FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 20, 2015, 08:19:30 PM

Title: ~ ஆரஞ்சு தோல் குழம்பு ~
Post by: MysteRy on August 20, 2015, 08:19:30 PM
ஆரஞ்சு தோல் குழம்பு

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11169160_1487071811590289_1782304579699638485_n.jpg?oh=7d6ee99f02e4d31d6d5d91dec5336e4f&oe=5641C623)

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு தோல் - 2 பழத்தினுடைய தோல்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தியம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

• ஆரஞ்சு பழத்திலிருந்து தோலை பிரித்து தனியாக எடுத்து நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

• புளியை கெட்டியாக கரைத்து, அதில் உப்பு, வெல்லம் போட்டு கரைத்து கொள்ளவும்..

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, அதில் ஆரஞ்சு தோல் போட்டு வதக்கவும்.

• அடுத்து புளி தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைக்கவும்.

• குழம்பு திக்காக வரும் வரை கொதிக்க விடவும். புளி குழம்புக்கு கொதிக்க வைப்பதை போல் கொதிக்கவிடவும்.

• திக்காக வந்ததும் இறக்கி விடவும்.

• தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.