FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 26, 2011, 10:40:00 PM
-
பல நட்புகள் உண்டு..
பள்ளி நட்பு...
கல்லூரி நட்பு...
பக்கத்து வீட்டு நட்பு..
அலுவலக நட்பு..
செல்லும் இடங்களில் எல்லாம்
எதிர் பாராமல் வரும் நட்பு..
பல நட்புகள் நம்மை அறியாமல்
வலம் வரும் சூழல்....
முகம் தெரியா நட்பு
எங்கள் நட்பு என்றாலும்
முழுமையானது இன்று..
எல்லா நட்பையும் விட
எங்கள் நட்பு புனிதமானது...
பார்த்ததும் இல்லை..
ஒரே ஊரிலும் இல்லை...
தினமும் வருகிறோம்..
தினமும் பழகுகிறோம்..
சுயநலம் இல்லாமல்..
எதிர்பார்ப்பு எதுவும் இல்லை
எங்கள் நட்பில்...
அன்பு மட்டுமே எங்கள் மூலதனம்..
அன்பை கொடுத்து
அன்பை பெறுகிறோம் எந்நாளும்..
ஒருவரை ஒருவர் பாராமல்
காதல் மட்டும் தான் வருமா???
நல்ல நட்பும் வரும்.....
சோர்ந்து இருக்கும் எங்கள் நட்பின்
சோகத்தை பகிர்கிறோம்...
துயர் என்றால் தோள் கொடுப்போம்...
ஆண், பெண் பாகுபாடு இல்லை..
சாதி மதம் இங்கு இல்லை..
எல்லோரும் தமிழர்
இது மட்டும் தான் எங்கள் உணர்வு..
உணர்வை கொண்டு உறவை பெற்றோம்...
உலகம் எங்கும் உண்டு எங்கள் உறவுகள்...
நல்ல நட்பு கிடைப்பது அரிது...
கிடைத்த நட்பை
பொக்கிஷமாக காப்பது
உன் கையில்....
நட்பை மதி..
நட்பை நினை..
நட்பை மறவாதே... ;) ;) ;)
-
நல்ல நட்பு கிடைப்பது அரிது...
கிடைத்த நட்பை
பொக்கிஷமாக காப்பது
உன் கையில்....
நியம்தான் ஆனால் அருமை தெரியாதவர்கள் பலர்
-
kavithai nala than iruku ana eththanai per unmaiya irukanga
neraya per just pesitu poranga avlo than