பசும்பாலுக்கு மாற்றாக, சில வகைப் பால்கள் அவற்றை எப்படித் தயாரிப்பது என்பதே ஊட்டம் தரும் வீகன் டயட்!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F08%2Fzjexod%2Fimages%2Fp48a.jpg&hash=3e7c67bbe5077298833e6fa2c713d7601af5f17d)
பசு, தன் கன்றுக்குக் கொடுக்க தன் ரத்தத்தில் இருந்து உற்பத்திசெய்யும் பாலைத்தான் நாம் குடிக்கிறோம். பசும்பாலில் கன்றின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக் குடித்து வளரும் கன்று, சில நாட்களிலேயே விறுவிறுவென வேகமாக வளரும். சில குழந்தைகளுக்கு பசும்பாலைச் செரிக்கும் திறன் உண்டு. குழந்தைப் பருவத்தை தாண்டியவுடன், பாலை எளிதில் செரிப்பதற்கான என்சைம்கள் குறைந்துவிடுகிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள கொலஸ்டிரால் காரணமாக உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அளவுக்கு அதிகமாகப் பால் குடிக்கும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கப் பசும்பாலுக்கு மாற்றாக, சில வகைப் பால்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றை எப்படித் தயாரிப்பது என்பதை வீகன் உணவியல் நிபுணர் சரவணன் விவரிக்க, அதை ப்ரீத்தி செய்துகாட்டியிருக்கிறார்.