-
நிழல் படம் எண் : 058
இந்த களத்தின்இந்த நிழல் படம் SuBaஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F058.jpg&hash=cc2ac484b406aee43416271f27bec4b2ac01186a)
-
நினைத்து நினைத்து பார்க்கத் தான் முடியும் காதலை ....
நினைக்க நினைத்தாலே அருகில் வருமே நட்பு ...!
உருகி உருகி மனம் வருந்த செய்யும் காதல் ....
உருகி உருகி தன் உயிரையும் கொடுக்கத் துணியும் உயிர் நட்பு ...!
காதலுக்கு கண் காது மூக்கு என்னவெல்லாம்
இருக்கோ இல்லையோ தெரியவில்லை ....?
ஆனால் உண்மையான நட்பிற்கு உயிர் மட்டும்
நிச்சயம் இருக்கிறது ....! கண்ணீரின் மதிப்பறியாத
காதலை நேசிப்பதை விட கண்ணீரை துடைத்து விடும்
நட்பை நேசிப்போம் ...!
அர்த்தமற்ற காதலை விட ... ஆயிரம் ஆயிரம்
அர்த்தம் உள்ள நட்பை வணங்குவோம்
நண்பர்களே ....!
.எந்த ஒரு காயத்துக்கும் நண்பன் மருந்தாவான்.
.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே!
.வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
.உரிமை கொண்டாடும் உறவை விட உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
.ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
.உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
.புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்; பழைய நண்பர்களைத் தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். - புதியவர்கள் வெள்ளி என்றால் பழையவர்கள் தங்கம்.
.நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை. தவறு
செய்வதும் இல்லை.
.உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.
.பிரச்னைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
-
உனக்கு பிடித்த மண்வாசத்தில் நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில் நானும்
ஒற்றை குடைக்குள் நாம் விரல்கள் கோர்த்து
சந்தோசத்துடன் நடக்கிறோம் விரல்களின்
ஸ்பரிசத்தில் வலுக்கிறது நம் நட்பு
சந்தோஷம் என்ற அரட்டை மன்றத்தில்
பூத்துக் குலுங்கும் மலர்களை போல்
மகிழ்ச்சி என்ற மழைத் துளியால்
இறைவன் தந்த வாழ்வை இருள்கள்
நீங்ககா .. ஓளி சுடராய் மாற்றுவோம்
வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
குயில் பாடக் கேட்டு குதூகளிப்பதைப் போல்..
நண்பர்கள் அரட்டையில் சந்தோஷப்படும் தினம்
மயிலாடக் கண்டு மகிழ்வதைப் போல்..
பழகி பார்த்து சந்தோஷப்படும் நாம்
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக.....
இதயத்தில் மலர்ந்த நட்பு எது வரை
இதயம் இயக்கம் இறக்கும் வரை
இதயத்தைவிட்டு நீங்குவதில்லை.....
நட்பு பூப்பதற்கு சலனமோ
அர்த்தமற்ற உணர்ச்சிகளோ
தேவையில்லை..
ஒரு இதயம் துடிக்கும் போது யாரும்
கவனிக்க மாட்டார்கள்-ஆனால்
அது நின்ற பிறகு எல்லோரும் துடிப்பார்கள்
உறவுகளை நேசிப்போம் .நட்புகளை சுவாசிப்போம் ..
-
நட்பு அன்புக்கு கிடைத்த வாரிசு
மனிதனுக்கு கிடைத்த பரிசு
நகை இல்லாமல் மனிதன் வாழலாம்
நட்பு இல்லாமல் வாழ்ந்தது இல்லை
நட்பு இல்லாத வாழ்கை நரகம்
கண்கள் இல்லாமல் போனால்
உலகமே இருளாய் தோண்டும்
நட்பு என்னும் உறவுகள்
இல்லையானால் நம் வாழ்கையே
இருளாய் மாறிவிடும் ...
அள்ள அள்ள குறையாத செல்வம் நட்பு
எங்கு சென்றாலும் கூட வருவது நட்பு
உறவில் நல்லது கேட்டது சொல்லி கொடுப்பது நட்பு
உண்மையான நண்பர்களை மட்டும் நிறைய
அறிமுகம் செய்வது நட்பு ...
