FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 05, 2015, 09:27:45 PM

Title: ~ பூண்டு இறால் குழம்பு ~
Post by: MysteRy on August 05, 2015, 09:27:45 PM
பூண்டு இறால் குழம்பு

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11836862_1479565882340882_2207998500028871714_n.jpg?oh=04e630c68741d2e9ed221c1cfdd9723c&oe=56425BAF)

தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 4 (நறுக்கியது) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும். இறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி!!!