FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 07, 2015, 07:26:33 PM

Title: ~ முதுமையை அதிக சிரமமின்றி கழித்திட..! ~
Post by: MysteRy on August 07, 2015, 07:26:33 PM
முதுமையை அதிக சிரமமின்றி கழித்திட..!

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11825071_1481473402150130_8848862832141119424_n.jpg?oh=1f28576e3a69fb4b1068be413c96cae0&oe=564759AE&__gda__=1447773903_a53a67fb7346881bbc9d7071da547738)

முதுமை என்பது படிப்படியாக நிகழக்கூடியது. இதனை 3 விதமாகச் சொல்லலாம்.

1. சாதாரண முதுமை.
2. வழக்கமான முதுமை.
3. வெற்றிகரமான முதுமை.

சாதாரண முதுமை :

இது தவிர்க்க முடியாதது. வயதாவதன் காரணமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எதிர்கொள்ள வேண்டிய பொதுவான உடல் மாறுபாடுகளை இது குறிக்கின்றது. மரபு ரீதியாகவே இத்தகைய மாறுபாடுகள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.

வழக்கமான முதுமை :

பரம்பரை, சுற்றுச்சுழல் மற்றும் தனி நபர் நடத்தை ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு நோய்களை எதிர்கொள்ளுவதைக் குறிக்கின்றது.

வெற்றிகரமான முதுமை :

ஒருவரின் நடத்தையில், பழக்க வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதைக் குறிக்கின்றது.

சரி.முதுமை தவிர்க்கப்பட முடியாத ஒன்று தான். ஆனால் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் அதனுடன் வரும் நோய்களிலிருந்து எப்படி தப்பிப்பது?

வயதான காலத்தில் ஒரு மனிதனின் உடலில் தோன்றும் மாற்றங்களும், நோய்களும் முதுமையால் மட்டுமல்ல, அவன் சிறு வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் தான் வருகின்றன. கவனமாக இல்லாமல் தான் இந்த நோய்களை பெற்றுவிட்டேன் என்று கவலைப்படுகிறீர்களா. இப்போதும் ஒன்றும் முடிந்து விடவில்லை. கீழ்வருவனவற்றை சரி வர கடைப்பிடித்தால் நோய்களிடமிருந்து குணமடையலாம். மீண்டும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

எண்ணெய்க் குளியல் :

பாரம்பரியமாக வாரம் 2 நாட்கள் எண்ணெய்க் குளியல் செய்து வந்ததை மறந்ததினால் தான் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம். எண்ணெய்க் குளியலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிற்காகத் தான் கோயில்கள் தோறும் இறைவனுக்கு எண்ணெய்க் காப்பு செய்கின்றனர். எண்ணெய்க் குளியலினால் சளி தொந்தரவு, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, மூலம், பவுத்திரம், கண் நோய்கள் மற்றும் காது நோய்கள் ஆகியன தீரும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதன் பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

கழிச்சல் :

வயதான நிலையில் உடலில் வாயுவின் சேர்க்கை அதிகரிக்கிறது. இந்த வாயுக்கள் பல்வேறு விதமான வாத நோய்கள், மூட்டு வலி, மலச்சிக்கல், வயிற்று வலி முதலிய நோய்களை உண்டு பண்ணுகின்றன. இவ்வாறு சேர்ந்த வாயுக்களை கிரமமான கழிச்சல் மூலம் போக்கிவிடலாம்.

காய கல்பம் :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய்கள் வராமல் தடுத்து உடலை கல் போல காக்க பல்வேறு காய கல்பம் சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் எளிதான காய கல்ப முறையாக
காலையில் – இஞ்சித் தேநீர்.
நடுப்பகலில் - சுக்குக் காப்பி.
இரவு - கடுக்காய்க் காப்பி.
தினமும் உண்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் அண்டாது.

எளிய தியானப் பயிற்சி :

மனமது செம்மையால் மந்திரம் செபிக்க வேண்டாம் – அகத்தியர்
தியானம் செய்து மனதை ஒருமைப்படுத்தி விட்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

1. நல்ல காற்றோட்டமுள்ள,வெளிச்சமான, அமைதியான இடத்தில் சிறிய விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.
2. இரண்டு கைகளையும் மார்புக்கு முன்பாக உயர்த்தி 1 சாண் இடைவெளி விட்டு வைத்துக் கொள்ளுங்கள.
3. பின்பு கண்களை மூடி உங்களுடைய இஷ்ட தெய்வம் அந்த இடைவெளியில் இருப்பதாக நினைத்து தியானம் செய்யுங்கள்.
இந்த எளிய தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனளிக்கும்.

எளிய யோகாசனப் பயிற்சி :

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர்.
உடம்பை நல்ல நிலையில் பேணி வந்தால் எந்த நோயும் வராது. அதற்கு யோகாசனம் வழிவகுக்கும். கீழ்க்கண்ட சில எளிய யோகாசனங்களை செய்து வர சிறந்த பலனளிக்கும்.
1. பத்மாசனம். 2. பத்திராசனம். 3. சவாசனம். 4. திரிகோணாசனம்.

உணவு முறை :

வயதானவர்களுக்கென தனி உணவு முறை என்று ஏதும் இல்லை. இது நாள் வரை சாப்பிட்டு வந்ததையே சாப்பிடலாம். ஆனால் ஊட்டச்சத்து நிரம்பியதாக இருக்க வேண்டும்