நட்பு சாதியை சாக்கடையாய் பார்க்கும்
நட்பு மதத்தை காய்ந்த மரமாய் பார்க்கும்
நட்பு பணத்தை பொதி சுமக்கும் கழுதையாய் பார்க்கும்
உண்மையான அன்பை மட்டுமே உயிராய்
கொண்டது தான் நட்பு ....
நாம் வாழும் வாழ்விடம் வெவ்வேறாக இருக்கலாம்
நாம் உண்ணும் உணவு வெவ்வேறாக இருக்கலாம்
நாம் உடுத்தும் உடைகள் வெவ்வேறாக இருக்கலாம்
நாம் வாழ சுவாசிக்கும் மூச்சு காற்று ஒன்றாய்
கலந்து நாம் நட்பு .....
-
நீ எங்கோ நான் எங்கோ பிறந்தோம்
நீ எங்கோ நான் எங்கோ வளர்ந்தோம் .
உன்னை எனக்கு அறிமுக படுத்தியது
நம் இணையத்தளம் தான் ...
நீயும் நானும் சிவப்பா கருப்பா முகம்
பற்றி நாம் சிந்தித்தது இல்லை .
நீ எந்த இனம் மதம் பணம் எதுவும்
பற்றி நாம் சிந்தித்தது இல்லை ....
மனதில் நல்ல நட்பை
நாம் பரிமாறி கொண்டோம்.
துன்பத்தில் நான் துவண்ட நேரத்தில்
எனக்கு துணையாய் நின்றாய் ....
நான் வெற்றி பெற்று என் மகிழ்ச்சியை
உன்னோடு பகிர அதை நீ இரடிப்பாக்கினாய் .
என் நலம் காக்க நம்பிக்கையான
வார்த்தைகளை மட்டுமே என்னுள் விதைத்தாய் ..
லட்சியங்களை மனதில் நிறுத்தி எனக்கு
வாழ கற்று கொடுத்தாய் .
நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசியது தான் அதிகம் ...
உறவுகள் உதாசின படுத்திய நேரத்தில்
எனக்கு உற்ற தோழனாய் இருந்தாய் .
துன்பத்தை கூட நம் நட்பின் மூலம்
இன்பமாக்கி விடுவாய் ...
ஏதேனும் எதிர்பார்ப்புடன் அன்புகாட்டும்
இந்த உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் ,
இல்லாமல் இருக்கும் உன் நட்பை
கண்டு நான் வியந்து இருக்கிறேன் ...
என் வாழ்கை என்னும் தோட்டத்தில்
பல வண்ண நட்பு மலர்கள் ஆனால் ,
உன் நட்பு என்னும் மலரை போல்
எந்த மலரும் மனம் வீசியது இல்லை ...
ஆண் பெண் நட்பின் இலக்கணம் அறியாமல் நட்பை
கலங்க படுத்தும் காலம் இது. நம் நட்பை
நமக்கே தெரியாமல் கேலி பேசும் கேளிக்கை
மனிதர்கள் இருப்பார்கள் கவனமாய் இரு ...
காலம் என்னும் பெருவெள்ளத்தில்
சுமையை என் தலையில் சுமத்தும்
உறவுகளுடன் நான் வாழும் காலம் வரை
தொடர்வாயா உன் நட்பை என் இனிய நண்பா ?...
-
உன்னை உணரவைப்பதும் நட்பு!
உன்னை உயர்த்துவதும் நட்பு!
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு!
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு!
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு!
