-
நிழல் படம் எண் : 069
இந்த களத்தின்இந்த நிழல் படம் MysteRyஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/406059_268194956640898_994841876_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
கடக்க நினைக்கும் பாதைகள் யாவும்
கண் முன்னே விரிந்தாலும்
இந்த சிட்டு நடக்கும் வயல்வெளியில்
தெரியும் பசுமை என் வாழ்வில் இல்லை
நடந்து செல்லும் இந்த
சின்ன குழந்தையின் பாத
சுவடுகள் போல் மரத்து போன
என் நெஞ்சில் நீங்காத நினைவுகள்..
சிறு வயதில் பல்லாங்குழியும், பாண்டியும்
ஆடி மகிழ்ந்த அந்த கிராமத்து உறவுகள்
எங்கே போயின ...
விலை நிலங்கள் ரசாயனக கூடங்கள்
வயல்வெளிகள் எல்லாம் கூட கோபுரங்கள்
என்ன செய்வது இனி வரும் காலங்களில் ,
நமது அடுத்த சந்ததியனருக்கு
வயல்வெளியை இந்த மாதிரி
புகைப்பட பதிவுகளில் தான் கண்மிக்க்க வேண்டும்
என்று நினைக்கிறேன் ...
-
கடவுளும் குழந்தையும் ஒன்று
என்று சொல்லுவார்கள் ..
இருவரும் பூமியை காக்கிறார்கள் ...
இந்த குழ்ந்தை குடை பிடித்து
இந்த பூமியை காக்கின்றது ..
வாடும் பயிர்களை கண்டு
என் மனம் வாடியது என்று
பாட்டு பாடாமல்
வருமுன் காப்போம்
என குடை பிடித்த குழ்ந்தை
சொல் வடிக்கும் நம்மை விட பெரியவள்
-
உன்னை காக்க நீ குடைபிடிதாய்!
மண்ணை காக்க வானம் மறைந்தது,
சாரல் துளிகளால்!
நீ புன்னகை உதிர மறந்தால்,
உன் தாய் அழுவாள்...
வானமது மழையை உதிர்க்க மறந்தால்,
பூமித்தாய் எறிவாள்!
மழையது மறைந்தால்,
விவசாயி புதைவான்...
விவசாயி புதைந்தாள்,
நாம் எங்கே உயிருடன்!
விரிந்திருக்கும் வயல்வெளி,
உன்னை போன்று மலரதானோ...
மழைவரும் வேலையில்,
அந்தி சாய்ந்த பொழுதில்,,
நனைய நினைகிறது!
மழை வரும் நேரத்தில்,
குடையை மறந்துவிட்டு,,
அழகிய மயிலாய் தோகையை விரி..,
அந்த அழகிய நிலவும்...
உன்னை கண்டு வியக்கும்!!!
-
யாரும் இல்லாத வயல்வெளியில்
மழைச்சாரலில் குடையுடன்
ஆடிய வண்ணம் நடக்கும் சிறுமி,
வானவில் கண்ட மழலை
சிரிப்பைப்போல் இரசித்த
வண்ணம் நடக்கிறாள் சிறுமி...
அவள் நனைந்து விட
கூடாதென குடை பிடிக்கிறாள்,
மழையில் நனையப்போகிறேன்
என சந்தோசப்படுகிறது குடை...
விவசாயி அழுகிறான்
அவன் வயல்வெளி எண்ணி
வயல்வெளி அழுகிறது
என்னை கவனிக்கவில்லை என்று...
பூமித்தாய் மழையினால்
வறண்டு கிடக்கும்
என் பூமி குளிர்மை அடைகிறது
என ஆனந்தம் அடைகிறாள்,
மழை நீ வருவதால்
எவ்வளவு இன்பம், துன்பம் ..
உன் வருகை அளவோடு தேவை ...!!!!
-
தன்னை காத்து கொண்டு
சிறு குழந்தை அவள்,
நடக்கின்ற பாதை...
பசுமையான வயல் வெளியோ!
