FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on April 27, 2014, 07:13:19 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 074
Post by: MysteRy on April 27, 2014, 07:13:19 AM
நிழல் படம் எண் : 074
இந்த களத்தின்இந்த  நிழல் படம் thamilanஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F074.jpg&hash=28b3fbef621fd0c6e3f8dbdd63f5625c260da001)
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Maran on April 27, 2014, 11:07:09 AM


வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்,

அன்பின் மறுபெயர்,
சேவையின் முதல் பெயர்.

கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு

தேடிய கனவொன்றை
அன்பு சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.

கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள் நீ...

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை நான்...

Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: thamilan on April 27, 2014, 09:06:49 PM
கடவுளை கண்டவர் யார்
கடவுள் எங்கிருக்கிறார்
கேள்விக்குப் பதிலாக
தரை இறங்கி வந்த
தெய்வப் பிறவி நீயலவா

தன்னலமற்றது தாய்மை
தன் குழந்தை என்று வரும் போது
தாய்மையே
சுயநலமாகும் சாத்தியங்கள் உண்டு
உலகத்தில் உள்ள ஏழை குழந்தைகளை
தன் குழந்தையாக அமுதூட்டிய நீ
தாய்மைக்கும் மேலான தெய்வப் பிறவி அல்லவா

பசித்திருப்பவர்களுக்கு அமுதூட்டி
பிணித்திருப்பவர்களுக்கு மருந்தூட்டி
ஒரு தாயாக ஒரு செவிலியாக
உன் வாழ்க்கையே அர்ப்பணித்த நீ
ஒரு தெய்வத்தாய் அல்லவா

அதனால் தானே உலகமே உன்னை
அம்மா என்று அழைத்தது
இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் 

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாமாம் 
அந்த ஏழைகளை அமுதூட்டி அரவணைத்து
மனமகிழ்ந்து சிரிக்கவைப்பவர்களிடமும் 
இறைவனைக் காணலாம்
நீ இறைவனின் வாரிசல்லவா

நீ வாழ்ந்த காலத்தில்
நாங்களும் வாழ்ந்தோம்
இதுவே ஒரு பெரும் பேறு
 
ஊதுபத்தி கரைந்தாலும்
அதன் மனம் காற்றில் கலந்திருப்பது போல
நீ மறைந்தாலும்
என்றும் உன் பெயர்
உலகில் கலந்திருக்கும்
 
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Paul WalkeR on April 28, 2014, 09:38:21 PM
அன்னை
அவள் அன்பிற்காக
சொர்க்கமும் கூட தவமிருக்கும்

என்னை
நீ காண்பாய் என
உலகமும் உருகி கிடக்கும்

அவள் நெஞ்சில் குடியிருக்க
தெய்வமும்  காத்திருக்கும்

அன்னையின் அன்பே
உலகத்தின் ஆக்ஷிஜென்

அதை சுவாசித்து வாழும்
அனைவரும்  தேவதைகள்


ஒவ்வொரு அன்னையும் பெண்
ஒவ்வொரு பெண்ணும் அன்னை
இதை மனதில் கொண்டு
பெண்மையை போற்றுங்கள்


காலை பணியும்
குயிலின் இசையும்
மலரின் சிரிப்பும்
மழலை மொழியும்
இப்படி அனைத்தும் பெண்மையின் இனிமை


பெண்களை குறை கூறும் மடையனே
பெண் இல்லையேல்
உலகம் ஏது

அதிலும் இந்த கணினி யுகம் எப்படி பிழைக்கும்
முகபுத்தகம் அமிலம் ஊற்றிய முகமாகிவிடும்
வாட்சப்பும் வாடி விடும்


உலகம் உருளுவது பெண்ணாலே
எத்தனை வலிகள்
எத்தனை போராட்டங்கள்
மதி கெட்ட ஆண்கள் நடுவில்
தினம் தினம் வாழ்வதே போராட்டம்
அன்பை மட்டுமே வாழ்க்கையாக
வாழும் அன்னைகளையும் பெண்களையும்
வழிபடும் ஆணாய் இருக்க முயலுங்கள்


அந்த நாளுக்காக
(https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzO2PLY8RsVKhbr_eoPhNV0DWGpwfGbvrpz7-3iDkTbwvrizQJkEV0HUJb)
ஐ அம வெய்ட்டிங்
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: NasRiYa on April 30, 2014, 06:23:18 PM
உலகிற்கெல்லாம் ஒரே வானம் போல்
மனித உயிர் இனங்களுக்கு எல்லாம்
இறைவன் தந்த ஒரே அன்னை....
அன்னை தெரசா ....

வறுமையான  வாழ்வில் என்ன என்ன துன்பங்கள்
வயிறு நிறைக்க சோறில்லை,வருஷம் ஒன்றானால்
வயிற்றை நிரப்ப தவறியதில்லை- இருந்தும்,
வாட்டிவதைக்கும் வறுமையில் எத்தனைகஷ்டங்கள்
இருந்தாலும், குவாட்டர், இல்லாத நேரமில்லை,
பிள்ளைகளை படிக்க வைக்க பணமில்லை....

குடும்ப பாரத்தை சின்ன பிஞ்சுகளின் தலையில்
வைத்து, குப்பை பொறுக்க விட்டு,
பத்தும், இருபதுமாய் கொண்டுவரும் காசைக்கூட,
கொடுமை  தகப்பன், பிடுங்கிப்போய் குடிக்க, பாடுப்படும்
இதயம், இளம்பிஞ்சின் மனதும் - எத்துனை
துயர்கொள்ளும் !!!

அ னாவும், ஆ வன்னாவும் அறியாப் பிள்ளையாய்,
பெருக்கலும், கூட்டலும் கழித்திடத் தெரியா
மழலைகளாய் - கண்களில் கண்ணீர்
வயிற்றில் பசி - பாதையோரத்தில் அமர்ந்து
சீருடை அணிந்த மற்ற குழந்தைகளை
ஏக்கத்தோடு காணும் அவலம்.....

இவ்வுலகில் அள்ள,அள்ள குறையாத
அக்ஷயப்பாத்திரமாய்,அன்னையின்
அள்ளிக்கொடுக்கும் கைகள்
தருமனின் மறுப்பிறப்போ,
பாரியின் உயிர்ச்சேர்ப்போ!!!!!

Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: KaniyaN PooNKundranaN on May 12, 2014, 05:41:28 PM
இங்கே உதடுகள் பேசவில்லை

உள்ளங்கள் பேசுகின்றன பார்வையால்

மலர் கொத்தோடு மழலை ஏக்க பார்வை வீசுகிறது

காலம கனியாத கவலை மறையாத

ஒரு குண்டுமணி பருகி அளவாவது உணவு

தருவய என துன் தோழனை பார்க்கிறாள்