - 2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை - தலா 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை:

அரிசியை வறுத்து ஊறவைத்து... களைந்து, தண்ணீரை வடிய வைக்கவும். பெருங்காயத்தூளை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும். கொத்தமல்லித்தழையைக் கழுவி, பொடியாக நறுக்கவும். அரிசியை கெட்டியாக கொரகொரவென்று அரைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை தனித்தனியாக வாசம் வர வறுக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி கொரகொரப்பாக பொடிக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை கலந்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பருப்புகளின் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயம் கரைத்த நீர், உப்பு, வெண்ணெய், நறுக்கிய கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் போட்டு கெட்டியாக கலந்து வைக்கவும். பின்னர் வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவை சிறுபூரிகளாக தட்டி வைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தட்டி வைத்திருக்கும் பூரிகளைப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.