FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 26, 2011, 10:37:20 PM
-
மனிதனை மனிதன்
பயமுறுத்தும்
சித்துவேலை
பில்லி, சூனியம், செய்வினை
பல பெயர்கள்...
ஏமாற்றும் மந்திரவாதிகள்
அவர்கள் பின்னால்
அலைந்து பணத்தை துலைக்கும்
முட்டாள் கூட்டம்
மூடர்கள்..
படித்தவர்கள், பாமரர்கள்
வேறுபாடு இல்லை
அரசியல்வாதிகளும்
நடிகைகளும் விதி விலக்கா??
இரவு பூஜையில்
நிலை மறந்து
நிஜத்தை இருட்டுக்குள்
துலைத்து
வெட்டவெளியில்
பத்திரிகைகளில் படத்தோடு
அவமானப்பட்டு
வாழ்கையை துலைத்து
கதறுபவர்கள்
நிலை பரிதாபம்...
மனிதனை மந்திரத்தால்
மனிதனால் அழிக்கமுடியுமா??
சொல்லுங்கள்
யார் அந்த மந்திரவாதி
எனக்கும் வேண்டும்
முகவரி???
நாங்களும் செய்ய வேண்டும்
சில சூனிய, செய்வினைகளை..
எங்கள் ஊர்
அரசியல்வாதிகளுக்கு...
அது பலித்தால்
அடுத்து மகிந்தாவுக்கு... ;) ;) ;)
அழிக்கும் சக்தி
நாம் அறிந்தால்
அழித்து விடுவோம்
எதிரிகளை...
தெய்வங்களை நம்பும்
மனிதர்களே
உங்களுக்கு
ஏன் இந்த குறுக்கு புத்தி???
-
ஆமா எனக்கு வேணும் முகவரி .. சாட்ல வைகனும்ய சிலருக்கு ;D
-
அது பலித்தால்
அடுத்து மகிந்தாவுக்கு...
saiththaanuku pilli suniyama :D
Apple yaruku vaika pora nee :D