FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 05, 2015, 08:53:10 PM

Title: ~ பனீர் வெஜ் மின்ட் கறி ~
Post by: MysteRy on August 05, 2015, 08:53:10 PM
பனீர் வெஜ் மின்ட் கறி

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11811336_1480497205581083_1743209536908691655_n.jpg?oh=b909b5990b5c5ba22a3b59eb69c48f59&oe=5649C585&__gda__=1448319930_fd441b0840ef9a4e28278c920399eb1f)

தேவையான பொருட்கள்:

பட்டாணி – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பனீர் – 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா – ஒரு கட்டு
கொத்து மல்லி – அரை கட்டு
கருவேப்பிலை – கால் கட்டு
பச்ச மிளகாய் – நான்கு
இஞ்சி – ஒரு லெமென் சைஸ்
பூண்டு – 5 பல்
வெங்காயம் – முன்று
தக்காளி – நன்கு
எண்ணை – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – தேவையான அளவு
சீரகம் – சிறிதளவு

செய்முறை

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.