FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 03, 2015, 04:46:45 PM

Title: ~ மாமிசம் உண்ணும் தாவரம் ~
Post by: MysteRy on August 03, 2015, 04:46:45 PM
மாமிசம் உண்ணும் தாவரம்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11800201_1479254215705382_5803678304484382596_n.jpg?oh=eaad33aba75abdb2159888ef6e09843f&oe=56478E7F)

எலி, தவளை உள்ளிட்ட சிறு பிராணிகளை, தனக்குள் இழுத்து சாகடிக்கும் வல்லமை கொண்ட தாவரம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாவரம் உண்ணும் விலங்குகளே நாம் அறிந்த, பார்த்த ஒன்றாகும். ஆனால் மாமிசம் உண்ணும் தாவரம் என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்.

தாவர இயல் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் குழு ஒன்று, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இந்தச் செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி, தவளை போன்ற சிறு பிராணிகளை, கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதைக் கண்ட விஞ்ஞானிகள் இதை பல காலம் ஆய்வு செய்து, உறுதிபடுத்தியுள்ளனர்.

விக்டோரியா மலைப் பகுதியில் வசித்து வந்த சிலரிடம் இருந்து, விஞ்ஞானிகள் குழு இந்த தாவரத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் தலைமையில் ஒரு குழு இந்த தாவரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர்.

மெக்பெர்சன், கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகத்தில் தாவர இயல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 2007-ம் ஆண்டில், மாமிசம் உண்ணும் தாவரம் பற்றிய ஆய்வை இவர் மேற்கொண்டார். அந்தத் தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டறிந்த பின்னர், அவர் இதனை உலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

'இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும் தண்மை கொண்டது. விக்டோரியா மலைச் சரிவுகளில், பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இவ்வகை தாவரங்கள் வளர்கின்றன. இந்த செடியின் இலைகள் தான், வாய் போல் செயல்படுகிறது. அதன் மேல் அமரும் எலி, தவளை போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது.

இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான எண்ணெய் பசைகளில் இருந்து, சிறு பிராணிகளால் தப்ப முடிவதில்லை. இதனால் அந்த எண்ணெய் பசைகளுக்குள் மூழ்கி, சிறு பிராணிகள் அனைத்தும் இறந்து போகின்றன.

இறந்து போகும் எலி, தவளை போன்றவற்றை அந்த தாவரத்திற்கே உரமாக மாறுகின்றன. இதனால் இந்த தாவரத்தை 'மாமிசம் உண்ணும் தாவரம்' என்று மலைவாசிகள் குறிப்பிடுகின்றனர். எலி, தவளை மட்டுமல்லாமல் பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும்.

தாவரவியலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு, மிக மிக முக்கியமானது. 21-ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான்.

இயற்கை உலகின் அதிசயம். இயற்கை அழகை பற்றி மக்கள் அறிந்து கொள்ள, மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. அதன் காரணமாக அவரது பெயரிலேயே இந்தத் தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி இந்தத் தாவரம் 'நேபன்தஸ் அட்டன்பரோகி' என்று அழைக்கப்படும்' என்று மெக்பெர்சன் தெரிவித்துள்ளார்.