FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: RemO on December 26, 2011, 04:52:28 PM

Title: நான் ரசித்தவை - கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Post by: RemO on December 26, 2011, 04:52:28 PM

கறுப்பு பணம்.. கறுப்பு பணம்..,
கறுப்பு பணம்..! இப்பல்லாம்
எங்கே திரும்பினாலும் இதே
பேச்சா இருக்கு..!

பாபா ராம்தேவ் ரெண்டு நாளா
உண்ணாவிரதம் இருக்கறாரு..

கேட்டா.. சுவிஸ் Bank-ல இருக்குற
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வரணும்னு சொல்றாரு..

அட இதாவது டெல்லி மேட்டர்.
பரவால்ல...

நேத்து எங்க ஊர் டீ கடையில
ஒரு டீ குடிச்சிட்டு 10 ரூபா குடுத்தா..

அந்த கடைக்காரன் ( கடன்காரன் பாவி )

" சார்.. இது கறுப்பு பணமா சார்..? "

" டேய்... என்னடா சொல்ற..?! "

" இல்ல சார்.. நோட்டெல்லாம்
ஒரே மையா இருக்கே.. அதான்
கேட்டேன்னு " சொல்றான்..!

( அடப்பாவி..! இவ்ளோ நாளும்
இதை தான் கறுப்பு பணம்னு
நினைச்சிட்டு இருந்தியா..?! )

சரி.. மேட்டர்க்கு வருவோம்..

இந்தியர்களோட கறுப்பு பணம்
சுவிஸ் Bank-ல எவ்ளோ இருக்கு
தெரியுமா..?

அதிகமில்ல ஜென்டில்மேன்..
Just $ 1.456 Trillion தான்..

( பத்திரமா இருக்கட்டுமேன்னு
அங்கிட்டு போட்டு வெச்சிருந்தா..,
அதை போயி... தப்பா பேசிகிட்டு.. )

1.456 Trillion-ஐ நான் இந்திய ரூபால
Convert பண்ணறதுக்காக Calculator-ல
தட்டி பார்த்தேனா... முடியல..

655-க்கு அப்புறம் நிறைய, நிறைய
சைபர்கள் வந்தது.. எனக்கு வேற
3 லட்சத்துக்கு மேல எண்ண தெரியாதா..
( ஹி., ஹி..! )

அதனால யூசுப்க்கு ஒரு போன்
போட்டு கேட்டேன்.. அவர் அவரு 2வது பேரனை
கேட்டு 65.5 லட்சம் கோடின்னு வருதுன்னு
கரெக்டா சொல்லிட்டாரு..!

( சுத்தம்.. அங்கேயும் அதான் லட்சணமா.?! )

அப்புறம் இன்னொரு சந்தோஷமான
விஷயம்.. அதிகமா கறுப்பு பணம்
வெச்சிருக்குற லிஸ்ட்ல
இந்தியாவுக்கு தான் 1st Place..

India---- $ 1.456 Trillion ( 65.5 லட்சம் கோடிகள் )
Russia--- $ 0.47 Trillion ( 21 லட்சம் கோடிகள் )
UK----- $ 0.39 Trillion ( 17.55 லட்சம் கோடிகள் )
Ukraine- $ 0.10 Trillion ( 4.5 லட்சம் கோடிகள் )
China--- $ 0.09 Trillion ( 4.05 லட்சம் கோடிகள் )

( நல்லா கவனிங்க.. அந்த பிச்சைக்கார
அமெரிக்கா பசங்க Top 5 -ல இல்லவே இல்ல )

நடு டிஸ்கி : இந்தியாவின் வெளிநாட்டு கடன்
5.03 லட்சம் கோடி ( $ 0.112 Trillion ).

கறுப்பு பணம் எவ்ளோ இருக்கு.,
எங்கே இருக்குன்னு எல்லோருக்கும்
தெரியுது.. ஆனா அதை இந்தியாவுக்கு
கொண்டு வர ஒருத்தர்க்கும் வழி தெரியலை..

ம்ம்..! இதுக்கெல்லாம் என்னை மாதிரி
ஒரு ஜீனியஸ்கிட்ட ஐடியா கேக்கணும்ல..!!

Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..

" ஏரோப்பிளேன் தான்..! "

நோ., நோ.. யாரும் அழக்கூடாது..!
( ஆனந்த கண்ணீர்..!! )

இதெல்லாம் நம்ம கடமைப்பா..!

டிஸ்கி : என்னடா இது.. Finishing-ல
காமெடி பண்ணிட்டானேன்னு
நினைக்காதீங்க...

Swiss Bank-ல கறுப்பு பணம்
வெச்சிருக்கிறவங்கிட்டயே போயி..

" கறுப்பு பணத்தை இங்கே கொண்டு வர
சட்டம் போடு "ன்னு சொல்றதை விடவா
இது காமெடி..?!!.
Title: Re: நான் ரசித்தவை - கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Post by: gab on December 28, 2011, 04:27:00 AM
Ad pavigala indiaku ayal naatula irukira kadanai vida 13 madangu karuppu panama iruka?. sari ellarum karuppu panathula 10 % govt.ku katitu micham 90% vellai panama aakika govt.accept pannina pothum indiavoda kadanum adainjidum karuppu pananum veliya vanthu vellai agidum epadi namma idea ?hehehehe nalla thagaval remo 
Title: Re: நான் ரசித்தவை - கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Post by: RemO on December 28, 2011, 05:53:11 AM
Nethu sivaji padatha Thirutu VCD la parthiya mams :D
Karuppu panam veliya vara porathila elam pagal kanavu than
 
Title: Re: நான் ரசித்தவை - கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Post by: KungfuMaster on January 05, 2012, 08:18:52 PM
but onnu matum nichayama theriyuthu ethana varusham analum antha panam muzhusa indiaku vara porathu illa... evano thinga poran..
Title: Re: நான் ரசித்தவை - கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Post by: RemO on January 05, 2012, 08:24:25 PM
Evono ila mams athu naai kaila matina thengaai mari than
athuvum thingathu mathavangalukum kodukathu :D