FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 20, 2015, 08:52:28 PM

Title: ~ நார்ச்சத்து குறைபாடா? என்ன சாப்பிடலாம் ~
Post by: MysteRy on August 20, 2015, 08:52:28 PM
நார்ச்சத்து குறைபாடா? என்ன சாப்பிடலாம்

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11222128_1486705674960236_7903621238140960561_n.jpg?oh=60fba4f46278e7651b2e89c9ef39d3ae&oe=566F5139)

உணவு வகைகளை சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு வதக்குவதன் மூலமும் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன.

ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன் மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம்.

உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது.

ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம், சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.

உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படும். எனவே வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.

என்ன சாப்பிடலாம்?

நார்ச்சத்து குறைபாடா

ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள், கேக், பிஸ்கட், இனிப்புகளை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.

ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.

இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

குறிப்பு: நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.