-
நிழல் படம் எண் : 065
இந்த களத்தின்இந்த நிழல் படம் Pavi அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F065.jpg&hash=ed2b6e6bdfa4a447f7000ef6b453c066a647fb08)
-
காதல்
மானுடம் தன் தோன்றலின்
மாபெரும் மந்திரம்
மனிதமும் மனிதநேயமும்
மங்கிடாது மேம்படுத்தும் வரம்
மதத்துவம், சாதித்துவம்
மட்டுமன்றி தனித்துவத்திற்கும்
மரணஅடி கொடுக்கும் மகத்துவம்
காதல்
காதலின் இத்தனை மேன்மைகளையும்
கண்டும்,கற்றும்,உணர்ந்திடாத போதும்
உள்ளூர உணர்ந்திடும் ஆவலில்
அதன் உன்னதம் போற்றிடுவனாய் நான்
காணாதே,கேட்காதே,பேசாதே எனும் கோட்பாடுகளில்
தீயவையோடு வலுக்கட்டாயமாய்
காதலையும் உட்புகுத்தியவள் நீ ...
எதிரெதிர் கருத்துக்களை கொண்டிருந்தபோதிலும்
எதிரியாயின்றி ,உயர் தண்டவாளங்களாய் இருந்து
வாழ்கை தொடர் வண்டியை செலுத்துவோமே
நலிவிலா நல்நட்பெனும் உந்துசக்தியை கொண்டு .
-
இந்த பூமியே அழகாய் போனது,
உன் புன்னகை தோரனத்தால்...
உண்மைதானே..நிலவும் பூமியை சுற்றுகிறது,
பூமியில் நீ இருக்கும் காரணத்தால்.
மலர் சோலையை கடந்த காற்று வந்து போகும்
போது, தேன்மலர் வாசம் சேர்ந்து வீசுவது போல
என்னருகே.நீ வந்து பேசும் போது உன் விழிகளில்
ஏதோ ஒரு பாசம் வந்து வழியுதே.
என் இதயம் துடிக்க தான் செய்கிறது
கடிகாரம் போல் ஆனால் ஒரு வித்தியாசம்
அதில் இரு முல்களியில் ஒன்று இழந்த
பின்னும் துடிக்க தான் செய்கிறது
என் மீது உள்ள காதலாள் என் இதயம்
தனிமையின் நடை பயணம்
சிரிக்காத வானம் தலை துவட்டாத மரங்கள்
பூப்படையாத பூக்கள் கண்விழிக்காத காலநிலை
கருவிற்குள் காலைநேரம் கரு பிரசவிக்க சில மணித்துளிகள்
என் கையினுள் சிறைபட்ட உன் கை எனக்கு துணை நீயாக
உனக்கு துணை நானாக நமக்கு துணையை இயற்கை
உன்னோடு நடை பயணம் தென்றலுக்கும் இடமளிக்காத நெருக்கம்
உறைய வைக்கும் பனி மழையில் இருவர் சுவாச சூட்டிலும் சுகம்
கண்கள் மட்டுமே பேசிக்கொள்ள உதடுகள் உறவாடி கொள்ள
உன்னோடு நடை பயணம் நம்மோடு நம் காதல் பயணம்
இது ஒன்று போதும் உன் மடியில் என் சுவாசம் சுருங்க
நிலைகள் தடுமாறினாலும் நெஞ்சில் நீ வேண்டும்...
