FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 31, 2015, 09:30:32 AM

Title: பராசக்தியிடம் நான் கேட்பவை
Post by: thamilan on July 31, 2015, 09:30:32 AM
அச்சங்கள் தெளிய  வேண்டும்
அறியாமை அகல வேண்டும்
ஆணவம் அழிய வேண்டும்
அமைதி எங்கும் நிலவிட வேண்டும்
ஏற்றங்கள் எதிலும் வேண்டும்
மாற்றங்கள் மனிதரில் வேண்டும்
சிந்தனைகளில் இளமை வேண்டும்
அறிவுதனில் முதிர்ச்சி வேண்டும்
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஆலைகள் வேண்டும்
நெஞ்சோடு நியாயங்கள் வாழவேண்டும்
சாகும் வரை தேயாத இளமை வேண்டும்
சீரியல்கள் இல்லாத சேனல்கள் வேண்டும்
சிரிப்பதற்கு கொஞ்சம் நேரமும் வேண்டும்
ஆறுதல் சொல்கின்ற சொந்தங்கள் வேண்டும்
அறிவுரை சொல்கின்ற நட்புகள் வேண்டும்