-
நிழல் படம் எண் : 059
இந்த களத்தின்இந்த நிழல் படம் Kanmani அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F059.jpg&hash=7b832ef71f2ada7cbbe77bf57995e6d34eae6c06)
-
அவ்வளவு நேரம் வலி சுமந்து நான் பிறந்த நிமிடம்
பூரிப்படைந்து நிம்மதி அடைந்தால் என் அன்னை .
ஆனால் என் தந்தையே நீயோ ,அடுத்த நிமிடத்தில் இருந்து
தாய்க்கும் எனக்குமாய் வாழ தொடங்கினாய் ....
நான் நடைபழகிய காலங்களில் என் கை பிடித்து
எனக்கு நடை பழக்கினாய் .
என் அறிவுக்கு முதல் எழுத்தை எனக்கு
அறிமுகபடுத்தி என்னை எழுதவைத்தாய் ...
நான் பள்ளிக்கு போக அடம்பிடித்த நாளில் உன்
தோளிலே சுமந்து சென்று தோழனாய் நின்றாய் .
என் வாழ்க்கை தரத்தை உன் கடின
உழைப்பால் உயர்த்திவிட்டாய் ...
ஓடிவந்து உன் கழுத்தை நான் கட்டிக்கொள்ள
என்னை அனைத்து உச்சிமுகர்ந்து கன்னம்
உரசி நீ பேசும் போது என்னுள் பல
வண்ணங்களில் மழைச்சாரல்கள் ...
அதிகாலை இலைகளில் படியும் பனித்துளியை
ரசிக்க கற்றுகொடுத்தாய் .
பூத்துகுலுங்கும் மலர்களின் வாசத்தை
சுவாசிக்க கற்றுகொடுத்தாய் ...
சாலையோர கடைகளில் தேநீரை
ருசிக்க கற்றுகொடுத்தாய் .
ஐந்துஅறிவு ஜீவராசிகளை கூட
நேசிக்க கற்றுகொடுத்தாய் ....
உறவுகளுடன் விட்டுகொடுத்து வாழும்
பழக்கத்தை சொல்லிகொடுத்தாய் .
எதிராளியை குட மன்னித்து நண்பனாக்கும்
பண்பை என்னுள் வளர்த்துவிட்டாய் ...
உனக்கு பிடித்த பிடிக்காத எல்லாம் எனக்காய்
விட்டுகொடுத்து எனக்கு பிடித்த எல்லாம்
உனக்கும் பிடித்ததாய் மாற்றினாய் ...
என்னிடம் மற்றவர்கள் பாசத்தை பலவழிகளில்
உணர்த்துவார்கள் நீ என் கையை அழுத்தி
கோர்க்கும்போது உன் பாசம் நான் உணர்வேன் ...
பிறர் சொல்லி கேட்டு இருக்கேன் நீ
என்னை பெருமையாக பேசியதை .
அம்மா அடித்து சொல்லியும் என் தவறை உணராத
நான் உன் முகம்வாட்டத்தில் உணர்ந்தேன் ...
எவ்வளவு சகஜமாக பழகுகிறார் உன் தந்தை
என்று என் நட்புக்கள் சொல்லும் போது தான்
பார்க்கிறேன் யாருக்கும் கிடைக்காத
தந்தை எனக்கு மட்டும் ...
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள் .
சில நேரங்களில் சில நாள்களில்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம் ....
-
வார முழுதும் பணி சென்று பள்ளி சென்று களைப்புற்று
கொண்டாட உல்லாசம் வந்திருப்பரோ... அப்படியாயின்
மௌனமான இடத்தினும் இவர் மௌனம் கொள்வதேனோ ...
இவர் முன் இருப்பது தண்ணீரோ...
அல்லதிவர் சிந்திய கண்ணீரோ...
நீரின் பிரதிபலிப்பில் மௌன ராகம் பாடும்
இரு குயில்களின் வாடிய முகங்கள்…
இவன் அம்மா என்று கூப்பிட ... அம்மாவின்
குரல் 'மகனே' என்று பதிலுரைகாது….அம்மலையின்
எதிரொலியே கேட்கும்
இவர் 'அடியே' என்று கூப்பிட... அன்பான
துணைவியின் குரலில் 'என்னங்க' என்றிருக்காது .. அவ்விடமும்
மலையின் குறுக்கீடு..
