-
நிழல் படம் எண் : 066
இந்த களத்தின்இந்த நிழல் படம் vimal அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.ellenwhiteexposed.com%2Fimages%2Fmarriage2.gif&hash=8924c6e627e198c94648ec87752c8fcc6f26bf78)
-
அடிக்கடி மவுனங்களால்மனதை
உறைய வைக்கிறாய் அடிக்கடி புன்னகையால்
மனதைஉரசிப் புண்ணாக்குகிறாய்!
நம் மனதின் தேசியகீதமேமவுனம்தானோ?
தினம் ஒரு பூவைச் சூடுபவளே
என் மனதில் சூடிய ஒரு பூவே
வாழ்நாள் முழுதும் மனம் வீசிக்கொண்டிருப்பது
உனக்கெப்படித் தெரியும் அது நீயாய் இருந்தும்?
பேச்சில்லை நீ பேசும்போது மூச்சில்லை நீ பார்க்கும்போது
நானேயில்லை நீ இல்லாதபோது.
என் அவளே! உன்னை நான்
என்னவளாக்குவது எப்போது
புரியாத மொழியைஎல்லாம்
மனதில் நிறுத்துபவளே
புரிந்த என் காதலை
மனதின் ஓரத்திலாவது
வைக்க மாட்டாயா
நான் பூக்களாக இருந்திருந்தால்
உன் முடிகளையாவது மணம் முடித்திருப்பேன்
நான் பொட்டாக இருந்திருந்தால்
உன் முகத்திலாவது முழுமையாய் ஒட்டியிருப்பேன்
நான் காதலனாகி இருப்பதனால்தானோ
உன் நினைவுகளில்கூட ஒட்ட முடியவில்லை
-
காதல் கூட தும்மலை போன்றது
எப்போ யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது .
அதே போல தான் திருமணமும் யாருக்கு
எப்போது அமையும் என்று சொல்ல முடியாது ...
திருமணம் என்ற பெயரில் இங்கே
படிப்பும் படிப்பும் தானே இணைகிறது
பணமும் பணமும் தானே சேர்கிறது
ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமணம் எப்போது ?...
திருமணம் சிலரின் வற்புறுத்தலினாலும்
சிலரின் கட்டாயத்தினாலும் இடம் பெரும்
ஒரு வைபவம் என்றால் அது திருமணமே இல்லை
அப்பெண்ணுக்கு நடக்கும் தீராத கொடுமை ...
நன்றாக கல்வி பயின்று கொண்டிருக்கும் பெண் அவளை
வந்து பார்த்து பிடித்திருகிறது இன்று முதல் இவள்
எங்கள் வீட்டு பெண் தொடர்கல்வியை நாங்கள்
பொறுப்பு என்று கூறி சிலுவையில் ஏற்றினால்
அதற்க்கு பெயர் திருமணம் இல்லை ....
அன்றே பார்த்து சம்மதம் சொல்லி
அடுத்த மாதமே திருமணம் வைத்து
ஆயிரம் காலத்து பயிரை ஒரு மாதத்தில்அறுவடை
செய்து பதராய் கிடப்பதா திருமணம் ...
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும்
வந்தவர்களின் உண்மை முகம் அறியாமல்
பெற்றோர்கள் கடன் மேல் கடன் பெற்று
பெண்ணுக்கு நல்லது செய்வதாய் நினைத்து
பாழும் கிணற்றில் தள்ளுவதா திருமணம் ...
ஆசிர்வாதத்தோடு செல்கிறாள்
ஆயுள் கைதியாக .
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அடிமையாய்
ஒருவனிடத்தில் இதற்க்கா திருமணம் ...
சுதந்திர கிளியாய் இருந்தவளை
கூண்டு கிளியாய் மாற்றுவதா திருமணம்? .
கூண்டை உடைக்கவும் முடியாமல் கூண்டில்
இருக்கவும் முடியாமல் இருகிறதே
பலரது வாழ்க்கை இதுவா திருமணம் ...
பறக்கும் தும்பி பூச்சியின் வாலில்
நூலை கட்டிவிடுவதா திருமணம்? .
நூலோடு போகவும் முடியாமல்
வாலறுக்க முடியாமல் சிக்கலில் இருகிறதே
சிலரது வாழ்க்கை இதுவா திருமணம் ...
அவனோடு கைகோர்த்து வாழ்க்கை என்னும்
ஒற்றையடி பாதையில் நம்பி வந்தவளை
விட்டு விலகி வேறு பாதையில் நடக்கிறான்
அவன் நினைவோடு அதே பாதையில் இவள் நின்றுருக்க
அவன் வேறு ஒருவலுடன் செல்வதா திருமணம் ...
திருமணத்தை வியாபாரமாக பார்க்காதீர்கள்
ஒரு தலை பட்சமாக பார்க்காதீர்கள் .
இருமனம் இணையும் திருமணம்
புரிந்து கொண்டபின் முன்வரனும் ...
திருமணம் வாழ்க்கையில் இன்பதுன்பம் பகிரத்தான்
யுத்தம் செய்வதற்கு அல்ல.
நறுமணம் வீசும் வாழ்க்கை உங்கள் மனதில் தான் உள்ளது
உங்களின் வாழ்க்கை பயணம் வெகுதூரம் உள்ளது
ஆதலால் மனம் புரிந்து ஆகட்டும் திருமணம் ...
-
என் கண்களின் வழியே
நுழைந்து என் இதயத்தில்
இடம் பிடித்து மனதோடு
இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தவளே !
மூச்சு காற்றை சுவாசிக்க மறந்தாலும்
என் நெஞ்சில் குடி அமர்ந்து
நினைவுகளில் கலந்த உன்னை
ஒரு நொடிகூட நினைக்க மறந்ததில்லை ....
