நிழல் படம் எண் : 054
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Munch  அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F054.jpg&hash=701a1a8e7c915ebaa7f1151a52034408737934a1)
			
			
			
				காதல் சொல்லுவது பல விதம் -அதில்
 ரோஜா பூ கொடுத்து சொல்லுவது ஒரு விதம் 
ஒருவர் ஒருவர் பார்த்து நண்பர்களாக பழகி 
காதலாக மாறும் பொழுது ....
காதலை சொல்ல தயங்கி நிர்ப்பது 
நீ சொல்லுவாயா என்று நான் காத்து இருக்க 
நான் சொல்லுவேன் என்று நீ காத்திருக்க 
நண்பனிடம் சொல்லி அறிவுரை கேட்க ...
நண்பனின் ஆலோசனை படி உன்னை 
சந்தித்து காதலை சொல்ல  வரும் நேரத்தில் 
அதே எண்ணத்தில் நீயும் ஒரு ரோஜா பூவை 
மறைத்து கொண்டு தலை சாய்ந்து .....
ஒரு ஈர புன்னகை கலந்த  வெக்கத்துடன்  
என் அருகில் வர உன்னை கண்டதும் 
உடல் முழுவதும் ஒரு பட படப்பு 
வேர்வை துளிகள்  வழிந்தோடின .....
மனதினை திட படுத்திக்கொண்டும் 
கடவுளை வணங்கியும் உன் பெயரை 
நான் உச்சரிக்க மெதுவாக -உன் 
கரு விழிகளால் ஓர பார்வை வீசும்  பொழுது ...
வந்த தைரியம் என்னை விட்டு சென்றதடி 
வாங்கி வந்த ரோஜா பூவும் நானும் 
வாடி நிற்கும் வேலையில் வாய் திறந்து 
பேச மாட்டாய ஏங்கிய தருணத்தில் ......
நீ ஒளித்து வைத்த  ரோஜா பூவை எடுத்து 
என்னிடம் நீட்டி வாய் பேசாமல் தலை 
குனித்து நிற்கிறாய் நான் வாங்கி வந்த ரோஜா 
போல ஆனதடி உந்தன் முகம் ....
உந்தன் பூவை வாங்கி கொள்ள மனம் துடிக்கிறது 
ஆனால் நீ சொல்லும் அந்த ஒரு வார்த்தையை 
கேட்க என்மனம் .ஏங்கி தவிக்கிறது 
சொல்லுவாயா அன்பே அந்த ஒற்றை சொல் வார்த்தை ....