FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 31, 2015, 09:46:23 AM
-
பெரிய சாதனைகள் புரிவதெல்லாம்
சின்னஞ்சிறு நம்பிக்கைகளே
பெரிய வெற்றிகள் கொள்வதெல்லாம்
சின்னஞ்சிறு முயற்சிகளே
பெரிய விருட்சமாய் வளர்வதெல்லாம்
சின்னஞ்சிறு விதைகளே
பெரிய வெள்ளமாய் உருமாருவதெல்லாம்
சின்னஞ்சிறு மழைத்துளிகளே
பெரிய சண்டைகளை தீர்பதெல்லாம்
சின்னஞ்சிறு சமாதனங்களே
பெரிய கவிதைகளை கொடுப்பதெல்லாம்
சின்னஞ்சிறு கிறுக்கல்களே
-
உண்மைதான் நண்பா!.. தன்னம்பிக்கை தரக்கூடிய அழகான வரிகள், கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல பதிவு சிறிதென்றாலும் அதில் அடங்கியுள்ள விடயம் மிக பெரிது.