தாயின் தேடலில் இவனும் ...
துணைவியின் பிரிவில் அவரும்…
இவ்விருவரின் துயரும்…
அதை களைவதற்கிருப்பரோ இனியெவரும்....?
ஏக்கத்தில் இவர்கள்
-
அப்பனும் பிள்ளையும் அருகருகே
ஒன்றாய் அமரக் கூசியது அக்காலம்
உனக்குத் தோழனாகி வாழ்க்கையின்
வடிவம் பற்றி விவரிக்கிறேன்.
வானம் வரை வளர்ந்திருந்தாலும்
அடிவாரத்தில் தான் ஆரம்பிக்கிறது மலை
விளக்குகளால் பொழுதை
விடிய வைக்கமுடியாது மகனே;
சூரியனாய்ச் சிந்தித்திரு
சூரியச் சிந்தனைதான் தேவை
விடியலுக்கு.
நான் நடக்கும் போது நாற்காலி ஆக்கினேன்
என் தோள்களை - உனக்கு ஏன் தெரியுமா?
எனக்குத் தெரியாத உயரமும் தூரமும்
உனக்குத் தெரிய வேண்டும் என்றுதான்.
தனிமரமாய் தனித்து விட்டாலும்
தவித்து விடாதே- தனிமரம்
தோப்பாகாது என்பர் -தளர்ந்து விடாதே
தனிமரம் தோப்பு ஆக்கும்!
உன்னிடம் ஒரு விண்ணப்பம் - நீ
உண்பது மட்டுமே உனக்குச் சொந்தம்;
வீணடிப்பதோ வேறொருவர் பங்கடா.
வாழ்க்கை பந்தயக் களமடா - மகனே
பந்தயக் களத்தில் காலமெல்லாம்
படுத்து உறங்கியவன் பதக்கம் வெல்லக்கூடுமோ?
தோற்கப் பிறந்தவனல்ல நீ
ஆற்றலில் எரிமலை நீ
ஆற்று வெள்ளத்தில் சிக்கியவனுக்கு
படகு கிடைத்தால்-அவன் பாக்கியசாலிதான்,
மரக்கிளை கிடைத்தாலும் - அதை
மறுத்துவிடக் கூடாது
மரக்கிளையும் கரை சேர்க்கும்;
சந்தர்ப்பம் சில நேரம்
மரக்கிளை போல் கிடைக்கும்!
வளரும் போது ஞாபகத்தில் வை,
ஆலமரம் போல பரந்து வளர்ந்தால்
ஆயிரம் ஆயிரம் பேர் இளைப்பாறுவார்;
எழுவதும் பின் விழுவதும் அலைகளுக்கு
வேண்டுமானால் அழகாய் இருக்கலாம்-ஆனால்
எழுச்சி மட்டுமே மனிதனுக்கு அழகு.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi359.photobucket.com%2Falbums%2Foo34%2Fwdandpat%2FThank%2520You%2FDiamondRoseplus_glitter_signed-1.gif&hash=bb629bd4a3441584264374840a53b8b34a06c3bc)
-
வா! மகனே !வா !
வாழ்க்கைக் கலையை
நாம் இருவருமே
சேர்ந்து கற்கலாம்
விஞ்ஞானம் மெய்ப்பிக்கா
விஷயங்கள் பொய்யென்று
விடியலை பழிக்கின்ற விந்தை
உலகமிது.ஒன்றை நாம் உணரவேண்டும்
மரணத்தின் சந்தோசமும்
முதுமையின் மகிழ்ச்சியும்
ஆன்மீகம் மட்டும் தான் உறுதிசெய்யும்.
இது என் அப்பாவின் வழியாய்
நான் அறிந்த உண்மை
கண்களுக்கு வெளியே
நிகழ்வது எல்லாம்
நிஜமும் அல்ல.
