FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 26, 2011, 06:33:46 PM

Title: இதுமாதிரி ஒரு செய்தியை நீங்க கேள்விப்பட்டிருக்கவே மாட்டீங்க ஐயா
Post by: Global Angel on December 26, 2011, 06:33:46 PM
இதுமாதிரி ஒரு செய்தியை நீங்க கேள்விப்பட்டிருக்கவே மாட்டீங்க ஐயா

 
லண்டனில் ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கொல்லப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் பெரும் கலவரம் மூண்டது யாவரும் அறிந்ததே. இதனை சாட்டாகப் பயன்படுத்தி பல கொள்ளைச் சம்பவங்களும் நடந்தது. இதில் சிக்கிக் கொண்டவர் ஒருவர் கதை தான் இது. சரி வாருங்கள் மாட்டருக்குப் போகலாம்.  லண்டன் குரொய்டன் பகுதியில் (லண்டன் ரோட்டில்) அமைந்துள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார். அவர் 18 கரட் தங்கத்தை 22 கரட் தங்கம் எனச் சொல்லி
பலருக்கு விற்பனைசெய்து வந்துள்ளார். இதனை அவரும் அவரது மனைவியும் நேற்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ் நகைக் கடை என்ற படியால் தமிழர்களால் தான் இக் களவு கண்டுபிடிக்கப்பட்டது என நீங்கள் நினைக்கவேண்டாம். இல்லை நகையை வாங்கிய தமிழர் ஒருவர் இதனைக் கண்டுபிடித்து பொலிசாரிடம் சொல்லியதாக நிகைக்கவேண்டாம். இங்கே கதை வேறுமாதிரிப் போகுது தெரியுமா ?
அதாவது கலவரம் மூண்ட காலப்பகுதியிலும் அதற்கு முன்னைய காலப்பகுதியிலும் குறிப்பிட்ட நகைக்கடை உரிமையாளர் 18 கரட் தங்கத்தை 22 கரட் என்று சொல்லி விற்றுவந்துள்ளார். தமிழர்கள் நகைகளை வாங்கி விட்டு அதனை அடைவு வைப்பது மிக மிக அரிதாகிவிட்டது. அதனால் அதனை தமிழர்கள் கண்டு பிடிக்கவில்லை. கலவரம் நடந்த வேளை ஆபிரிக்க நாட்டவர்கள் குறிப்பிட்ட இக்கடையை உடைத்து உள்ளே இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்த அவர்கள் தாம் கொள்ளையடித்த நகைகள் பெரும் பெறுமதி மிக்கவை எனவும் அவை 24 அல்லது 22 கரட் தங்கம் எனவும் நினைத்துள்ளனர்.

தற்சமய அந்த நகைகளை அவர்கள் விற்க்கச் சென்றுள்ளனர். ஆனால் நகைகளை வாங்க முற்பட்ட பொற்கொல்லர் ஒருவர் அவை 18 கரட் நகைகள் எனக் கூறியுள்ளார். இதனை ஆபிரிக்க நாட்டவர்கள் நம்பவில்லையாம். இதனால் அவர்கள் அதனை பிறிதொரு இடத்துக்கு விற்க எடுத்துச் சென்றுள்ளனர். அங்கும் அதே பிரச்சனை தான். இதனால் பல இடங்களுக்குச் சென்று பிரச்சனையை மேலும் கூட்டியுள்ளனர். இறுதியில் பொலிசாரிடமும் மாட்டிக் கொண்டனர் அவர்களில் சிலர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் தான் இந்த நகைக்கடைக்காரர் மாட்டிக் கொண்டுள்ளார் என குரொய்டனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன