நிழல் படம் எண் : 061
இந்த களத்தின்இந்த நிழல் படம் IMP அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.ragpc.com%2Ffamilylaw.gif&hash=ef161ad4fe77538627500e45955e493222ba3779)
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்த
காலம் போய் ஆயிரம் பொய் சொல்லி
விவாகரத்து வாங்கும் காலமாகி போனது ...
பெரும் வலியை பெற்றோருக்கு கொடுத்து
தெருமுக்கு பிள்ளையாரிடம் பிரியாத வரம் வாங்கி
அதிவேகத்தில் முடிந்த திருமணம் சடுதியில் முடிந்தது ....
காதலில் பிழை இல்லை .
காதலர்களில் தான் பிழை
காதலில் இரு மனம் மட்டுமே போதும் ...
திருமணம் என்று வரும்போது
ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, கவுரவம் ,
நிறம் வந்து தடுமாற வைக்கிறது ...
அதையும் கடந்து திருமணத்தில் இணைந்தால்
சிலரது காதலில் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாததால்
இன்பத்தையும் தாண்டி வெறுப்பே மிஞ்சிகிறது ....
சிலருக்கு தாலி கட்டும் போது
இருக்கும் சந்தோஷத்தை விட கழட்டும் போது
நிம்மதி பெரிதாக இருக்கிறது ...
கட்டிய தாலி சுருக்காக மாறும் போது
பாவம் அவளும் தான் என்ன செய்வாள்
இல்லை அவன் தான் என்ன செய்வான் ....
சிலரோ அழிந்து போகும்
அழகு இல்லை என்று அழகான
வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ...
உள்ளமே நிரந்தரம். உள்ளத்தில்
வையுங்கள் உங்கள் துணையை .
பிள்ளையை பாச பட்டினி போடாதீர்கள் ...
ஆயிரம் பேர் வாழ்த்தியதில்
தொடங்கிய வாழ்க்கை
ஒருவரின் தீர்ப்பில் முறிவது நியாயமா ?...
புரியாத வயதில் பிரியாத வரமும்
வாழவேண்டிய வயதில் விவாகரத்தும்
இன்றைய கலாச்சாரம் ஆகி போகுது ...
காதலர்கள் பிரியலாம் .
கணவன் மனைவி பிரியலாம் .
ஆனால் தாய் தந்தை பிரியக்கூடாது ...
இனிமையாய் வாழ்ந்த வாழ்கையை
ஒரு முறை நினைத்து பாருங்கள்
அனைத்தையும் மறந்து வாழுங்கள் ....
உங்கள் பிள்ளைக்காக ....
திருமணம் ஒரு புனிதமான உறவு
பெரியவர்களால் பொருத்தம் பார்த்து
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன்
அக்கினி சாட்சியாய் நடை பெறுவது ......
இதில் ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ள
நாட்கள் தேவைப்படும் -ஆனால்
அவசரமாய் கணவன் மனைவி
ஒருவரைஒருவர் புரிந்துகொள்ளும்
முன்னே குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் ...
ஒரு குறுப்பிட்ட நாளில் இருவரிடம்
குழப்பங்கள் நிலவுகிறது !
குழப்பங்களை இருவரும் மனம் விட்டு
பேசினால் மட்டுமே இதற்க்கு
விடைகான முடியும் .....
சரியான முடிவை எடுக்காத
விளைவு இருவர்க்கும் பிரிவு
இருவரின் சந்தோசத்தை மட்டும்
பார்க்கும் கணவன் மனைவி
தன் குழந்தையை தவிக்கவிடுகிறார்கள் ....
பிஞ்சு குழந்தைன் தவிப்பு
அவர்கள் மனதில் ஒரு துளி கூட
எழுவதில்லை தாய் தந்தை
இருந்தும் சிறகு ஒடிந்த கிளியாய்
வாழ்க்கை தொடர்கிறது .....
ஒருவருக்கொருவர் புரிந்து
இரண்டு இதயங்கள் இணைந்து
குழந்தை பெற்று எடுத்தால்
குழந்தைக்கு மட்டும் அல்ல
குடும்பத்திற்கே மகிழ்ச்சி நிலை பெரும் ....