FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 02, 2015, 04:38:50 PM
-
இடியப்பம்
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11817287_1478675652429905_3441749767122426977_n.jpg?oh=ca7c81e9a5510200417e0c3c76a21d9d&oe=563FB0AB&__gda__=1448398484_710cdc3c12b560027b0a15c2320fe2e7)
தேவையான பொருள்கள்:
அரிசிமாவு – 11/2கப்
அவித்த கோதுமைமாவு – 1/2கப்
உப்பு – 1டீஸ்பூன்(தேவையான அளவு)
சுடு தண்ணீர் – 2கப்
செய்முறை
அரிசிமாவு, அவித்த கோதுமைமாவு, உப்பு ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
அதனுள் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிண்டவும்.
பின்னர் குழைத்த மாவினை இடியப்ப அச்சில் போட்டு இடியப்பத் தட்டில் இடியப்பங்களை பிழியவும்.
பின்னர் அவற்றை இட்லி பானைஇல்அடுக்கி அவித்தெடுக்கவும்.
சுவையான, “இடியப்பம் ரெடி.
டிப்ஸ்:
தண்ணீரை நன்கு பொங்க பொங்க கொதிக்கவிட்டு ஒரு கோப்பையில் ஊற்றி வைத்து சிறிது ஆவி அடங்கியதும் மாவில் ஊற்றி குழைக்கவும். இப்படி செய்தால் இடியப்பங்கள் மென்மையாக வரும்.