மழை இன்றி கிராமப்புற மக்கள்,
பசியால் வயிர் எரிந்து கொண்டிருப்பவர்..,
மழை வரும் நேரம் இன்றாலும்,
துள்ளி குதிக்கும் மக்கள் ஆவர்!
மரங்களை வதைத்து,
பயிர்களை எரித்து,
ஏரிகளை மறித்து,
கட்டடங்களை கட்டும் இக்காலத்தினருக்கு,
யார் புரிய வைப்பாரோ!
துயரம் ஏற்படுவது அவருக்கே என்று!
இயற்கை வளத்தை காக்க,
நாமும் முனைவோம்,
தேசத்தையும் வளர்த்துவோம்!
-
கொட்டும் மழைதனில்
கையில் குடையின்றி
குதித்து ஆடி
குளித்திட ஆசை.....!!
வாட்டும் குளிரிலும்
போர்த்திக் கொள்ளாமல்
மின்விசிறி சுற்ற
சிலிர்த்திட ஆசை ....!!
சாரல் அடித்தாலும்
சாளரம் அடைக்காது
சில்லென்ற காற்றில்
சுகம்பெற ஆசை ....!!
மழை விட்டபோது
மரத்தடி சென்று
மரக்கிளை உலுக்கி
மீண்டும் நனையஆசை ...!!
மொட்டை மாடியில்
நீர்வழி அடைத்து
தேங்கிய நீரில்
நடனமிட ஆசை ....!!
மின்விளக்கின் ஒளியில்
மின்னிடும் துளிகளை
சரமாய்க் கோர்த்து
அணிந்திட ஆசை ....!!
வீதியில் ஓடும்
மாரித் தண்ணீரில்
காகிதக் கப்பல்
செய்துவிட ஆசை ....!!
உள்ளங் கையை
வெளியில் நீட்டி
துளிவிழுந்து தெறிக்கும்
அழகுரசிக்க ஆசை ...!!
மழைத் தண்ணீரை
தங்கைமீது தெளித்து
அடிக்க வருகையில்
ஓடிஒளிய ஆசை ....!!
- siamala rajasekar
-
உன் பொற்பாதம் பட்டதால்
வறண்ட பாலைவனமெங்கும்
பசுமை கோலம் பூண்டதோ !
பசுமை கோலம் கொண்டதால்
மனம் குளிர்ந்து வான் மழையும்
பொழிந்ததோ!
மழையின் நீர் துளிகள்
உன் பொற்பாதங்களில் பட்டு
துள்ளி குதித்து விளையாடியதோ!
குட்டி தேவதையே நீ குடை பிடித்து
நடந்து வரும் அழகில் மயங்கி
நெற்பயிர்களும் காற்றில் அசைந்தாடி
நடனம் புரிகிறதோ
உன் பாதங்கள் புவி எங்கும்
ஓடி ஆடட்டும் எங்கும்
சோலை வனமாய் பூத்துக்
குலுங்கட்டும் பூமகளும் மனம் குளிரட்டும் ..........ஆம் இந்த பூமாதேவியும் மனம் குளிரட்டும் .......
-
விதை இட்டு மழை பொழியாதோ
வறுமையின் நிறம் மாறாதோ
வயறு பசி தீராதோ -என்று
வானம் பார்த்து ஏங்கிய மக்களின்
கவலையை உணர்ந்த -வான் தேவதை
வறண்டு கிடந்த நிலத்தில் மழையை
பொழிய செய்து பசுமையைகொடுத்தல்
மக்களின் மனதில் குதுகுலத்தை வரவைத்தல்
வளமை நிறைந்த வயல்களின் நடுவே....
குழந்தை போல குடைசுமந்து
பவனிவரும் வரும் அழகை கண்டு
பசுமையான பயிர்கள் தலைதாழ்த்தி
வரவேற்ப்பு செய்யும் பொது ...
வானம் அவளை சூந்துகொண்டு
சின்ன சின்ன சாரல் மழையால்
அவளின் பாதம் தொட்டு வணங்கியது ..