FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on August 16, 2015, 07:35:00 AM

Title: அன்னை சிரித்தாள்
Post by: SweeTie on August 16, 2015, 07:35:00 AM
அடர்ந்த  காடு
அசையா  மரம்கள்
ஓடும் அருவி
சில்லென்ற காற்று
ஒரு ஜோடி கிளிகள்
பின்னிப் பிணைந்து
இன்புற்ற வேளை
கொடிய விலங்கு
ஒளிந்து மறைந்து
பின்புறம் விரைந்து
சங்காரம் செய்ய
இயற்கை அன்னை
பார்த்து சிரித்தாள் 
Title: Re: அன்னை சிரித்தாள்
Post by: JoKe GuY on August 17, 2015, 10:36:52 PM
இயற்கையும் காதலையும் இணைத்து எழுதிய விதம் மிக அருமை வளரட்டும் உங்களின் கவிதைகள்