உன்கண் சிமிட்டல் நேரங்களில்
கார்த்திகையும் மார்கழியும்
தானாய் கடந்துவிடாதா
பிறை பிறக்கும் முன்னே
நீ பிறந்தாயோ அதனால்தான்
பிறைகூட போட்டியிட்டு
தோற்று போய் தேய்கிறதோ
இரவு கூட பிறந்துவிடும்
எத்தனை முறை வேண்டுமானாலும்
நீ வெட்கம்கொண்ட நிமிடத்திலே
வெயிலும் மறைந்துவிடுகிறதே
கால்கொண்டு விதைக்கிறாயா
காதல்பூ விதைகளை
எத்திவைக்கும் அடிகளிலே
எப்படித்தான் காய்க்கிறதோ பூக்கிறதோ,,,
கொடைக்கானல் பருவக்காற்றும்
பொறாமைக்கொண்டு விலகிவிடாதா
உன் கோடைக்கால வரவைக்கண்டு
கொத்துக்கொத்தாய் திராட்சையும்
போதையூறி விழுந்துவிடாதா,,,
நீ எட்டிப்பார்க்கும் அழகைக்கண்டு
இருக்கின்ற நாளெல்லாம்
பொறாமைக்கொண்டு ஓடிவிடாதா
உன்பிறந்த நாளில் உன்னைக்கண்டு,,,
நீ ஜனித்தபொழுதே
தீர்மானித்துவிட்டாயா,,,
பிரம்மனை தோற்கடித்துவிட
எத்தனையோ ராமன்களுமல்லவா
இங்கே தசாவதாரம் வேண்டி மரிக்கிறார்கள்
சத்தியமாய் சொல்வதென்றால்
நீ பார்க்கும் அந்த நொடி,,,,!!
நிச்சயமாய் வேண்டுமடி
-
உன்னையும் என்னையும்
மீறிய காதல் பயணத்தில்
என்றோ இணைந்த பயணிகள் நாம்
இந்த காதல் பயணத்தின்
முடிவு தெரியவில்லை
இடம் மாறுதல்களும் புரிவதில்லை
தடு மாறுதலும் தெரிவதில்லை
எதிர் எதிராக
வெறும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தோம்
இன்று காதல் எனும் புத்தகத்தை
கை கோர்த்து படிக்கின்றோம்
எதோ ஒரு சந்தர்பத்தில்
கை தன் இணைப்பை தளர்த்தலாம்
காதல் பாடத்தின் பகுதி மாறலாம்
கல்யாணத்தில் அதன் விகுதி தொடங்கலாம்
அன்றில் பாதை மாறலாம்
பயணங்கள் தோற்கலாம்
உனக்கும் எனக்குமான
உன்னத காதல் சமாந்தரங்கள்
பிரிவினால் இணையாது போகலாம்
வாழ்வு முழுமைக்குமான இந்த அன்பை
வாழ்ந்து முடிக்க
நாம் மட்டுமல்ல
நம்மை போல் பலரும் துடிகின்றனர்
தம் காதல் பயணத்தில்
எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்
இணையக் காதல் .
-
அன்பே!
அழகு ஓவியமாய் உன்னை
வரைந்தார் உன் தந்தை !
அதற்க்கு உயிர் கொடுத்தவள்
உன் தாய் !
இப்படி ஒரு உயிர் ஓவியமாய்
சேர்ந்து படைத்தனால்
பிரம்மனைவிட-அவர்கள்
உயர்ந்தவர்கள் !
அன்னையின் அரவணைப்பிலும்
தந்தையின் அறிவுரையாலும்
சகோதரனின் ஊக்கத்தினாலும்
தன்னால் எதையும் சாதிக்கமுடியும் -என்று
சாதித்து கட்டினாய் !
சாதிப்பதற்கு முன்பு தாய் தந்தை
பெயரை சொல்லி உன்னை
உறவினர்கள்கு அடையலாம்
தெரிவித்தாய் !
சாதித்தற்கு பின்பு
உன் பெயரை சொல்லி- தாய்
தந்தையை அடையாளம் காட்டவைத்து
உன்னை பெற்றவர்கள்க்கு
பெருமையை சேர்த்தாய் !
கள்ளம் இல்லாத மனதாய்
வளர்க்க பட்ட உன்னை
உன் மனதை களவாட வந்த
கள்வன் நான் ஆனேன் !
மழையில்கூட நனையாத உன்னை
காதல் மழையில் நனையவைத்தேன் !