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
-
எங்கெங்கோ பிறந்தோம்
எதிராளிகள் போல் சண்டை போட்டோம்
ஏமாந்த பொழுதெல்லாம்
ஏமாறுபவர் தலையில்
மிளகாய் அரைத்தோம்
இறுமாந்த பொழுதெல்லாம்
வெறுமாந்து பொழுதுகளாய்
நட்ப்பு என்பது ஒரு கூடு
அதில் நம்பிக்கை என்பது நூலு
கூட்டில் ஆயிரம் ஆயிரம் பறவைகள் மாறலாம்
அன்றிலாய் சில பறவைகள் வாழலாம்
தென்றலாய் பல புயல்களும் வீசலாம்
தெரிந்தே பல பிரிவுகள் நேரலாம்
தெவிட்டாத பல நினைவுகள் வாழலாம்
நித்தம் நித்தம் பல இன்பங்கள் சூழலாம்
நினைவுகளே சந்கீதமாகலாம்
நீ இன்றி நான் இல்லை எனும்
கதி ஒன்றும் தோன்றலாம்
உன் தோல்விகள் எல்லாம்
பல கண்களில் கண்ணீரும் ஆகலாம்
எட்டாத உயர்வுக்கு நீ சென்றும் வாழலாம்
எள்ளி நகையாடுவோர்க்கு
எஹ்ஹு போல் வளையாது நிற்கலாம்
வற்றாத ஜீவநதியாய் வளங்கள் பல தோன்றலாம்
கட்டாத கோவிலுக்கு தெய்வமும் ஆகலாம்
காலம் தவறாத பூஜைகளும் நடக்கலாம்
கடை கண் பார்வைக்கு கன்னியரும் ஏங்கலாம் ..
கான்போர்கெல்லாம் கண்ணியமாய் தோன்றலாம்
இவை எல்லாம்
நட்பெனும் கூடு இணைத்த
நம்பிக்கை எனும் நூல் அறும் வரைதான் .
-
உறவுகள் ஆயிரமிருப்பினும்
உணர்வுகளில் பிறந்து,
உயிரில் கலந்து ,
உறவுகளுக்கெல்லாம் ஒரு
உறவாய் நட்பு மட்டுமே!
காதல் போல கவிழ்ப்பது அல்ல
கரைதெரியா கடலாயினும்
கரை சேர்க்க கடற்கரையில்
கலங்கரை விளக்காய்
காலூன்றும் உறவு நட்பு!
உடன் பிறப்பாயினும், உற்றார்
உறவினராயினும், பகைவனாயினும்
ஒற்றுமை ஒன்று, குருதியின் நிறம்,
குருதியைப் போல நிறம் மாறா
நினைவு மாறா உறவு நட்பு!
சிறுவினை பெரும் பிளவுகள்
ஏற்க்கும் பட்சத்தில், பிரிவை அறியா
பாசம் மாறா, சாதி மதம் பாரா,
உண்மையான உள்ளத்தைமட்டும்
பார்க்கும் உறவு நட்பு!
நம்பிக்கையின் அடையாளம்,
நல் வழிப்பாதையின் வழிகாட்டி,
அன்பின் ஆயுதம், ஆலயம்
சென்று காணா கடவுள்,
நட்பு ஒன்றே!
ஆண்டவன் படைத்த உறவுகளுள்,
தரிகெட்டுப்போகும், முறிக்கும்
உறவுகளுள், முடிவுறா உறவாய்,
முடிந்தாலும் தொடரும் உறவாய்,
நட்பு ஒன்றே!
காதலி இறந்தால் தம்மக்கள் இறந்தார்
நானுமிரந்தேன், கேள்விப்படா ஒன்று
நண்பனிரந்தான் நானுமிரந்தேன், உயிர்
கொடுப்பது நட்பு, எடுப்பதில்லை,கொன்று
வாழும் உலகில் நின்று வாழும் ஒரே உறவு நட்பு!
பிறந்தோம் வளர்ந்தோம்,
வாழ்வே வீண்தான்,
சாதிக்க வேண்டாம், சகமனிதனும்
சாகும்வரை பேசவேண்டாமா!
நல்ல மனிதன், நல்ல நண்பன் என்று,
நட்புக்கு உதாரணமாக நம்மையும்,
நாம் சேர்க்கும் உறவையும், பிறரை
கரித்துக்கொட்டும் இவ்வுலகில்!
நல்ல நட்பை சுவாசித்து வாழு,
உனக்கென உறைவிடம் உண்டாக்கு
உன் நன்பன் இதயத்தில், அவன்
ஆறுதல் சொல்கையில் உன் கண்ணீர்கூட
தேன்சுவை கூட்டும், வெற்றியின் ஆயுதமாகும்!!!
