FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 20, 2015, 09:44:15 PM

Title: ~ குழந்தைகளுக்கான கண் மை தயாரிப்பு : ~
Post by: MysteRy on August 20, 2015, 09:44:15 PM
குழந்தைகளுக்கான கண் மை தயாரிப்பு :

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11873461_1486699161627554_850715133068112382_n.jpg?oh=195dee327f9e0c75f26c871806b35e5c&oe=567868A8)

வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச்சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச்சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி, மீண்டும் தோய்த்துமீண்டும் உலர்த்தி, பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ளவேண்டும்.
பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில், மேற்படி கரிசலாங்கண்ணிச்சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றைஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சட்டியை அந்தவிளக்கின்மீது காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறுபார்த்துக் கொள்வதுஅவசியம்.மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியைவழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்துவெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள்அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒருகாதந்தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம்இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.
வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல்இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் இல்லை.கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல்,மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.