FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 26, 2011, 10:28:49 PM

Title: உணருவர் எவரோ???
Post by: ஸ்ருதி on December 26, 2011, 10:28:49 PM
ஓசையில்லா மொழி
உதடுகளை அசைத்தேன்
ஓசை இல்லை..
"ஊமை" புதுப் பெயர் சூடினேன்...
ஓசையில்லா மொழி என் மொழி

மொழி இல்லாததால்
உணர்வுகளும்
ஊமையாகியாதோ....

பலரின் சலிப்பும்
சிலரின் பரிதாப பார்வையும்
ஊனத்தையும் ஊமையாக்கியதே....
என் ஓசையில்லா மொழியை
உணருவர் எவரோ

ஒரு முறையேனும்
என் குரல் ஒலிக்காதா??
உன் மன ஏக்கத்தை
பார்வையால் உணர்த்த
மௌனமொழி பரிட்சயமானதால்
ஏக்கத்தை உணர்ந்து
"அம்மா" உன்னை எனக்கு பிடிக்கும்..
நீ இல்லாமல் நான் இல்லை"
என் கடைசிக் கதறல்....
ஓசையில்லா என் மொழியை
உணராமலே என்னை பிரிந்தாய்..

ஓசையில்லா என் மொழியை
உன் மரண படுக்கையில்
உணர்த்த முடியாத
ஊமையானேன்..

நிஜமாய் உன்னை பிரிந்த
அன்றுதான் ஊமையே ஆனேன்..
என் ஓசையில்லா மொழியை
உணருவர் எவரோ???

Title: Re: உணருவர் எவரோ???
Post by: Global Angel on December 26, 2011, 11:07:05 PM
இதே கவிதையை ஏற்கனவே ஸ்ருதி பிரசுரித்திருகின்றிர்கள்  என்று நினைக்குறேன் ... சரி பார்த்து கொள்ளுங்கள்  
Title: Re: உணருவர் எவரோ???
Post by: RemO on December 27, 2011, 03:51:58 AM
இதே கவிதையை ஏற்கனவே ஸ்ருதி பிரசுரித்திருகின்றிர்கள்  என்று நினைக்குறேன் ... சரி பார்த்து கொள்ளுங்கள்

Ama shur already post panita [/size]