FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on November 22, 2013, 05:04:10 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 070
Post by: MysteRy on November 22, 2013, 05:04:10 PM
நிழல் படம் எண் : 070
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sameeraஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F070.jpg&hash=07c00d31f760ea14ba722ade2dd2b4b0950cfc22)
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: SowMiYa on November 26, 2013, 04:29:03 PM
சச்சின் தெண்டுல்கர் – க்ரிக்கெட் தொல்காப்பியர் !!!

சச்சின்.. இந்திய அணிக்கு ஒளிதரும் அணிகலன்
உருவில் சிறியவன் ஆனால் சாதனையின் சிகரம்
மழலைச் சிறுவர்க்கும் மனம் விரும்பும் தோழன்
வயதில் பெரியவர்க்கும் ஓர் நம்பிக்கை நாயகன்.

“பேட்”டிங்க் நுணுக்கங்கள் மூளையின் ஒவ்வொரு அணுவிலும் - நம்
நாட்டின் பெறுமைகள் இவன் ஈட்டிய ஒவ்வொரு நூறிலும்

வீசிய பந்தை மெல்லத் திசைதிருப்பி ஓட்டிடும் வல்லமை சொன்னவன்
ஏற்றியே நெஞ்சைக் குறிவைத்த வீச்சை தூற்றித் துரத்தியவன் – முன்னங்
காலிலே வீழ்ந்த பந்தை நெம்பி நிமிர்த்தி நேராக விரட்டியவன் – குறி
மாற்றியே வீசினும் வாரிச் சுழற்றி நேர்த்தியாய் வீசி அடிப்பவன்

பந்து வீச்சாளன் திகைத்து நிற்பான்.. இவன் வீழ்வானா ? என நினைப்பான்
பத்து வீரர்கள் வளைத்து நின்று வ்யூகம் அமைத்தாலும் – எங்கள் சச்சின்..
சற்று “பேட்”டின் தலை சாய்த்து பதமாக பந்தின் முதுகு வருடி – வீரரிடை
நுழைத் துருட்டி எல்லைக்கு அப்பாலே எழிலாக அனுப்பி வைப்பான்.

இவையாவும் க்ரிக்கெட் “மட்டையடி” இலக்கணங்கள் என்று சொன்னான்
அதனால்தான் நான் சொல்வேன் “சச்சின் ஒரு தொல்காப்பியன்” என்று – ஆம்
இவன் போல எவரேனும் இலக்கணத்தை சொன்னதுண்டோ ? சொல்லுங்கள்.
“சச்சின் தெண்டுல்கர்” – “க்ரிக்கெட் தொல்காப்பியன்” – சால்ப்பொருந்தும்

இலக்கனைத்தும் தொட்டவனே !! இலக்கணங்கள் படைத்தவனே !!
இளைப்பாரும் நேரமிதே... உன் நினைப்பாலே நாம் நெகிழ்வோம் !!
இருனூறு போட்டி கண்டான் !! இவன் “நூறு - நூறு” வென்றான் !!
ஒரு நூறு கோடி நெஞ்சம் உன் புகழ் ஓங்க பாடி நிற்கும்

வாழ்க !! வாழ்க !! எங்கள் சச்சின் ........


ஜ. கி. ஆதி
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Maran on November 27, 2013, 02:46:58 PM
இன்னும்
சற்று நேரம்
இருந்திருக்கலாம்...
என் விளையாட்டை ரசிப்பதற்கு - ஆதவன்

ம்ம்...
காத்திருக்கிறேன்
நல்ல விடியலுக்காக ...

எதிர்பார்ப்புகள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்
எங்கோ...  ஏதோ சூழலில்,
பால்ய நண்பரிடம்
கைகுலுக்கும் போது
கண்முன்னே  விரிவது
சிறுவயது விளையாட்டும்,
அதன் இடையில் அடித்த
அரட்டையும்தான்...

உண்மைதான்,
மகிழ்ச்சி என்றால்
முதலில் வருவது விளையாட்டுதான்...

வகுப்பறையை விட
மைதானத்தை
அதிகம் காதலித்து இருக்கிறேன்

உண்மையில்
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில்
ஒரு கோல், ஒரு ரன்தானே!

உலகில்
எந்த வீரனுக்கும்
தெரியாதது
பந்து எந்தப்பக்கம்
திரும்பப் போகிறது என்று
அது
இன்றும் மர்மம்தான் !

வெற்றி பெற்றவரைவிட
தோல்வியடந்தவனிடம்தான்
ஆட்டோகிராப்
வாங்க  வேண்டும்
வெற்றி  பெருமைப்பட வைக்கிறது,
தோல்வி புரிய வைக்கிறது
விளையாட்டை.
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: சாக்ரடீஸ் on November 27, 2013, 09:58:40 PM
மட்டை பந்து விளையாட்டு
நம் வாழ்க்கைளில் ஒன்றிய விளையாட்டு
வாழ்க்கையிலோ  நம் கனவுகளை தேடி செல்வோம்
விளையாட்டிலோ நம் ஓட்டங்களை தேடி செல்வோம் 
விளையாட்டில் எப்படி ஒரு வீரனுக்கு
வெற்றி தோல்வி உண்டோ
அதே மாதிரி தான்
நம் வாழ்க்கைளில் வெற்றி தோல்வி உண்டு
இருபினும்
நம் வெற்றிய நோக்கி பயணிக்கிறோம்
விளையாட்டிலும் சேரி வாழ்க்கையிலும் சேரி
நம் செய்யும் தவறுகள்
ஒரு நடுவர் பர்துகொண்டுஇருபர்
உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சயம்
தோல்விய கண்டு துவளாமல்
வெற்றியை கண்டு மமதை கொள்ளாமல்
வாழ்வதே வீரனாகிய நம்   
ஒவோவோருவரின் தாரக மந்திரமாக
நினைத்தாலே தோல்வியையும் வெற்றியக முடியும் ..!!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: சிநேகிதன் on November 29, 2013, 06:22:54 PM
ஓட்டங்களை வைத்து வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும் ஒரு ஆட்டம்.
என்றும் உலகமெங்கும் இதற்கு
அளவில்லா ரசிகர் கூட்டம்.
இன்று இதனை தன் விருப்பத்திற்கு 
ஆட்டுவித்து மகிழ்கிறது சூதாட்டம்.

திறமைக்கு வழிவகுக்கும் ஆட்டம் .
இன்று பண முதலைகளின் வருமானதிற்காய்
வஞ்சிக்கப்படும் ஒரு கேலி கூத்தாட்டம்.

அந்நிய தேசத்து வீரர்களை ஏலம் எடுத்து
உள்நாட்டு வீரர்களின்
திறமையை வளர்க்கின்ற  போர்வை...
உண்மையில்  அணி உரிமையாளர்களின்
வருமானதிற்காய் சிந்தப்படும் வீரர்களின் வேர்வை.

இந்திய செல்வந்தர்கள் மற்றும்
இடை தரகர்களை தண்டிக்காது
ஒரு சில வீரர்களை காவு கொடுத்து...
பணத்தால் மற்றவர் கண்களை மறைக்கும்
பண முதலைகளின் வெறியாட்டம்.
ஐ பி எல் என அழைக்கப்படும்
நாடறிந்த ரகசிய  சூதாட்டம்.

இதிகாசத்தில் மனைவியை வைத்து
ஆட தொடங்கிய பாண்டவர்களின் அவலம்
இதை விட சூதிற்கு  உண்டோ ஒரு உதாரணம் ?

எல்லா வேதங்களும் எதிர்க்கும் சூதாட்டத்தை
இனம் மதம் பாராமல் அனைவரும் எதிர்ப்போம்.
தூய்மையான திறமைக்கானவிளையாட்டாய்
கிரிக்கெட்டை மாற்றி அமைப்போம்  !
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ராம் on December 08, 2013, 02:26:05 AM

மைதானம் நடுவில்
போட்டி போடும் சிலர்
கரையாய் அமர்ந்தும்
கடலாய் ஆர்பரித்தும்
ரசிக்கும் பலர்
இவர்கள்  நடுவில்
தனியாய் தன்னந்தனியாய்
சிக்கிக்கொன்டவன் நான்
பாவமாக 

என்னை கையில் சுமந்து 
திமு திமுவென
ஓடி வருபவன்
எதிர் அணி மீது
எறிகிறான் என்னை
அணுகுண்டாக

எதிர் அணி வீரன் .-
எனக்கு இனி எமன்
மட்டை கொண்டு
மடாரென என்
மண்டையிலே அடித்து
விரட்டுகிறான்  என்னை
பயங்கரமாக

வந்தவரை லாபம்
விட்டால் போதும்
என திரும்பி பார்க்காமல்
புற முதுகிட்டு
எல்லை கோட்டுக்கு
ஓடிய என்னை
வேறொருவன்
விடாமல் துரத்தி பிடித்து
மீண்டும் களத்திற்குள்
தூக்கி எறிந்து
துரோகம் செய்கிறான் 
அநியாயமாக

தொலைக்காட்சி தொடர்களில்
மாமியாரிடம் சிக்கிய
மருமகளை போல
இவர்களிடம் சிக்கி
நான் சின்னாபின்னமாய் ஆனாலும்
என் நேரம் வரும் போதெல்லாம்
இவர்கள் கை கால் மூக்கு வாய்
என்று எதையாவது
உடைத்துவிடுவேன்
உற்சாகமாக ..... :P