நடப்பு இரு உடலில் வாழும் ஒரு உயிர்!!!
-
"நட்பு.........
நட்பின் புனிதம் தெரியாதவர்
நட்பென்ற சொல்லுக்கு இலக்கணம் அறிவாரோ ?
நட்பு மனதை பார்க்கும் பணத்தை பார்க்காது
குணத்தை பார்க்கும் இனத்தை பார்க்காது
ஆண் பெண் பேதம் பார்க்காது
உள்ளத்தை நேசிக்கும்
உயிரை தரும்
உணர்வுகளை மீட்டும் ஸ்வரமாக
உயிரையும் மீட்கும் இதமாக
கண்டிக்கும் சில நேரம்
தண்டிக்கவும் செய்யும் பல நேரம்
தாயாக,சேயாக,தந்தையாக,தனயனாக
ஊன் உயிர் எல்லாமாக இருக்கும் அந்நட்பு
கிடைத்தற்கரியது தானே
கிடைத்தால் போற்றுங்கள்
தூற்றாமல் வாழுங்கள் எடுத்துக்காட்டாய் .....
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு - குறள்
பொருள்: அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது மானம் காக்க கைகள் எவ்வாறு உதவுகின்றனவோ அதுபோல துன்பம் வரும் வேளையில் நட்பிற்கு தீங்கு ஏற்படாமல் காப்பதே உண்மையான நட்பு.
கல்வி சாலைகளில்
கவலையின்றி துள்ளித்திரிந்த
காளையர் கூட்டம் நாங்கள்........
சாதிமத பேதமின்றி
சகலரும் சாதித்திடவே
சைன்யமானவர்கள் நாங்கள்........
ஆணும், பெண்ணும்,
இன வேறுபாடின்றி எவ்வித
இடஒதுக்கீடுமின்றி ஒன்றாய்
பழகியவர்கள் நாங்கள்.....
தோல் தொட்ட நண்பர்கள்
வான் முட்ட வளர்வதை கண்டு
போட்டி, பொறாமையின்றி
ஆனந்தபட்டவர்கள் நாங்கள்.....
நண்பர்கள் பெருகின்ற வெற்றியை
நாமே பெற்றதாய் எண்ணி
நகைத்து மகிழ்ந்தவர்கள் நாங்கள்..
தோல்வி கண்டது நண்பனாயினும்
தனக்கே நிகழ்ந்ததாய் எண்ணி
துயருற்றவர்கள் நாங்கள்....
தோல்வியை கண்டு துவண்டிடாமல்
வெற்றியின் சிகரத்தை எட்டிட மீண்டும்
முயற்சிக்கும் பீனிக்ஸ் பறவைகள் நாங்கள்
போற்றுவதும், தூற்றுவதும்
எங்களுக்குள் சகஜம் என்றாலும்
பிறர் தூற்ற அனுமதிகாதவர்கள் நாங்கள்...
உண்மையில் அனைவரும்
உறவில்லை எனினும்
உறவுகளாய் வாழ்ந்தவர்கள் நாங்கள்...
நண்பர்களின் இதயத்தில் வசித்து
அவர்களின் எண்ணங்களை வாசித்து
நட்பை சுவாசித்தவர்கள் நாங்கள்....
தேர்வில் வெற்றி பெற உந்துசக்தியாய்
துவங்கிய எண்களின் நட்பு
வாழ்வை துவக்கிய நாட்களிலும்
ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காதவர்கள் நாங்கள்..
செம்மையான நட்பு மேலும்
செழுமை பெற்று வாழ்வில் வளம்பெற
வழிகாட்டிகளாய் உதவுபவர்கள் நாங்கள்....!!
நட்பிற்காக ஒருவரை ஒருவர்
காணாமலே வடக்கிருந்து உயிர்துறந்த
நட்பின் சிகரம் பிசிராந்தையாரை போல்
நட்பிற்கு இலக்கணமாய் வாழ
முயற்சிபவர்கள் நாங்கள்......!!