காதலில் மட்டும் தொடர்ந்த வாழ்க்கை
காதல் திருமணம் கொண்டு
உந்தன் கரம் பிடிக்கும் நாள்
நம் செவிகள்கு விருந்து அமைந்தது ...
பெற்றோர் இருவர் மனதை புரிந்து
இரு வீட்டாரும் அமர்ந்து நல்ல முடிவு செய்ய
காதல் செய்யும் போது இருந்த மகிழ்ச்சி
இரண்டு மடங்கு அதிகம் ஆனது
திருமண வேலைகள் வேகமா நடந்தது ...
உனக்கு பிடித்த அனைத்து ஆடைகளையும்
உன்னை உரிமை ஆக்கிகொள்ளும்
தாலி வரை என் உழைப்பில்
என் ரசனைக்கு ஏற்றது போல வாங்க ....
மனபந்தலில் அமரும் நாள் வந்தது
மணமாலை சூடும் நாளும் வந்தது
பெரியவர்கள் சொல்லுவார்கள் ...
சொர்க்கத்தில் நிர்ச்சயக்க பட்ட திருமணம் -என்று
ஆனால் எனக்கு நீ கிடைத்து சொர்க்கம் என்பேன் ....
அன்பே எல்லா நேரங்களிலும்
நீயும் தாயும் ஒன்றுதான்
ஒரு சில நேரங்களில் மட்டும் குழந்தையாய் நீ
உன்னை குழந்தை போல அரவணைத்து
வாழ்நாள் முழுவது உன்னை காப்பேன் அன்போடு !
-
வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது
பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...
மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?
விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற வரிவடிவம் புலப்படுகிறது ...
இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...
விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...
-
காதல் என்னும் சொல்..
என் இதயத்தை துளைத்த நொடி..
அது நீ என் அருகில் இருக்கும்..
இந்நொடி..!
வியக்கிறேன்..!
என் காதல் தேவதையுடன் திருமணமா என்று..?
வியக்கிறேன்..!
தேவதையினும் நீ அழகு என்று..!
வியக்கிறேன்..!
பால் நிலவினும் ..
சுத்தமான காதல் இதயம் கொண்டவள்..
நீ என்று..!
புவியீர்ப்பில் உலகம் சுழலவில்லை..
காதலில் நம் இதயங்கள் இணைந்ததால் தான்..
சுழல்கிறது..!
என்றுணர்கிறேன்..!
என் இதயத்தை அசைத்தவளே..
காதலில் விழுகிறேன்..
என் இதயத்தை .. நனைத்தவளே..
உன்னில் சரிகிறேன்..
காதலனாய் உன்னை காதலிக்கிறேன்..!
சுவாசமாய் உன்னை சுவாசிக்கிறேன்..
இதயமாய் உன்னை நேசிக்கிறேன்..
என் இதய துடிப்பை நிறுத்திய.. நீ..
காதலியாக .. இன்று.. என் அருகில்..!
நாளை என் மனைவியாக என் அருகில்..
இனி.. விரைவில் ..
உன்னோடு திருமண வாழ்வில்.. துணையாக வரபோகிறேன்..
அடி என்னவளே..!
என் இனிய இதயமே..!
இன்று என் அணைப்பில்.. அடங்கிய நீ..
அன்று.. என் பார்வையை கூட விலக்கியதேனோ..?
நம் திருமணத்திற்காக.. காக்க வைத்தேன் என்றோ.?
-
சொந்தபந்தம் வேணாமடி
உன் இதயத்தில் விழுந்து விட்ட எனக்கு
காதல் என்ற கரம் கொடு போதும்
வாழ்கையை நான் கொடுக்கிறேன்
என பசப்பு மொழியில் தொடங்கும் காதல்.
உன்னிடம் நான் உயிரையே வைத்திருக்கிறேன்
உனக்காக எதுவும் செய்வேன் என்று கூறி
உரிமை கொண்டு நம்பிக்கை ஊற்றி
எதற்கும் துணிய வைக்கும் காதல் .
காதல் பூக்களை போன்றதாம்
சில நாளில் வாடி போகும் பூக்களின்
வாழ்வு போல ஒரு வாழ்க்கை.
அநேகமான காதல் பொழுது போக்காய்
அன்றாடம் கண்ணீருடன் முடிகிறது.
காதல் கண்களை போன்றது
இருவரின் பார்வையும் அன்பு கொண்டு
நோக்கினால் மட்டுமே வாழ்க்கை பயணம் சிறக்கும்
மாறாக கண்ணிர் வடிக்க விடாதீர்கள் ....
ஜாதி ,மதம் ,அந்தஸ்து பொருத்தம் பார்த்து
மணம் முடிக்கும் பெற்றோரே,
இரு மனங்களும் பொருந்தியதா என்றும் பாரும் .
அசையும் அசையா சொத்தை அளக்கும் பெரியோரே
அவர்களின் மனதையும் அளந்தபின்
முடியும் திருமணத்தை ...
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம்தான்.
இதை உணர்ந்தால் மட்டுமே இனிய வாழ்வு சாத்தியம்
இல்லையேல் நரகத்தில் வசிக்கும் உணர்வு அனுதினமும்.
ஆதலால் நேசியுங்கள் உங்கள் வாழ்க்கை துணையை ..
திருமண பந்தத்தை உறுதியாய் கொண்டு தொடரும் காதலும்
அன்பு,காதல்,நேசம் இவற்றை உறுதியாய் கொண்டு
தொடரும் திருமண பந்தமுமே இனிய வாழ்வுக்கு வழி .
உள்ளத்தால் உண்மையை நேசியுங்கள் வாழ்க்கை துணையை
இனிதான வாழ்வு உங்களை நேசிக்கும் என்றென்றும்...