பூ போல இருந்த உன்னை -உனக்கு
பூ சூடும் காதலன் ஆனேன் .....
புன்னகை புயலாய் இருந்த உன் உள்ளதை
புரட்டி போட வந்த சூறாவளி ஆனேன் !
அறிவுகடலில் மூழ்கிய உன்னை
அன்பு கடலில் மூழ்க வைத்து
என் காதலியாய் ஆக்கிக்கொண்டேன் !
அன்று முதல் என் சுவாசம் நீ ஆனாய்
என் வாசமும் நீ ஆனாய் !
கண் முன்னே வந்து செல்லும் கவிதை நீ ஆனாய்
கண் மூடி தூங்கிய நேரத்தில் கனவும் நீ ஆனாய் !
கோடை கால வெப்பமும் நீ ஆனாய்
வெப்பத்தை தணிக்கும் தென்றலும் நீ ஆனாய் !
மார்கழி மாத மழையும் நீ ஆனாய் !
தொடாத தூரத்தில் இருக்கும் வானம் நீ ஆனாய் !
தொட்டு பேசும் மழலை குழந்தையும் நீ ஆனாய் !
கவிதை எழுத கற்று கொடுத்த காதலி நீ ஆனாய் !
என் கைகோர்த்து கால் நடை பயணமாய்
வருபவளும் நீ ஆனாய் !
புகை போட்ட அக்கினியை ஒருவர் கையை
ஒருவர் பிடித்து வளம் வரவேண்டிய நாம்
இன்று புகை வண்டி தடத்தில் ஒத்திகை பார்க்கிறோம்
புது வாழ்க்கை பயணம் தொடர்வதற்காக !
-
முகம் பார்த்து சில நட்புகள் பிறக்கும்
அன்பு கண்டு சில நட்புகள் வளரும்
பணம் பார்த்து சில நட்புகள் தொடரும்
கஷ்டம் வரும் போது தான் உண்மையான நட்பு புரியும் ...
எப்படி வந்தது நமக்குள் நட்பு
சுவாசம் வந்தது எப்படி நண்பா .
அப்படி தான் வந்தது நட்பும்
நமக்கே தெரியாமல் ...
அன்பு காட்ட தாய் இருக்க
அரவணைக்க தந்தை இருக்க
உதவி செய்ய உடன் பிறப்பு இருக்க
இவை அனைத்துமாக நட்பாய் நீ இருக்க ...
இதயத்தின் வழியாக கண்கள் பேசுவது காதல்
உரிமையின் வழியாக உணர்வுகள் பேசுவது நட்பு .
என் இதயத்திற்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவருமே எனக்காக துடிப்பவர்கள் ...
பால்ய காலத்தில் கை கோர்த்து
பள்ளி சென்ற நாட்களை மறக்க முடியுமா .
மாலை நேர சிற்றுண்டியை பகிர்ந்து
உண்டு மழிந்ததை மறக்க முடியுமா ...
இரவு முழுவதும் கண்விழித்து தொலைபேசியில்
அரட்டை அடித்தது மறக்க முடியுமா .
உனக்காய் நானும் எனக்காய் நீயும்
பாடம் எழுதி வந்ததை மறக்க முடியுமா ...
கல்லூரி முழுதும் நம் நட்பை
காதல் என்று நினைத்தவர்களுக்கு
நமக்குள் வெறும் நட்பு மட்டுமே
சொல்லி புரிய வைத்தது மறக்க முடியுமா ...
முதன் முறையாக நம் பங்கு குருவிடம் உன்னை
அறிமுகம் செய்ய அவர் முகத்தில் இருந்த கலக்கத்தை
போக்கும் விதமாக இவன் எனக்காய் இறைவன்
"நிச்சயிக்க பட்ட நண்பன் " மட்டுமே
என்று சொன்னது மறக்க முடியுமா ...
