FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: குழலி on July 17, 2011, 10:37:35 AM
-
இரண்டு காதல் கவிஞர்கள் சந்தித்த வேளையிலே வார்த்தை வரவில்லை கவிதை தான் வருகிறதாம்
இவள்
நான் கவிதாயினி அல்ல
இருந்தும் கவிதை எழுதுவேன்
நீ பார்க்கும் போது
நான் வெட்கப்படுவதாக
இவன்
உன் வெட்கங்களை தானே
என் பக்கங்களில் எழுதினேன்
அது எப்படி கவிதையானது
இன்று புத்தகத்தையும் காதலிக்கிறேன்
இவள்
பதில்கள் தெரிந்தும் என்னிடம்
நீ கேட்கும் கேள்விகளுக்கு
நான் பதில்கள் தெரியாதது போல
நடிப்பது உனக்கும் தெரியும்
என்கிறது உனது அடுத்தகேள்விகள்
இவன்
உனக்காக ஒரு கவிதை எழுத
பலநூறு கவிதைகளை படித்தேன்
முடியவில்லை
உந்தன் விழியை பார்த்தபின்
என் காட்டில் கவிதை மழைதான்
இவள்
என் கவிதைகளுக்கு
உருவகம் தேடி
உருவம் தந்தேன்
வரைந்து முடித்து
வாசித்து பார்த்தால்
நீயென கண்டேன்
இவன்
உன்னிடமிருக்கும் புதுக்கவிதையைவிட
என்னிடமிருக்கும் கவிதை தான்
அழகு ஏனெனில் அந்த புதுக்கவிதையை
எழுதியது என் கவிதை நீ தானே
இவள்
உன் கவிதைகளால் என்னை
கட்டி கடத்திச் சென்று
அனுமதியின்றி அடைத்துவிட்டாய்
உன் இதயத்தில்
இவன்
உன்னை பெற்றதால் உன்
குடும்பமே ஒரு புலவர் கூட்டம்
எனக்கும் பிடிக்கும் கவிதைகள்
என்னையும் புலவனாக்கு
-
ithellam rommmmmmmmmpa overpaaa... ;) ;D ;D ;D