இமைகளுக்கு பின்னல்
கனவுத் திரையில் காண்பது
எல்லாம்பொய்யும் அல்ல .
வாழ்வு பொய்யென்று
வாழும் மனிதனுக்குநாம்
வாழ்த்துப் பாடமுடியாது மகனே!
சபலம் தொடாத அன்பனை
அவலம் தொட நாம் அனுமதிக்க கூடாது
மகனே! வா! மகனே!
சிந்திக்க தெரிந்தமனிதனுக்கு வாய்த்த
சிகரம் எதுவென்றுநாம் அறியவேண்டும்.
அது இமயத்தின் முடியில் இல்லை-ஆனால்
நம் இதயத்தின் மடியில் இருக்கிறது.
ஆழ்ந்து சுவாசிப்போம் மகனே!
நீதி மொழிகள்அதிகம் வாசிப்போம்
வஞ்சகம் செய்வோரையும்வாழ்த்தி நேசிப்போம்.
எதிரி என்றாலும் புன்னகையால் வசிகரிப்போம்,
இளம் வயதினில் நீ சிறுகச்
சிறுக சேமித்த அனுபவத்தை
உன் சந்தோசத்தை என் முதுமைப்
பருவத்தில்உனக்கு பாடமாக!!!
ஆயினும் உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு நான்
கற்றுக்கொடுத்தேன் உனக்கு
வாழ்க்கை இதுதானென்று
-
என் தந்தைக்கு சமர்ப்பணம் !
பத்து மாதம் கருவில் சுமந்து
தாய் என்னை பெற்றாலும்
என் வாழ்கைக்கு வழி காட்டி
நீதானே அப்பா!
அன்பாய் அரவணைத்து
நிலா சோறு ஊட்ட தாய் இருந்தாலும்
நான் உறங்கும் தொட்டில் உன்
மடிதானே அப்பா !
நான் நடை பழக நடைவண்டி ஆனாய் !
நான் கல்வி பயில குருவானாய் !
நான் துள்ளி விளையாட பொம்மையாய் !
நான் சிரிக்கும் சிரிப்பை ரசிகனாய் !
ஆனாய் அப்பா !
நான் உந்தன் மடியில் உறங்கிக்கொண்டு
உந்தன் மார்பில் எட்டி உதைக்கும் போது
என்னையே நெஞ்சில் உதைத்து விட்டாய்
நீ வீரன் என்றாய் அப்பா !
நாட்கள் நீண்டது விவரம் அறியும் வயதில்
என்னைவிட்டு பிரிந்து நம் தேசத்திற்கு
எல்லை படை வீரனாய் சென்றாய்
அப்பா !
தினம் தினம் உந்தன் ஞாபகம்
என்னை தழுவும் போதெல்லாம்
அப்பா என்று கண்ணீர் விட்டு அழுகும்
போது தாய் சமாதானத்தில் அப்போது
மறந்து மீண்டும் உன்னை தேடுவேன் அப்பா !
அன்று சிறுவயதில் என்னைவிட்டு
பிரிந்து வாழ்ந்தாய் எங்கள் நலன்காய்
இன்று உன்னை விட்டு பிரிந்து
உன் நினைவலையில் தவிக்கின்றேன் அப்பா !
நான் தவறு செய்யும் போது ஓடிவருவாள்
கண்டிப்பதற்காக அம்மா உன் பின் ஓடி
வந்து ஒளிய அம்மாவை சமாதனம் செய்து
சிரித்து கொண்டே அறிவுரை சொல்லுவாயே அப்பா !
உன் அறிவுரையாலும் உன் அன்பினாலும்
என்னை நல்வழி படுத்தி உலகத்திற்கு
அறிமுகம் செய்தாய் உன்னை போல
அன்பு காட்ட எந்த தந்தையும் இல்லை ...
என் ஆசைகளை புரிந்து அனைத்தையும்
செய்தாய் இன்று உன்னோடு இருந்து
பணிவிடை செய்ய என்னால் முடியவில்லையே
கவலையுடன் உங்கள் மகன் !