- 
				
நிழல் படம் எண் : 055
இந்த களத்தின்இந்த  நிழல் படம் mystery   அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc1/21923_374524725974186_1706371407_n.jpg)
			 
			
			- 
				என் இரு கண்கள் வியக்க மெய்னனத்தை மறைத்து 
செயற்கையாய் மகிழ்ச்சி கண்டேன்...
விஞ்ஞான வளர்ச்சியை கையெடுத்து பொய்யான மகிழ்ச்சியில் 
கண்கள் வியக்ககண்டேன்...
அன்பெனும் பலமைதேடி சாலையில்லா கள்ளி 
கிராமம் சென்றேன்...
பந்த பாசம் அறிய என்னை பந்தங்கள் வரவேற்க 
அவர்கள் கண்களில் ஏக்கம் கண்டேன்...
நன் கண்ட கட்சி அது என் இரு தாய் நாண் கரம் கொண்டு  
காளையை சீராட்டும் அந்த மகிழ்சிக்கு இடு என்ன தாயே...
இதுதானோ உண்மையான மகிழ்ச்சி...
(இறைவனை கண்டேன் மழலையின் ஆனந்த சிரிப்பில்) 
செயற்கையாய் தேடும் மகிழ்ச்சி நம்மை வியக்க வைக்கும் 
இயற்கையாய் நாடும் மகிழ்ச்சி நம்மை வாழவைக்கும்...
அன்புடன் 
அம்மு மனோஜ் குமார்... 
			 
			
			- 
				
கண்கள் குளிர்ச்சியாய்  தான் உள்ளது 
இப்பெண்கள்,கவின் கன்னுக்குட்டியை 
பிணி நேறாபடி பனியில் குளிக்கவைக்கும் 
கண்கொள்ளா காட்சியினை காண்பதற்க்கே .
முன்னம் ஒரு நினைவும் என் நினைவில் 
திண்ணமாய் தான் நெஞ்சில் நிழலாடுகின்றது ..
துள்ளித்திரியும் கன்றுக்குட்டியை போலவே 
கன்றுடன் துள்ளி துளித்தான் திரிந்தனர் 
மல்லி முல்லை மலர்களே  தோற்க்கும்
கொள்ளை எழில் கொண்ட, என் செல்ல 
கிள்ளைத்தமிழ் தங்கைகள் முள்ளிவாய்க்காலில்.
இனமென்ற ஒன்றினை இனம்காணாதிருந்தால் 
இனக்கலவரத்திற்கு இணை இனாமாய் 
பிணமாகி இழந்திருக்க வேண்டிருந்திருக்காது 
இனமான என் இரு இளம் தங்கைகளை .
			 
			
			- 
				நீயும் நானும்
நிழலாடிய மரங்களும்
நினைவாடிய செயல்களும்
குழைந்தாடிய  வனப்பும்
நுழைந்தடிய புனலும்
மனதெங்கும் நினைந்தாடுகிறது ...
நாம் கடந்து வந்த
நம் சிறு பருவம் எல்லாம்
பெரும் பொக்கிசங்களாக
மனதின் ஓரத்தில்
மகிழ்வினை பிரசவித்து கொண்டிருகிறது
நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் ...
நுண்ணிய எறும்பு பிடித்தோம்
நூல் கொண்டு பட்டம் விட்டோம்
தெள்ளிய ஓடையிலே
தெவிட்டாது மீன் பிடித்தோம்
துள்ளிய  கன்றடக்கி
தூய்மையாய் நீராட்டினோம்
மெல்லிய சிரிபொலியில்
மகிழ்வின் எல்லைகள் தொட்டோம் ...
பிஞ்சு பருவம்
நஞ்சற்ற அமுதம் ..
வஞ்சகங்கள் தெரிவதில்லை
வன் செயல்களும் புரிவதில்லை
வருந்தி எதிலும் வாயடியதில்லை
எண்ணியதை செய்தோம்
அதில் ஏற்றதாழ்வு இல்லை
கண்ணியம் குறைந்ததில்லை
களவு ஏதும் இருந்ததில்லை ..
இன்று நாம் வளர்ந்து விட்டோம்
நம் இன்பங்கள் எல்லாம் தொலைத்து விட்டோம்
வெறும் வம்பர்கள் மத்தியல்
எய்யும் அம்பென்று ஆகிவிட்டோம் ..
அது எம்மையும் தாக்கலாம்
பிறரையும் தாக்கலாம்
தாகங்கள் நிச்சயிக்கபட்டவை
தடங்கல் இன்றி தன பயணம் அது தொடரும் ...
இருந்தும் ஆழ மனதின் ஆசை ஒன்று
ஓசை எழுப்புகிறது
மீண்டும் அந்த பால்ய பருவம்
மீள் எழுச்சி கொள்ளாதோ ...
			 
			
			- 
				
தன் இரத்தத்தை முறித்து பாலாய் 
கொடும் தாய்  தன் பிள்ளைக்கு 
மட்டும் கொடுக்கும் ஆறு அறிவு 
மனித இனத்திற்கு மத்தியில் ...
ஐந்து அறிவு கொண்ட வாய் இல்ல 
ஜீவன் தன் குழந்தைக்கு மட்டும் -அல்லாமல் 
மனித குலத்திற்கு மருந்தாகவும் 
விருந்தாகவும் பரிசு கொடுக்கிறது ...
அந்த குழந்தை அள்ளுகின்ற பொது 
தாய் இறை தேடி விட்டு செல்ல 
தாய் இல்ல குறையை போக்க 
முடிய விட்டாலும் அதனை ....
தூய்மை செய்யும் இரண்டு 
பிஞ்சு குழந்தைகள் -அவர்களின் 
செல்ல பிள்ளையாய் அன்பு காட்டி 
ஆனந்தம் கொள்ளும் அன்பு மலர்கள் 
உயிர் உள்ள ஜீவன்களின் 
உயிர் நாடியை புரிந்த இரண்டு 
பிஞ்சு மனதில் கள்ளம் இல்லை 
அனைத்தை அறிந்த பெரியவர்கள்
மனதில் ஏன் தோன்றவில்லை
விலங்கும் நம்மை போல 
ஒரு ஜீவன் என்று ?
			 
