நிழல் படம் எண் : 043
இந்த களத்தின்
இந்த  நிழல் படம் Kungfu Master அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F043.jpg&hash=09a282b8c3c4a9875bb7213f6da7eff838ef74a2)
			
			
			
				அன்பே!
நான் உன்மீது கொண்ட காதலை 
எப்படி உன்னிடம் சொல்லுவது -என்று 
மனதளவில் பெரிய போராட்டம் என்னுள் 
கடிதம் வழி சொல்லுவதா -இல்லை 
கவிதை வழியாக சொல்லுவதா என்று 
புலம்பி திரிந்த நேரத்தில் 
நண்பன் அறிவுரையால் காதலை 
கவிதையில் சொல்ல துணிந்தேன் 
என் கவிதையே நீதான் -ஆதலால் 
உன்னக ஒரு கவிதை எழுதினேன் 
என் காதலை உன்னிடம் தெரியபடுத்த 
அந்த கவிதையில் என் உயிரை மையாக கொண்டு 
கவிதை தொடுத்தேன் . 
கவிதை எழுத தைரியம் வந்து -ஆனால் 
உன்னிடம் கொடுக்க தைரியம் வரவில்லை 
உன்னோடு பேசிகொண்டு இருக்கும் போது
என் வார்த்தைகள் யாவும் சிக்கிக்கொண்டு நிற்க 
நான் பட்ட துடிப்பு யாருக்கு தெரியும் 
பசித்தது உன்ன முடியவில்லை 
நித்திரை வந்தது நிம்மதியாய் தூங்கவில்லை
பொழுதும் விடிந்தது என் காதலும் விடியும் நேரத்திற்க
 காத்து கொண்டுறிந்த வேலையில் 
தேவதை போல உடை அணிந்து 
தென்றல் காற்றோடு நீ வர உன்னையே ரசித்த படி 
என் அருகில் வந்து உன் பூ விழிகளால் பேசி 
உன் ரோசா பூ இதழால் புன்னகையுடன் 
உன் பிஞ்சு விரல்களை நீட்ட அதில் 
இரண்டு விரல்களில் வரைய பட்ட இதயஓவியம்
மோதிர விரல் நான் என்றும் சுண்டி விரல் நீ என்றும் 
விளக்கம் தர புரிந்தது உன் காதல் சொல்லும் விதம் 
இருவரின் விழிகளும் கலங்க காதல் புரிந்தது