FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 03, 2015, 11:35:51 PM

Title: ~ மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் கேழ்வரகு ~
Post by: MysteRy on August 03, 2015, 11:35:51 PM
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் கேழ்வரகு

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11800624_1479561262341344_4571751401202624026_n.jpg?oh=3b749bd27d7605584bac3b8e80f997dc&oe=563E6DC9)

இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் வலுப்பெறும்.

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினமும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்.

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக செய்து சாப்பிடலாம். இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும், உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

கேழ்வரகு கூழ்

முதல் நாளே ஒன்றரை ஆழாக்கு மாவுடன் நாலரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

அரை ஆழாக்கு அரிசி நெய்யுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பாதி வெந்ததும் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறவும்.

மாவு வெந்து பளபளவென்று வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை கடைந்த தயிர், அரிந்த வெங்காயம் இரண்டையும் கலந்து சாப்பிடவும்.