			
			- 
				குழந்தைகள் குறும்பாய்
குதித்து விளையாடும்  இளங்கன்றை
குளிர்ந்த நீரில் குதுகலமாய்
குளிக்கவைப்பதன் பின்னணி
குலமகளாம் தைமகளை வரவேற்று 
குடும்ப சகிதமாய் கொண்டாடி மகிழும்
குதூகலமிக்க  பொங்கல் விழாவில்
குலமாதவை குளிக்க வைத்து
குடும்பங்கள் யாவும் ஒன்றிணைந்து
குலம் தழைத்திட
குடத்தில் பச்சரிசி இட்டு
குமுறும் தணலில் வேக வைத்து
குழைந்து பொங்கி வரும்போது
குதுகலமாய் பொங்கலோ பொங்கலென கூவி
குலதெய்வத்திற்கு படையலிட்டு
குங்கும திலகமிட்டு
குவித்து வைத்த பசும்புல்லும் படையலில்
கும்பமிட்ட பொங்கலும்
குலமாதவிற்கு குடுத்து மகிழ்வர்.....!!
குடியானவர்கள் நமக்கு விட்டு சென்ற 
குடும்ப விழாக்களும் பண்டிகையும் 
குடும்பமாய் குதுகளிக்கவும்,
கும்மாளமிடவும்  தான்   என்பது 
குடியிருப்பில் குடியேறிய நகரவாசிகளிடம் 
குறைந்து  வருவதன் காரணம்
குறுகிய மனபான்மையோடு வாழ்வதே.....!!
குடியிருப்பில் குடியேறிய நகரவாசிகள்
குறுகிய மனப்பான்மையோடு வாழாமல்
குட்டி செல்லங்களுக்கு உதாரணமாய் இருந்து
குடியானவர்கள் நமக்காக  விட்டு சென்ற
குடும்ப விழாக்கள்  பற்றிய
குறிப்புகளை இளம் தலைமுறைக்கு
குறிப்பு உணர்த்துவீர்கள்  எனில்
குலம் செழிக்கும் .......!!   
			 
			
			- 
				
உன்னுடனான  என்  அறிமுகம் 
நினைக்கையில் இன்று 
சிரிப்பு தான் பதிலாகிறது 
நீயும் என் போல சின்னவள் 
என்று அறியாமல் உன்னிடம் 
 பழக தயங்கிய நான் என்னை 
கண்டால் மிரளும் உன் கண்கள் 
என் கண்களை விட  அழகடி 
நான் சாப்பிடும் அனைத்தும் 
உனக்கும் தர சொல்லி அடம் 
பிடித்து அடிவாங்கிய நாட்கள் 
உனக்காக அகத்தி கீரை எடுக்க 
 போய் அடிபட்ட தழும்பு இன்றும் 
காலிலும் மனதிலும் வடுவாக 
அரக்கு  நிறத்தில் ஆங்காங்கே 
வெள்ளை திட்டுகளில் உன் 
அழகை காண கண் கோடி வேண்டுமடி 
அப்போது  வந்த பொங்கலுக்கு 
உன் நான்கு காலுக்கும் கொலுசு 
போட்டு காதுலே நூல் கோத்து 
தொங்கல் போட்டு மாயிலை மாலையில் 
உனக்கு நான் செய்த அலங்காரத்தில் 
ஊரே சிரித்தது விடு அவங்களுக்கு 
புரியாது நம் நேசம் எங்கே 
 இருகிறாய் என் தோழி உனக்கே 
 உனக்காய் அதே நட்போடு 
காத்துருகிறேன் மீண்டும் 
 சந்திப்போமா ?....
			 
			
			- 
				
வியப்பாகவே உள்ளது
கணினி, சுட்டி, விசைப்பலகை
வீடியோ கேம்ஸ், கார்டூனென
சமூக வாழ்வை அறியாதக்
இக்கால குழந்தையின் உலகத்தில்
வீட்டு விலங்கினிற்கும் இடமிருப்பது
வீடியோ கேம்ஸில் இன்னொருத்தனை
ரத்தம் கொட்ட அடித்து
கோரப்பல் தெரிய வன்மத்தொடு 
எக்களிக்கும் சிரிப்பிற்கும்
ஒரு வளர்ப்பு பிராணியுடன்
விளையாடி மகிழ்வதற்கும்
மிருகத்திற்கும் தெய்வதிற்கும் 
உள்ள தூரமிருக்கிறது
பிற உயிரை நேசித்தலை
செல்லப்பிராணிகளின் குழைவுகள்
கற்றுத்தருகின்றன
ஒரு வீட்டுவிலங்கை பராமறிக்கும் போதும்
நம் மனசையே பராமறிக்கிறோம்
அன்பு வழங்குவதின்
அலாதியையும்
பெறுவதின் சுகத்தையும்
அதுவே நமக்கு புரிய வைக்கிறது
ஒரு பிராணியை வளர்க்கும் போது
அதுவும் பிள்ளைகளும்
நம்பத்துவங்குகிறார்கள்
இந்த உலகத்தில்
நாம் தனித்தில்லை என்று
நம் அன்பை பகிர்ந்து கொள்வதற்கும்
ஏற்றுக் கொள்வதற்கும்
இவ்வுலகத்தில் ஒரு உயிர் இருக்கிறது என்று