உனக்கான உன் காதல் உன்னை தேடி வந்த நேரம்
அது நம் நட்பை பிரிக்கும் என்று அஞ்சி
எனக்காக காதல் வேண்டாம் என்றாயே
அதை தான் மறக்க முடியுமா ...
என் நட்பு மட்டுமே உன் வாழ்க்கை ஆகாது
இவள் உன் வாழ்க்கைக்கு நல்ல துணை என்று சொல்ல
அன்போடு அவள் காதலை நீ ஏற்று
கொண்ட நாளை தான் மறக்க முடியுமா ...
இன்று படிப்பு முடிந்து பணியில் அமரும்
தருவாயில் உள்ளோம் வாழ்க்கையில் எவ்வளவு
இடையூறு வந்தாலும் அதனை சம்மட்டியால்
அடித்து நொறுக்க நீ இருக்கும் போது என்னடா கவலை ...
சில நேரங்களால் காலங்கள் மாறலாம்
ஏக்கங்களினால் எண்ணங்கள் மாறலாம்
கற்பனைகளினால் கனவுகள் கூட மாறலாம்
இறைவன் நினைத்தாலும் மாற்ற முடியாதது
நம் நட்பு ஒன்று தான் ...
நீ இருக்கும் வரை உன் நினைவில்
நான் இருக்க வேண்டும்.
நான் இறக்கும் நேரத்தில் கூட
உன் நினைவு என்னோடு இருக்க வேண்டும் ...
நம் நட்பை கோர்த்து தண்டவாளம்
அமைத்து அதில் வாழ்க்கை என்ற புகை வண்டியை
செலுத்த நம் பயணம் முழுவதும் தடங்கள்
இன்றி இனிதே அமையும் நண்பனே ..கீச் .கீச்..கூ ...கூ
-
இணை பிரியா வாழ்க்கை
இதயம் கவர்ந்தவளோடு வாழ்ந்திட
இனம் புரியா கற்பனைகளும்
இன்னும் எட்டா ஏக்கங்களும்
மாயவன் மனதில் குடிகொள்ள
மனதில் நின்ற மாதுவை
மையல்கொள்வது தொட்டுவிடும் தூரமென
மனம் நினைத்தாலும்
இணை போல் காட்சி அளிக்கும்
இணை சேரா புகைவண்டி தடமாய்,
இன்றளவும் அவள் தொடாவானம்.................!!
காதல்பயண தடத்தில் தடம்புரளாமல்
கை கோர்த்து பழகும் நடை பேரானந்தம்
அனைவரும் எளிதில்
கால்பதிக்கும் காதல் தடத்தில்
தடுமாற்றம் வருமென்ற அச்சத்தில்
கால்தடம் பதிக்கவில்லையடி அன்பே........!!
நிலைகாற்றில் நிழலாடும் நின் படம்
நிலைத்து நிற்கும் ஒரு தடம்
கண நேரத்தில் தோன்றி மறைந்தாலும்
கண்ணுறக்கம் தொலைந்ததடி
ஆதியில் காதல் தோன்றியும்
அதை ஆழத்திலேயே புதைத்திருகிறேனடி.
ஆயர் பாடி கண்ணனாய்,
கோபியரை கொஞ்சும் கோபலானாய்,
காதல்லீலை புரியும் மன்மதனாய்,
ஏகத்திற்கும் இல்லாமல் நின் கரம்பற்றும்
ஏகபத்தினி விரதனாய்- உன்
உள்ளம் கொள்ளைகொள்ளும்
கள்வனாய் காத்திருக்கிறேன் கண்ணே....!
ஆனாய் பிறந்தவனுக்கு
உன் அடி சேர ஆசை இருக்காதோ...?
காற்றினில் கலந்தவளே - என்
கற்பனையில் மிகுந்தவளே
அழகு மனகோலம் பூண்டு
அருகினில் வந்துவிடு அடியவனை
அள்ளி அணைத்து முத்தமிடு....!!