FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 26, 2011, 10:42:09 PM

Title: எங்கள் கண்ணீரை அறியாமல்
Post by: ஸ்ருதி on December 26, 2011, 10:42:09 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm3.static.flickr.com%2F2621%2F3804030814_0b9ae9c9cd.jpg&hash=a99ca4c1723c1d3199c6cabfa48113f2111aa80c)

கருக்கலைப்பு செய்தார்கள்
உயிரோடுக் கொலை..
கொடிப் பிடித்தார்கள்...

பெண் சிசுக்கொலை..
கொலை வெறி கொண்டார்கள்..
அரசு அமைத்தது
அரசு தொட்டில்..
பெண் சிசுவைக் காப்பாற்றினார்கள்....

உயிரைக் கொள்ளும் செயலை
ஆதரிக்க வில்லை எவரும்
ஏனோ கண்டுக் கொள்ளவில்லை
எங்களை...

தினமும் உயிர் இழக்கிறோம்....
வீடு. மேசைக் கட்டில் என்று காட்டை
அழிக்கும் சிலர்...

உயிர்க் கொடுக்கவில்லை நீங்கள்..
அழிக்க மட்டும் நினைப்பது ஏன்..
தண்ணீர் ஊற்றி
எங்களைக் கொஞ்ச வேண்டாம்..
வேரோடு பிடிங்கிக் கொல்லும் போது
நாங்கள் கதறுகிறோம்...
எங்கள் கண்ணீரை அறியாமல்
போவது ஏனோ...

நூறாண்டு வாழும் எங்களை
நொடியில் அழிக்கும் நிலை
என்றுதான் மாறுமோ.....
Title: Re: எங்கள் கண்ணீரை அறியாமல்
Post by: Global Angel on December 26, 2011, 11:20:16 PM

மரங்கள் வெட்டாமல் எப்படி தளபாடம் செய்வது ...? இருந்தாலும் ஒரு மரத்தை வெட்டும்போது இன்னொன்றை உருவாக்கிவிட்டு வெட்டினால் நல்லது  
Title: Re: எங்கள் கண்ணீரை அறியாமல்
Post by: RemO on December 27, 2011, 02:29:25 AM
pattalum nama thiruntha maattom

kudikura thaniya kasu koduththu vangura maari oxy. ah oru naal kasu koduththu vanga vendiya nilamai varum