FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on August 16, 2015, 06:35:26 PM

Title: தேன்
Post by: SweeTie on August 16, 2015, 06:35:26 PM
ஒருகணம்  யோசித்தேன்
உன்னை  சந்தித்தேன்
நீண்ட நாள்  சிந்தித்தேன்
அடிக்கடி  என்னுள்  ரசித்தேன்
நாணத்தால் வெட்கித்தேன்
மனம்  பூரித்தேன்
காதல் சொல்ல  நினைத்தேன்
உன்னை  அண்மித்தேன்
உன் கண்ணில்  என்னைப்  பார்த்தேன்
மெய்  சிலிர்த்தேன்
சொல் இழந்தேன்
என்னை  மறந்தேன்
சுபம்....சுபம்..
Title: Re: தேன்
Post by: Dong லீ on August 17, 2015, 06:29:18 PM
அருமை அருமை .தொடர்ந்து எழுதுங்கள் ஸ்வீடி .ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் உங்கள் கவிதைகளை
Title: Re: தேன்
Post by: JoKe GuY on August 17, 2015, 10:42:59 PM
தேனருவியாக கவிதை இருக்கிறது.வளரட்டும் உங்களின் அழகு கவிதைகள்