FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on January 04, 2014, 10:42:08 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 071
Post by: MysteRy on January 04, 2014, 10:42:08 PM
நிழல் படம் எண் : 071
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sowmiyaஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F071.jpg&hash=e997e93b74de350d8b83d7abe9db839ef1725cff)
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Maran on January 07, 2014, 03:48:39 PM
திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...

வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ !

வலு நொடித்தாலும்
தன்னம்பிக்கை தன் முதுகோடு
விதைத்த தைரியம்
மனதோடு,

வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர்கள் வாழ்வு,

என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனம் !!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Assassin on January 16, 2014, 10:59:14 PM
அன்பே உன் மழலை சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் ஆதரவை வேண்டுகிறாய் என்று
ஆண்டவன் படைப்பில் அனைத்தும் கிடைத்தவர் பலர்
ஆனால் உண்மையான பாசத்தை உணர்ந்தவர் சிலர்
உனக்கு ஆதரவாய் உன்மேல் இருக்கும் பாரங்களை
நான் என் முதுகில் சுமப்பேன்
இறுதி வரை கை விடாமல் ஒரு நல்ல சகோதரனாய்....
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: தமிழன் on January 17, 2014, 06:47:50 PM
தாயின் மடி
தந்தையின் மார்பு
சகோதரனின் முதுகு
இதற்கு இணையான சுகம்
எங்கும் உளதோ

தாயின் மடி தவழ்ந்து
தந்தையின்  மார்பில் தூங்கி
சகோதரனின் முதுகில்
உப்பு மூட்டையாய் தொங்கும் சுகம்
சுகமான சுமையல்லவா

சுமையல்ல இது
நத்தைக்கு ஓடு சுமையல்ல
கங்காருக்கு தன் குட்டி சுமையல்ல
வேருக்கு மரம் சுமையல்ல
செடிக்கு மலர் சுமையல்ல
என் தங்கை எனக்கு சுமையல்ல

என் தங்கையவள் பிஞ்சி கால்கள்
பூவை விட மென்மையான 
பஞ்சிக் கால்கள்
நிலத்தில் பட்டால்
சிவந்துவிடும் சின்னக் கால்கள்
நெஞ்சில் சுமக்கும் என் தங்கையை
முதுகில் சுமப்பது சுமையாகுமா 

சுமையொன்றும்  புதிதல்லவே எமக்கு
பள்ளிக்குடம் போகையில்
படிபென்ற பெயரில்
புத்தக மூட்டையை சுமந்து
சுமத்து சுமந்து
கூன் விழுந்த முதுகு இது
ஒரு பட்டாம்பூச்சியை சுமப்பது
பாரமாகுமா 
 
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: bharathan on January 25, 2014, 11:13:47 PM
I would like to keep as short as possible. Here it goes

அம்மாவின் தொப்புள் கொடி  இன்று
அண்ணாவின் முதுகு வழியாக !

அண்ணா என்ற உலகம்
எனக்கு இருக்கும் பொது
எனக்கு எதற்கு பூமி ?
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: MysteRy on January 28, 2014, 01:21:12 PM
தன் தங்கையினை தாங்கிடும்
நல் அண்ணன்களை குறித்த
காட்சியோ,காணொளியோ
காண்கையில்

இளம் வயதில் இழந்திட்ட
பாசமிகு அந்நாட்களை எண்ணிஎண்ணி
மனம்  சூழ்ந்திருக்கும்  உயர் சோகத்தின்
மீட்சியினையெ தேடி தவித்திடும் மனம்

பன்னாட்டின் பெரும்படிப்பின் மீதான
மோகத்தினால் சூழ்ந்திட்ட சோகத்தின்
மீட்சியையே தேடிடும் அனுதினம்

பன்னாட்டின் படிப்பின் மீதும்
பன்னாட்டின் பணிபுரியும் ஆசையினாலும்
பாசப்பினைப்பிர்க்குரிய அரும்பெரும்
நாட்களை இழந்திட வேண்டாம்
இளைஞர்களே  !

WritteN By My FrienD!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: NasRiYa on January 30, 2014, 11:54:30 AM
அன்பு தங்கையே பாசமான
என் பெற்றோரின் உறவுக்கு -பின்
என் -ரத்த பந்த சொந்தமாய்
என்  நிழலாய் எங்கள் இல்லத்தின்
மகராணி - என் கண்ணுக்கு
நிலவாய் உதித்த பூவே
அன்பு தங்கையே

அம்மா உன்னை  குளிபாட்டி
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் .
திருஸ்டி பொட்டு வைத்து  நம் இல்லம்
மகிழ்ந்தது -உன்னை நடை வண்டியில்
கைப்பிடித்து நடை பழக்கியபோதும்
உன்னை என் தோளில் சுமந்து  பள்ளிக்கு
அழைத்து செல்கையில் ஆனந்தப்பட்டேன்
அன்பு தங்கையே

அப்பா -காட்டிய அக்கறை காட்டிலும்
நான் பாசத்தை அதிகாரமாய் செலுத்தினேன்
நீ -வளர்ந்து ஆளாக போவதை நினைத்து
பொறுப்பான அண்ணனாக பாவாடை தாவணியில்
உன்னை தேவதையாக நீ உலா வரும் போது
பல்லக்கில் என் தோள்  கொடுத்து
வைத்த விழி எடுக்காது  கண்ணுக்கு கண்ணாய்
காத்து வருவேன் அன்பு தங்கையே ...

நாம் இருவரும் அன்பிற்கு ஆதாரமாய்
பாசத்தின் பகுத்தறிவாய் -ஆள் மணலில்
புதைந்த நீர் ஊற்று போல் அன்பெனும்
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே
என் உயிர் மூச்சு உள்ளவரை
என் தோள் கொடுப்பேன் என் தங்கையே..