FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 26, 2011, 10:32:58 PM

Title: பாழ் நிலம்
Post by: ஸ்ருதி on December 26, 2011, 10:32:58 PM

பாழ் நிலம் வானுயர மாறியது
சீனாவின் தொழில் நுட்பத்தால்
விளை நிலம் மாளிகையாகி
விவசாயிகளின் வாழ்வு
பாழாய் போனது,
நம்மவர்களின் மதி(கெட்ட) நுட்பத்தால்..
வீடு கட்ட நிலங்களையும்,
தொழிற்சாலைகளால்
காற்றையும் ஆற்றையும்
மாசு படுத்தி
பணத்தை சேகரித்து
மருத்துவமனையில்
ஆயுள் கால உறுப்பினராய்
அவசர அவசரமாய் சேர்ந்து விட்டோம்
விவசாயம் செய்ய நிலம் தேவை
இந்த சுழல் வந்துவிடுமோ???
பணத்துக்காய் பறந்து
பணயக்கைதியாக மாறி
கண்ணீர் விடும் கூட்டம்..
பசுமை நிறைந்து கிடக்கும் நாடு
பாதுகாக்க நாதி இல்லாமல்
பாழாய் போகிறது..
பாதுகாக்க ஆள் இல்லை
பதுக்கவே ஆள் அதிகம்...
விளைநிலத்தை அழித்து
விண்ணைத் தொடும்
கட்டிடம் கட்டும் அறிவாளிகளே
மொட்டை மடியில் பயிரிடும்
வித்தையும், வழியையும்
செய்து தாருங்கள்..
இனிவரும் சுழலில்
அடுத்த தலைமுறைக்கு
உபயோகப்படும்...
Title: Re: பாழ் நிலம்
Post by: Global Angel on December 26, 2011, 11:11:54 PM
போகுற போக்கை பார்த்தல் இப்டிதான் மொட்டை மாடிகளில் பயிர் செய்வார்கள் போலும்  
Title: Re: பாழ் நிலம்
Post by: RemO on December 27, 2011, 03:46:47 AM
Quote
மொட்டை மடியில் பயிரிடும்
வித்தையும், வழியையும்
செய்து தாருங்கள்..

ithu kandipa nadaka pokuthu